Site icon Oasis Fertility

கருவுறுதல் மதிப்பீடு என்றால் என்ன, அது எவ்வாறு செய்யப்படுகிறது?

Fertility Evaluation

பெற்றோராவதற்கான பயணம் ஒவ்வொரு தம்பதியருக்கும் தனித்துவமானதாகும் ஆனால் சில தம்பதியரைப் பொறுத்தவரையில், அவர்களது கருவுறுதிறன் சார்ந்த சில பிரச்சினைகளின் காரணமாக பெற்றோராவதற்கு மற்றவர்களைவிட சிறிது காலம் எடுக்கும். பல மேம்பட்ட கருவுறுதல் சிகிச்சைகள் உள்ளன மற்றும் பெற்றோராவதற்கு தேவையானது ஒரு முழுமையான அணுகுமுறைதான் என்பதை புரிந்துகொள்வது அவசியமாகும்.

தாமதமாக பெற்றோராதல், வாழ்க்கைமுறை காரணிகள், ஜங்க் ஃபுட்ஸ், உடல் பருமன், முதலியன உட்பட பல காரணங்களினால் இந்தியாவில் குழந்தையின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வயது ஏற ஏற கருவுறுதிறன் குறைகிறது என்பதை பலர் அறிவதில்லை மற்றும் காலப்போக்கில் இயற்கையாகவே கருத்தரிக்கலாம் என்ற மனநிலையில் அவர்கள் உள்ளனர், அது எல்லா நேரங்களிலும் நடக்காமல் போகலாம். ஒரு தம்பதியர் ஒரு வருடம் முயற்சி செய்தும் கருவுற முடியாமல் போனால், சரியான கருவுறுதல் மதிப்பீடு செய்வதற்கு, ஒரு கருவுறுதல் நிபுணரை அவர்கள் கலந்தாலோசிக்க வேண்டும். பெண் துணைவரின் (மனைவியின்) வயது 35-க்கு மேல் எனில், முயற்சி செய்து 6 மாதத்திற்குள் அவர்கள் கருவுறாமல் போனால், அவர்கள் பரிசோதனைக்கு செல்ல வேண்டும். கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவருக்கும் செய்யப்படும் பரிசோதனை வரலாறு மற்றும் விசாரணைகள் மட்டுமே, பிரச்சினை கணவரிடம் உள்ளதா அல்லது மனைவியிடம் உள்ளதா அல்லது இருவரிடமும் உள்ளதா என்பதை கண்டறிவதற்கும் அதன்படி தனிப்பட்ட சிகிச்சைத் திட்டத்தினை வகுப்பதற்கும் உதவும். எனவே, கருவுறுதல் பரிசோதனையின்போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு செய்யப்படும் குறிப்பிட்ட பரிசோதனைகள் குறித்து பார்ப்போம்.

பெண்களுக்கான கருவுறுதல் பரிசோதனைகள்

ஒரு முழுமையான மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனைக்குப் பிறகு, FSH, LH, ஈஸ்ட்ராடியல், AMH, முதலியன போன்ற கருவுறுதல் ஹார்மோன்களின் நிலையை சரிபார்ப்பதற்காக, இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட காரணங்களைக் கண்டறிவதற்காக செய்யப்படும் சில படமெடுத்தல் (இமேஜிங்) நடைமுறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

 

  • அல்ட்ராசௌண்டு: கருப்பை நீர்க்கட்டிகள், நார்த்திசுக்கட்டிகள் உள்ளனவா என்பதை அறிய பயன்படுத்தப்படுகிறது. கருப்பையின் நிலை மற்றும் அளவு, கருப்பை உள்வரிச்சவ்வு (எண்டோமெட்ரியல்) முறை, தடிமன், கருப்பையில் உள்ள நுண்ணறைகளின் எண்ணிக்கை, அண்டவிடுப்பு, முதலியவற்றை புரிந்து கொள்வதற்கு உதவுகிறது.
  • ஹிஸ்டெரோசல்பிங்கோக்ராம்: கருமுட்டை செலுத்தும் குழாய்களில் ஏதேனும் அடைப்பு உள்ளதா என்பதை கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது.
  • டயக்னோஸ்டிக் ஹிஸ்டெரொலாப்ரோஸ்கோப்பி: கருப்பை நீர்க்கட்டிகள், கருப்பை உள்வரிச்சவ்வு, நார்த்திசுக்கட்டிகள், கருப்பை கோளாறுகள் அல்லது கருவுறுதலை பாதிக்கக்கூடிய வேறு ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பதை சரிபார்த்து சிகிச்சையளிப்பதற்காக பெண்களின் இடுப்புப் பகுதியை ஆய்வு செய்வதற்கு இது பயன்படுகிறது.

ஆண்களுக்கான கருவள பரிசோதனைகள்

ஆண்குறி, விந்துக்குழாய், விரைகள் மற்றும் ஆண் இனப்பெருக்க அமைப்பின் பிற பகுதிகளை ஆய்வு செய்வதற்கு, உடல் பரிசோதனை செய்யப்படும்.

ஒருவரின் மருத்துவ வரலாறு, குழந்தைப்பருவ நோய்கள், வாழ்க்கை முறை, கன உலோகம் / பூச்சிக்கொல்லிகள் / கதிர்வீச்சு போன்றவற்றுடனான அவர்களது தொடர்பு குறித்த தகவல்களைப் பற்றி கருவுறுதல் நிபுணர் விசாரிப்பார். அவர்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகள் பின்வருமாறு:

 

  • விந்து பகுப்பாய்வு: விந்தணு எண்ணிக்கை, இயக்கம், வடிவம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கு இது பயன்படுகிறது. DNA ஃப்ராக்மெண்டேஷன் குறியீடு, ரியாக்ட்டிவ் ஆக்சிஜன் ஸ்பீஷிஸ் சோதனை, போன்ற மேம்பட்ட விந்து பரிசோதனைகள், இரண்டாம் நிலை மற்றும் விவரிக்கப்படாத குழந்தையின்மையை மதிப்பிடுவதற்கு உதவலாம்.
  • ட்ரான்ஸ்ரெக்டல் அல்ட்ராசௌண்டு: விந்துப்பை, விந்துக்குழாய் போன்றவற்றை ஆய்வு செய்வதற்கு உயர்-தெளிவு படமெடுத்தலைப் பயன்படுத்துகிறது.
  • ஸ்க்ரோடல் அல்ட்ராசௌண்டு: விரைப்பையை பரிசோதிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது; விரைகளில் ஏதேனும் கோளாறுகள் உள்ளனவா என்பதை கண்டுபிடிப்பதற்கும் இது உதவலாம்.

கருவுறுதல் மதிப்பீடானது, கருவுறுதல் நிபுணர், குழந்தையின்மைக்கான காரணத்தினை புரிந்துகொள்ளச் செய்கிறது மற்றும் மற்றும் ஒருவருடைய பெற்றோராதல் கனவினை அடைவதற்குரிய தனிப்பட்ட கருவுறுதல் சிகிச்சைத் திட்டத்தினை உருவாக்கச் செய்கிறது. பெற்றோராகி மகிழ்ச்சியடைவீர்!

Exit mobile version