Blog

Enquire Now
Uncategorized

உடல் பருமன் என்பது ஒருவருடைய கருத்தரிக்கும் வாய்ப்புகளை குறைக்குமா?

உடல் பருமன் என்பது ஒருவருடைய கருத்தரிக்கும் வாய்ப்புகளை குறைக்குமா?

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாயிருங்கள், மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளை செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மறக்காதீர்கள். உடல் பருமன் என்பது கருத்தரித்தலுக்கான வாய்ப்புகளை குறைக்கிறது. ஆம், கருத்தரித்தல் என்று வரும்போது உடல் பருமன் என்பது முக்கியமான விஷயமாக உள்ளது. உங்களுடைய BMI (உடல் எடைச் சுட்டெண்) 30 kg/m2 மற்றும் அதற்கு மேல் இருந்தால், நீங்கள் பருமனாக இருப்பதாகக் கூறப்படுகிறது. BMI என்பது உடல் உயரத்தினையும், எடையையும் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது மற்றும் ஒருவருடைய எடை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. உடல் பருமன் என்பது தம்பதியரின் இனப்பெருக்க சாத்தியக்கூறுகளை பாதித்து கருவுறாமையை ஏற்படுத்தலாம் மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், புற்றுநோய், மூட்டுவலி, போன்ற பல்வேறு வகையான உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம், ஆனால் பீதியடையாதீர்கள்! எடை குறைப்பு செய்தால் அது நீங்கள் கருவுறுவதற்கு உதவிபுரியலாம். ஆண் மற்றும் பெண்களில் உடல் கொழுப்பு என்பது எவ்வாறு கருவுறாமையை ஏற்படுத்தும் என்பதை நாம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

உடல் பருமனும் பெண் கருவுறாமையும்:

உடல் பருமன் என்பது பெண்களில் அண்டவிடுப்பு கோளாறுகளை ஏற்படுத்துகிறது மற்றும் உடல் பருமன் உள்ள பெண்களுக்கு கருவுறுதலுக்கு அதிக நாட்களாகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகப்படியான கொழுப்பு பெண்களில் ஹார்மோன் சமநிலையை பாதிக்கிறது, இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி மற்றும் முட்டை வெளியீடு தடைபாட்டை உருவாக்கி, கருவுறாமைக்கு வழிவகுக்கலாம். உடல் பருமன் என்பது கருச்சிதைவுக்கான வாய்ப்பை அதிகரிக்கலாம் மற்றும் செயற்கை இனப்பெருக்க தொழில்நுட்பத்தின் விளைவுகளைகூட பாதிக்கலாம்.

கருவுற்றிருக்கும்போது உடல் பருமனால் ஏற்படும் விளைவு:

சரியான உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி, உங்கள் பெற்றோர் கனவை அடைய உங்களுக்கு உதவலாம். இதனை மறக்காதீர்கள்!

கருவுற்றிருக்கும்போது, பின்வருவன போன்ற சிக்கல்களை உடல் பருமன் ஏற்படுத்தலாம்:

  • குறைப்பிரசவம்
  • சிசேரியன் டெலிவரிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது
  • பெரு எடைக்குழந்தை (பெரிய கரு)
  • பிறப்பு குறைபாடுகள்
  • குழந்தை இறந்து பிறத்தல்

உடல் பருமன் மற்றும் ஆண் கருவுறாமை:

ஆண்களில் ஏற்படும் எடை அதிகரிப்பானது, குறைந்த டெஸ்டோஸ்டெரோன் அளவு, மோசமான விந்தணு தரம், மற்றும் சாதாரண எடை கொண்ட ஆண்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த கருவுறுதல் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. ஒரு ஆணின் ஒவ்வொரு 9 kg (20 பவுண்டுகள்) அதிக எடைக்கும் (NCBI) கருவுறாமைக்கான முரண்பாடுகள் 10% அதிகரிக்கிறது.

உடல் பருமன் என்பது பாலியல் செயலிழப்புக்கு வழிவகுக்கலாம் மற்றும் விந்தணு எண்ணிக்கை, இயக்கம் மற்றும் உருவவியல் ஆகியவற்றையும் பாதிக்கலாம்.

உடல் பருமனுக்கான சிகிச்சை:

ஒருவரின் எடையில் செய்யப்படும் 5 – 10% எடைகுறைப்பு என்பது அதிக அளவில் கருவுறுதலை மேம்படுத்தும். சீரான உணவை பின்பற்றுதல், ஜங்க் புட்-ஐ தவிர்த்தல், மற்றும் முறையான உடற்பயிற்சியில் ஈடுபடுதல் ஆகியவை, எடைகுறைப்புக்கு பெருமளவில் உதவும். எடை கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் ஓவுலேஷன் பிரச்சினைகள் தீர்க்கப்படலாம் மற்றும் விந்தணு தரமும் மேம்படுகிறது, இதன் மூலம் கருவுறுதலுக்கான வாய்ப்புகள் மேம்படுகிறது. IVF/ICSI போன்ற மேம்பட்ட கருவுறுதல் சிகிச்சைகளும், அண்டவிடுப்பு அல்லது விந்தணு பிரச்சினைகள் உள்ள மக்களுக்கு உதவலாம். கருவுறுதல் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், எடை மேலாண்மை என்பது வெற்றிக்கு முக்கியமான ஒன்றாகும்.

சரியான உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி, உங்கள் பெற்றோர் கனவை அடைய உங்களுக்கு உதவலாம். இதனை மறக்காதீர்கள்!

[/vc_column_text][/vc_column][/vc_row]

Write a Comment