Blog
Uncategorized

தம்பதியர் பெற்றோர்த்துவத்தை அடைய மேம்படுத்தப்பட்ட கருவுறுதல் சிகிச்சைகள் உதவுகிறது

தம்பதியர் பெற்றோர்த்துவத்தை அடைய மேம்படுத்தப்பட்ட கருவுறுதல் சிகிச்சைகள் உதவுகிறது

மலட்டுத்தன்மை பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தம்பதியருக்கு, அதை மேற்கொள்ள உதவும் பல்வேறு கருவுறுதல் சிகிச்சைகளைப் பற்றி விழிப்புணர்வு இல்லை. உங்கள் நண்பரோ, அயல்வீட்டுக்காரரோ, உறவினரோ, மலட்டுத்தன்மையை மேற்கொள்வதற்கு உதவின அதே சிகிச்சை உங்களுக்கும் உதவாது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். ஆடைகளில் S, M, L, XL, XXL, XXXL, முதலிய பல்வேறு அளவுகள் இருப்பது போல, கருவுறுதல் சிகிச்சைகளும் ஒவ்வொரு தம்பதியருக்கும் அவரவர் வயது, மருத்துவ சூழ்நிலைகள், வாழ்க்கைமுறை, ஆரோக்கியம் மற்றும் பல காரணிகளைப் பொருத்து மாறுபடும். எல்லாருக்கும் ஒரே அளவு பொருந்தாததுபோல, மருந்துகள், அதின் அளவுகள் மற்றும் கால இடைவெளி ஆகியவை, ஒவ்வொரு தம்பதியருக்கும் தனிப்பயனாக்கப்பட வேண்டும்.

கருவுறுதல் சிகிச்சை உங்களுக்கு எப்படி பரிந்துரைக்கப்படும்?

தங்களுக்கு தேவைப்படும் கருவுறுதல் சிகிச்சையை ஒரு தம்பதியர் தீர்மானிக்க முடியாது. எல்லா காரணிகளையும் கருத்தில் கொண்டு, ஒரு கருவுறுதல் நிபுணர் தான் சரியான சிகிச்சையைத் தேர்வு செய்ய முடியும். அதனால், ஒரு வருடத்திற்கு பின்பும் கருத்தரிக்க முடியாவிட்டால், தம்பதியர் உடனே ஒரு நிபுணரோடு ஆலோசிக்க வேண்டும். முதலாவது, வெவ்வேறு கருவுறுதல் சிகிச்சைகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். அவை, OITI, IUI, IVF, மருந்தில்லா IVF, கருவுறுதல் பாதுகாப்பு, தான சிகிச்சை, ஆண் கருவுறுதல் சிகிச்சை, முதலியன.

OITI:

OITI என்றால் என்ன?

· அடிப்படை கருவுறுதல் சிகிச்சை

· நுண்ணறைகளின் உருவாக்கத்துக்கும் அண்டவிடுப்பிற்குமான (கருமுட்டை வெளியேறுதல்) மருந்துகள் பெண்களுக்குக் கொடுக்கப்படும். கருமுட்டை வெளியேறும் நாளை கண்காணித்து, தம்பதியர் உறவு வைக்க அறிவுறுத்தப்படுவர். இதனால் இயற்கையாக கருத்தரிக்கலாம்.

OITI யாருக்கானது?

· எப்போதாவது அண்டவிடுப்பு நடக்கும் பெண்களுக்கு

· PCOS உடைய பெண்களுக்கு

IUI:

· IUI என்பது அடுத்த கட்ட கருவுறுதல் சிகிச்சை.

· நுண்ணறைகளின் உருவாக்கத்துக்கான மருந்துகள் பெண்களுக்குக் கொடுக்கப்படும். இதன்பின், அண்டவிடுப்பு தூண்டப்பட்டு, கருமுட்டைகள் வெளியேறும். ஆணிலிருந்து விந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆரோக்கியமான விந்தணுக்கள் தேர்ந்தெடுக்கப்படும். இந்த விந்தணுக்கள், பெண்ணின்

கருப்பைக்குள் குழாய் வழியே செலுத்தப்பட்டு கருத்தரிக்க வைக்கப்படும். கருத்தரிப்புக்குப் பின் உருவாகும் ஜிகோட், எம்ப்ரியோவாக உருவாகி, பின்பு குழந்தையாகும்.

IUI யாருக்கானது?

