Site icon Oasis Fertility

கருத்தரிக்காமைக்கு எப்போது சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்?

[tm_spacer size=”xs:20;sm:20;md:20;lg:45″]

குழந்தைபேறுக்கான முயற்சியில் நீங்கள் ஈடுபடும்போது அதற்கான எதிர்பார்ப்போடு ஏங்கும் உங்கள் உணர்வுகளுக்கு எதையும் ஈடுசொல்ல முடியாது. ஆனால் ஒருவேளை கொஞ்சகாலத்திற்குள் நீங்கள்கருத்தரிக்கவில்லை என்றால், உங்களுக்கும் உங்கள்

துணைவருக்கும் கருவளமின்மை பிரச்சினை என்று யோசிக்கத்தொடங்குவீர்கள். குழந்தை பெறுவதற்கான முயற்சியில் இப்போதுதான் ஈடுபட்டு இருக்குறீர்கள் என்றால் நீங்கள் உடனடியாக கருத்தரித்தலுக்கான நிபுணரை சந்திக்க வேண்டும் என்பது இல்லை. ஆனாலும், மிக அதிககாலம் காத்திருப்பதும் நீங்கள் குழந்தைபெறுவதற்கான வாய்ப்பை குறைக்கச்செய்யலாம். கருதரிக்காமை குறித்த உங்களது பிரச்சினைகள் பற்றிதெரிந்துக்கொள்ள மருத்துவரைசந்திக்க உரியநேரம் எது என்பதை நீங்கள் முடிவு செய்ய இங்கே பட்டியலிடப்பட்டுள்ள வழிக்காட்டுதல்கள் உங்களுக்கு துணைபுரியும்.

நீங்கள் கருத்தரிப்பதற்கான முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் கால அளவை பொறுத்தது

குழந்தை பெற்றுக்கொள்ள ஒரு ஆண்டுகாலமாக முயற்சிசெய்யும் கணவன் மனைவி ஜோடி அதில் வெற்றி பெறாமல் இருப்பதற்கு கருவளமின்மை காரணமாக இருக்கலாம். கருத்தரிப்பதற்கு ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக முயற்சிசெய்தும் விளைவுகள் இல்லாமலிருந்தால், கருத்தரிப்பு நிபுணர் ஒருவரை சந்திக்க நீங்கள் பரிசீலனை செய்யவேண்டும்.

வயதைபொறுத்தது

கருவளத்தைகணிக்க வயது ஒருமுக்கிய கூறாக விளங்குகிறது.வயது கூடகூட கருவளம் குறைவதை ஆண், பெண் என இருபாலினத்தவரும் அனுபவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நீங்கள் 35 வயதிற்கு குறைவானவராக இருந்தால்- ஒரு ஆண்டு காத்திருக்கவும்

ஒரு ஆரோக்கியமான இளம்தம்பதியினர் கருத்தரிக்க 12 மாதங்கள் என்பது இயல்பான கால அளவாகும். 20களின் இறுதிகட்டத்திலும் 30களின் ஆரம்பகட்டத்திலும் இருக்கும் கருத்தரிக்க முயற்சிக்கும் காலகட்டத்தின் இடையில் கருத்தடை முறைகளை கையாள்வதை தவிர்க்க வேண்டும். அப்படியும் அவர்கள் கருத்தரிக்கவில்லை என்றால், கருவளநிபுணர் ஒருவரை சந்திக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நீங்கள் 35 வயதிற்கும்மேற்பட்டவராக இருந்தால்

35 வயதிற்குமேல், பெண்தாய்மை நிலையை அடைவது ஒருமுதிர்ந்தவயதாக சொல்லப்படுகிறது. பெண்ணிற்கான கருவளம் குறையத்தொடங்கும் காலம் அதுதான். பெண்ணின் கருமுட்டை உற்பத்தியளவும் குறையத்தொடங்கும். ஆறுமாதங்களுக்கு மேலாக முயற்சிசெய்தும் உங்களால் கருத்தரிக்க முடியவில்லை என்றால், எந்ததாமதமும் இன்றி நீங்கள் கருத்தரிப்பு நிபுணரை சந்தித்து ஆலோசிக்க வேண்டும்.

