Blog

Enquire Now
Uncategorized

IVF சிகிச்சையில் செய்ய வேண்டியவையும், செய்யக்கூடாதவையும்

IVF சிகிச்சையில் செய்ய வேண்டியவையும், செய்யக்கூடாதவையும்

வாழ்க்கைமுறை மாற்றங்கள், சுற்றுச்சூழல் காரணிகள், மன அழுத்தம், PCOS, புகைபிடித்தல், தூக்கமின்மை மற்றும் வேறு பல காரணிகளால், இன்றைய காலக்கட்டத்தில் மலட்டுத்தன்மை என்பது மிகவும் பொதுவாக காணப்படுகிறது. மரபியல் நிலைமைகள் மலட்டுத்தன்மைக்கு காரணமாக இருக்கலாம். IVF, ஒரு தம்பதியர் மலட்டுத்தன்மையை வெற்றிகொள்வதற்கும், அவர்கள் பெற்றோராவதற்கும் உதவும்.

IVF-ன் செயல்முறை என்ன?

IVF-இல், சிகிச்சைக்குப் பிறகு ஒரு பெண்ணிடமிருந்து முட்டைகள் மீட்டெடுக்கப்பட்டு, அவரது கணவரின் விந்தணுக்களுடன் கருவுறச்செய்யப்பட்டு, அதன் விளைவாக கருக்கள் உருவாகின்றன. அதன் பின்னர் அந்த கருக்கள் மேற்கொண்டு வளர்வதற்காக, கருப்பைக்கு மாற்றப்படுகின்றன.

எப்போது IVF செய்யப்படுகிறது?

கருமுட்டைக்குழாயில் அடைப்பு ஏற்படுதல், அசாதாரண விந்து அளவுருக்கள் அல்லது விந்தணு செயல்பாட்டு மதிப்பீடுகள், விளக்கப்படாத மலட்டுத்தன்மை அல்லது OI-TI, IUI போன்ற ஆரம்பகட்ட சிகிச்சைகள் தோல்வியடைதல் போன்ற நேர்வுகளில் IVF பரிந்துரைக்கப்படுகிறது. IVF கர்ப்பத்திற்கு முடிவெடுத்தல் என்பது, மருத்துவநிலை, வயது, மலட்டுத்தன்மையின் கால அளவு போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்ததாகும்.

IVF – சிகிச்சையின் போது செய்யவேண்டியவைகளின் பட்டியல்

  • சரியான கருவுறல் சிகிச்சையகத்தை தேர்வு செய்யுங்கள்:

பல கருவுறல் மையங்கள் உள்ளன. ஆனால், மிகவும் மேம்படுத்தப்பட்ட ஆய்வகங்கள், உபகரணங்களைக் கொண்ட மற்றும் மிகவும் தகுதி வாய்ந்த, திறமையுள்ள கருவுறல் நிபுணர்களைக்கொண்ட சிறந்த மையத்தினை தேர்வு செய்வது அவசியமாகும். IVF என்பது நீண்டகால செயல்முறை என்பதால், இந்த செயல்முறையில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய, உங்கள் மருத்துவருடனும், மற்ற ஊழியர்களுடனும் மிகச் சிறந்த நல்லுறவை நீங்கள் வைத்திருக்க வேண்டும். நோயாளிகளுக்கு முன்னுரிமை அளித்து, நெறிமுறையான, வெளிப்படையான மற்றும் ஆதாரப்பூர்வமான சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தும் மையமே உங்கள் தேர்வாக இருக்க வேண்டும்.

  • IVF–ன் முழுசெயல்முறையும் உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் உங்கள் IVF சிகிச்சையை ஆரம்பிப்பதற்குமுன், அந்த செயல்முறையின் ஒவ்வொரு படிநிலையையும் தெளிவாகப்புரிந்து கொள்வது முக்கியமாகும். IVF என்பது, ஒரு உணர்வுபூர்வமாக, உடலியலாக மற்றும் நிதியியலாகவும் பாதிக்கும் ஒரு பயணமாகும், எனவே, முறையான திட்டமிடலும், வாழ்க்கைமுறை மாற்றங்களும், முழு செயல்முறையினையும் எளிதாக கடந்து செல்ல உங்களுக்கு உதவும். உங்களுடைய அனைத்து சந்தேகங்களையும், கவலைகளையும், உங்களுக்கு சிகிச்சையளிப்பவருடன் முறையாக கலந்தாலோசிப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ளலாம். அதன் மூலம், சரியான நம்பிக்கையுடன் நீங்கள் உங்கள் பயணத்தை தொடரலாம்.