· விளக்கமுடியாத மலட்டுத்தன்மை

· குறைவான விந்தணு எண்ணிக்கையுள்ள ஆண்கள்

· லேசான இடமகல் கருப்பை அகப்படலமுடைய பெண்கள்

· கர்ப்பப்பை வாய் பிரச்சனைகளை உடைய பெண்கள்

IVF:

· IVF ஒரு மேம்படுத்தப்பட்ட கருவுறுதல் சிகிச்சை

· கருமுட்டை உருவாக கருப்பைகளை தூண்டுவதற்கான மருந்துகள் பெண்ணுக்குக் கொடுக்கப்படும். பெறப்பட்ட கருமுட்டைகள், ஆணிலிருந்து சேகரிக்கப்பட்ட விந்தணுக்களோடு இணைக்கப்படும். கருத்தரித்த கருமுட்டைகள் எம்ப்ரியோக்களாகி, தொடர்ந்து வளர, பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும்.

IVF யாருக்கானது?

· இடமகல் கருப்பை அகப்படலமுடைய பெண்கள்

· விளக்கமுடியாத மலட்டுத்தன்மை

· ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி

· குறைவான கருப்பை இருப்பு

· ஆண் மலட்டுத்தன்மை

· இடமகல் கருப்பை அகப்படலம்

மருந்தில்லா IVF

· இது ஒரு சமீபத்திய உருவாக்கம், IVF-ன் மேம்படுத்தப்பட்ட சிகிச்சை

· மிகக் குறைந்த மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது

· பக்க விளைவுகள் இல்லை

· பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவுள்ள முறை

மருந்தில்லா IVF யாருக்கானது?

· PCOS உடைய பெண்கள்

· எதிர்ப்பு கருப்பை நோய்க்குறி

· த்ரோம்போபிலியா நோயாளிகள்

· வீரியமிக்க நோயாளிகள்

· கருமுட்டை முதிர்ச்சியடைவதில் சிக்கல்

கருவுறுதல் பாதுகாப்பு:

புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களுக்கு, கருவுறுதல் பாதுகாப்பு நுட்பம் ஒரு வரம். புற்றுநோயும் அதற்கான சிகிச்சையும், ஆண் பெண் இருபாலரின் கருவுறுதலையும் பாதிக்கும். சிகிச்சைக்கு முன், அவர் ஒரு கருவுறுதல் நிபுணரை அணுகி, தன் விந்தணுக்கள் அல்லது கருமுட்டைகளை உறைய வைக்க வேண்டும். இந்த முறை மூலம், ஒருவர் தன் இனப்பெருக்க ஆற்றலை பாதுகாத்து, அவர்கள் வசதிக்கேற்ப பின்னர் கருத்தரிக்கலாம்.

தான சிகிச்சை:

விந்தணு அல்லது கருமுட்டையின் தரம் குறைவாய் இருந்தால், வேறு பெண்ணின் கருமுட்டையையோ, வேறு ஆணின் விந்தணுவையோ கருத்தரிக்கப் பயன்படுத்தலாம்.

வாடகைத்தாய்:

இதில், தம்பதியர் தங்கள் கருவை சுமக்க ஒரு வாடகைத்தாயின் உதவியைப் பெறலாம். பல்வேறு மருத்துவ சூழ்நிலைகளின் அடிப்படையில் வாடகைத்தாய் முறையை தேர்வு செய்யலாம்.

ஆண் கருவுறுதல் சிகிச்சைகள்:

நிலைமையைப் பொருத்து, ஆண்கள் தந்தைமையை அடைய, மைக்ரோஃப்ளுயிடிக்ஸ், MACS (மாக்னடிக் அசார்டட் செல் சார்டிங்), TESA (டெஸ்டிகுளர் ஸ்பர்ம் அஸ்பிரேஷன்), மைக்ரோTESE (மைக்ரோஸ்கோபிக் டெஸ்டிகுளர் ஸ்பர்ம் எக்ஸ்டராக்ஷன்) போன்ற பல்வேறு மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகள் உள்ளன.

உங்களால் கருத்தரிக்க முடியாவிட்டால், உங்களுக்கோ உங்கள் துணைக்கோ ஏதேனும் பிரச்சனை இருக்கலாம். இதை ஒரு கருவுறுதல் நிபுணரால் மட்டுமே கண்டறிய முடியும். வயது செல்ல செல்ல கருவுறும் ஆற்றல் ஆண் பெண் இரு பாலரிலும் குறைந்துகொண்டே போகும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். எனவே, கருவுறுதல் சிகிச்சையை தள்ளிப்போடக் கூடாது. இனிய பெற்றோர்த்துவத்தை அடையுங்கள்!

Have question? Contact us now!

BOOK A FREE CONSULTATION