கருப்பை அடினோமையோசிஸ் என்பது வலி மிகுந்த மாதவிடாயை விட வேதனையானது. அடினோமையோசிசை பற்றி புரிந்து கொள்ள, கருப்பையின் உடற்கூறியலைப் பற்றி புரிந்து கொள்வது அவசியம்.
கருப்பை, கீழ்காணும் அடுக்குகளால் ஆனது.
மையோமெட்ரியம்: வெளிப்புறத்தில் உள்ள மென்மையான தசை.
எண்டோமெட்ரியம்: மாதவிடாய் சுழற்சியின் போது வளரும் உட்புற அடுக்கு. கருப்பை, கருவுற்ற கருமுட்டையை பெற இது உதவுகிறது.
“இணைப்பு மண்டலம்” அல்லது “உட்புற மையோமெட்ரியம்” என்பது இவ்விரண்டு அடுக்குகளுக்கும் இடையில் அமைந்திருக்கும் பகுதியாகும். இது எண்டோமெட்ரியத்தையும் தசை அடுக்கையும் பிரிக்கிறது. ஒரு ஆரோக்கியமான கருப்பையில் இந்தப் பகுதியின் கனம் 2-8 mm வரை இருக்கும்.
ஒரு பெண்ணுக்கு அடினோமையோசிஸ் இருந்தால், அவரது கருப்பை தசை சுவருக்குள் எண்டோமெட்ரியல் திசு வளர்ந்து, இணைப்பு மண்டலத்தை தடிமனாக்கும். அடினோமையோசிஸ் இருந்தால், இந்த இணைப்பு மண்டலத்தின் கனம் 12mm அல்லது அதற்கு மேல் இருக்கும். இதனால் கருப்பை பெரிதாகி அசௌகரியமான மற்றும் வலி மிகுந்த அறிகுறிகளை ஏற்படுத்தும். மையோமெட்ரியத்தில் காணப்படும் கட்டிகளும் அடினோமையோசிசை குறிக்கின்றன.
35 வயதுக்கு மேற்பட்ட நடுத்தர வயது பெண்களில் அல்லது எண்டோமெட்ரியோசிஸ் பாதித்த பெண்களில், அடினோமையோசிஸ் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த அறிகுறிகளை கவனிக்கவும்:
– வலி மிகுந்த பிடிப்புகள் அல்லது இடுப்பு வலி
– நீண்ட நாட்களுக்கு நீடிக்கிற அல்லது அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்கு
– வலி மிகுந்த பாலியல் உறவு
– மலட்டு தன்மை
இந்த அறிகுறிகள் பிற அடிப்படை சிக்கல்களையும் குறிக்கலாம். இவை என்டோமெட்ரியோசிஸ் அறிகுறிகளுக்கு ஒத்திருக்கும்.
சிக்கல்கள்:
அடினோமையோசிஸ், பாதிக்கப்பட்ட பெண்களின் அன்றாட வாழ்வில் பாதகமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அடினோமையோசிஸ் பாதித்த பெண்களில், இரத்த சோகை, மலட்டுத்தன்மை, மற்றும் பிற கருப்பை பிரச்சனைகள் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம்.