  • நிதியியல் அம்சத்தினை புரிந்து கொள்ளுதல்:

IVF-ஐ நீங்கள் எடுத்துக்கொள்வதற்கு முன், அதற்கான நிதிகுறித்து ஆலோசகர் / மருத்துவருடன் விபரமாக கலந்தாலோசிக்கவும். மாதத்தவணைகள் மற்றும் காப்பீட்டு உதவி போன்றவை தொடர்பான அறிவு, உங்கள் மன அழுத்தத்தினை போக்குவதற்கும் உதவும்.

  • நீங்கள் உங்களை அமைதியாக வைத்திருங்கள்:

IVF செயல்முறையின்போது, முட்டை உற்பத்தியை தூண்டுவதற்காக உங்களுக்கு ஹார்மோன் ஊசிகள் போடப்படும். பதற்றம், கவலை, எரிச்சல் மற்றும் ஏமாற்றம் உட்பட நிறைய உணர்வு பூர்வமான மாற்றங்களை இந்த ஹார்மோன்கள் ஏற்படுத்தலாம். தியானப்பயிற்சி மேற்கொள்ளுதல் மற்றும் இந்த நடை முறையினை நன்கு தெரிந்திருத்தல் ஆகியவை உங்களை அமைதியாக வைத்திருக்க உதவும்.

  • உங்கள் மருத்துவர் என்ன சொல்கிறாரோ அதை கேளுங்கள்:

IVF சிகிச்சை உணவுமுறை, வாழ்க்கைமுறை, எடையை பராமரித்தல், அல்லது தியானப்பயிற்சி எதுவானாலும், உங்கள் கருவுறல் நிபுணரின் ஆலோசனையை பின்பற்றுங்கள். ஏதேனும் சந்தேகமிருந்தால், எந்தவொரு மாற்றத்தினையும் செய்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரை கலந்தாலோசியுங்கள்.

  • உதவி கேட்பதற்கு கூச்சப்படாதீர்கள்:

IVF பயணம் என்பது ஒரு ரோலர் கோஸ்டர் சவாரியாகும். குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது ஒரு உளவியலாளரிடமிருந்து உளவியல் ரீதியான ஆதரவை பெறுவது குறித்து ஒருபோதும் வருத்தப்பட வேண்டாம். சில IVF ஆதரவு குழுக்கள் நீங்கள் இந்தப்பயணத்தினை சுமூகமாக முடிப்பதற்கு உதவக்கூடும்.

  • மனஅழுத்தத்தினை குறைப்பதற்கான வழிகளை கண்டுபிடியுங்கள்:

நீங்கள் உந்துதலுடனும், நம்பிக்கையுடனும் இருக்க உதவும் ஒரு பழக்கத்தை, ஒரு பொழுதுபோக்கை கண்டுபிடியுங்கள். எப்போதும் யதார்த்தமான எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பது முக்கியமாகும். பொறுமையே வெற்றிக்கான திறவுகோலாகும். ஒருபோதும் கைவிடாத மனப்பான்மையை நினைவில் வைத்திருங்கள்.

IVF – சிகிச்சையின் போது செய்யக்கூடாதவைகளின் பட்டியல்:

  • புகைபிடித்தல்:

புகைபிடித்தல்,கருத்தரித்தலுக்கான வாய்ப்புகளை குறைக்கும். அது விந்தணுவின் தரம், எண்ணிக்கை மற்றும் இயக்கத்தினை பாதிக்கிறது. மகளிரைப் பொறுத்தவரையில், அது முட்டையின் தரத்தினை எதிர்மறையாக பாதித்து, கருச்சிதைவுக்கான ஆபத்தினை அதிகரிக்கிறது.

  • மது:

மது அருந்துதல் என்பது கருத்தரித்தலுக்கான வாய்ப்புகளை எதிர்மறையாக பாதிக்கலாம்.

  • தீவிர உடற்பயிற்சி முறை:

தீவிர உடற்பயிற்சி செய்வதென்பது உங்கள் IVF சிகிச்சையை பாதிக்கலாம். இதில் வெற்றி பெறுவதற்கு, எடையை குறைப்பதென்பது அவசியம் தான், ஆனால், அதற்காக கடுமையான உடற்பயிற்சி தேவையில்லை. IVF- இன் போது மிதமான உடற்பயிற்சி செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

சில தம்பதியருக்கு பெற்றோராவதற்கான பாதை கொஞ்சம் அதிக நேரம் எடுக்கலாம் மற்றும் கொஞ்சம் சிரமமாகவும் இருக்கலாம், தீர்மானமாகவும், நம்பிக்கையுடனும் அதனை செய்வது அவசியமாகும்.

அனைத்து நல்ல விஷயங்களும் நேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
IVF சிகிச்சையின் வெற்றி விகிதத்தினை தெரிந்துகொள்வதற்கு, என்ற வலைதளத்தினை பார்க்கவும்.

Write a Comment