நீங்கள் 40 வயதிற்கும் மேற்பட்டவராக இருந்தால்

நீங்கள் ஒரு பெண்மணியாகவும் உங்கள் வயது 40-களில் இருந்து நீங்கள் குழந்தைபேறுக்கு முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் உடனடியாகவே கருத்தரிப்பு நிபுணர் ஒருவரிடம் இருந்து ஆலோசனை உதவி பெறுவது சிறந்தது. இந்த வயதில் ஒரு பெண்மணி கருத்தரிப்பதற்கான சாத்தியம் குறைவு, கருகலைவதற்கான சாத்தியங்களும் அதிகம். 40 வயதில், பெண்களது முளைகரு எண்ணிக்கையின் பாதிமடங்கு வழக்குநிலைக்கு மாறானக்ரோமோசோம்களை கொண்டிருக்கும். இவ்வனைத்து காரணங்களும் 40 வயதை கடந்த பெண்மணிக்கு கருஉண்டாக, கருவளசிகிச்சைக்கான தேவையை உறுதிப்படுத்துகின்றன.

(BMI) அடிப்படையில்

உங்கள் உடல் எடை, உங்கள் உடலின் ஹார்மோன் சமநிலை மீது பெரியதாக்கத்தை ஏற்படுத்தமுடியும்.  இனபெருக்க செயல்பாடுகளையும் அது பாதிக்க முடியும். BMI குறியீடு 30ற்கும் அதிகமாகவோ அல்லது 18ற்கும் குறைவாகவோ கொண்ட ஒரு பெண்மணி கருத்தரிக்க மிகவும் சிரமப்படலாம். குழந்தை பேறுக்கான முயற்சியில் ஈடுபடும் முன் உங்கள் கருத்தரிப்பு நிபுணரிடம் ஆலோசித்து ஒரு சிறந்த BMI குறியீட்டை அடைய கவனம் செலுத்துங்கள்.

மருத்துவநிலையை பொறுத்து

தைராய்டு பிரச்சினைகள்

உங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருந்தால், நீங்கள் கருத்தரிப்பதற்கான சாத்தியத்தை அது பெரிய அளவில் பாதிக்கலாம். தைராய்டு செயல்பாட்டில் உள்ள வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகள் காரணமாக கருகலைவு, கருவளமின்மை மற்றும் இயல்புக்கு மாறான குழந்தையின் வளர்ச்சி ஆகியன ஏற்படலாம். உங்களுக்கு தைராய்டுபிரச்சினை இருந்தாலோ அல்லது இருப்பதாக சந்தேகப்பட்டாலோ கருவள மருத்துவர் உங்களுக்கு உதவமுடியும்.

இனபெருக்கபிரச்சினைகள்

இனபெருக்க பிரச்சினைகளான பாலிசிஸ்டிக்ஓவெரிசின்ட்ரோம்(PCOS) மற்றும் என்டோமெட்ரியோசிஸ் போன்றவைகள் நோய்கண்டறிசோதனையில் உங்களுக்கு இருப்பதாக கண்டறியப்பட்டால், உங்களுக்கு குழந்தை வேண்டும் என முடிவுசெய்த உடனேயே கருவளத்துக்கான மருத்துவரை நீங்கள் அணுகவேண்டும். PCOS உடைய பெண்மணிகளுக்கு கருமுட்டைவெளியேற்றம் சீராக இருக்காது. அவர்களுக்கு அதை சீராக்க மருத்துவ உதவி தேவைப்படும். என்டோமெட்ரியோசிஸ், அடைக்கப்பட்டடியூபுகள், கருமுட்டை உற்பத்தி அளவுகுறைவு போன்ற இனபெருக்கசிக்கல்களுக்கும் உங்களது கருவளமருத்துவர் உதவ முடியும்.

குழந்தை பேறுக்கான முயற்சியில் நீங்கள் ஈடுப்பட்டிருக்கும்போது அதற்கான ஆலோசனைகளையும் கூடுதல் தகவல்களையும் ஒயாசிஸ்ஃபெர்டிலிட்டியில் உள்ள கருத்தரிப்பு நிபுணர்களிடம் பேசி தெரிந்துக்கொள்ளலாம்.

Was this article helpful?
YesNo
Exit mobile version