PCOS உள்ள பெண்களுக்கு CAPA IVM கொண்டு சிகிச்சை – இந்தியாவின் முதல் CAPA IVM குழந்தையைப் பெறச் செய்த மருந்தில்லா IVF நெறிமுறை
ருமணமாகி 5 வருடங்கள் ஆகிய ஷிவா (35) மற்றும் ஷைலஜா (33) தம்பதியருக்கு மலட்டுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் பல OITI சைக்கிள் தோல்விகளுக்குப்பின் கடுமையான பிசிஓடியோடு ஒயாசிஸ் கருவுறுதல் மையத்தை அணுகினர். கணவன் மனைவி இருவருக்கும், வாரங்கலில் உள்ள ஒயாசிஸ் கருவுறுதல் மையத்தின் மருத்துவ தலைவர் மற்றும் கருவுறுதல் நிபுணராகிய, Dr Jalagam Kavya Rao, கருவுறுதல் சோதனையை நடத்தினார். ஆய்விற்குப் பிறகு, ஷைலஜாவிற்கு AMH 11.7 இருப்பதும், சீரற்ற மாதவிடாய் சுழற்சி இருப்பதும் கண்டறியப்பட்டது. அவரது கணவருக்கு விந்தணு எண்ணிக்கை சீராய் இருப்பதும், விந்தணு இயக்கம் சற்று குறைவாய் இருப்பதும் காணப்பட்டது.
Dr Kavya அவர்களை முழுமையாய் ஆய்வு செய்தபின், முதற்கட்டமாக ஒரு IUI சுழற்சிக்கு திட்டமிட்டார். இந்த சிகிச்சையின்போது, கருமுட்டைகளைப் பிறப்பிக்கக் கூடிய நுண்ணறைகள் ஒன்றும் காணப்படாததால், Dr Kavya IVF சிகிச்சையை மேற்கொள்ள அவருக்கு அறிவுறுத்தினார். ஆனால் அந்த பெண்ணுக்கு, பல ஊசிகள் பற்றியும், மருந்துகள் பற்றியும், உடல்ரீதியான, மனரீதியான மற்றும் பொருளாதார ரீதியான பிரச்சனைகளைப் பற்றியும் கவலை இருந்ததினால், Dr Kavya அவருக்கு CAPA IVM என்னும் வழக்கமான IVF முறைக்கு மாற்றான, மருந்தில்லா IVF முறையைப் பரிந்துரைத்தார். இது, குறைந்த செலவில், குறைந்த தீவிரம் கொண்டதும், தம்பதியருக்கு நம்பிக்கையைத் தரக்கூடியதுமான செயல்முறையாகும்.
*இரகசியத்தன்மையைக் காக்க தம்பதியரின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
CAPA IVM என்றால் என்ன?
மக்கள் கருத்தரிக்க உதவுவதில் நம்பிக்கைக்குரிய முடிவுகளை IVM கொடுக்கிறது. IVM முறை பல வருடங்களாய் இருந்தாலும், தற்போது இணைக்கப்பட்டுள்ள ப்ரீ-மெச்சூரேஷன் படி, முந்தைய விளைவுகளை விட நல்ல விளைவுகளைக் காணச் செய்கிறது.
CAPA IVM என்பது, வழக்கமான IVF சிகிச்சைகளுக்கு ஒப்பான விளைவுகளைக் கொடுக்கும் ஒரு மருந்தில்லா IVF சிகிச்சை. IVM நெறிமுறையின் மேம்படுத்தப்பட்ட முறையாகிய இது, பைஃபேசிக் இன் விட்ரோ மெச்சூரேஷன் எனவும் அழைக்கப்படும். இந்தியாவில் ஒயாசிஸ் கருவுறுதல் மையம் மட்டுமே இந்த சிகிச்சையில் நிபுணத்துவமும் அனுபவம் வாய்ந்ததுமாயிருக்கிறது.
மருந்துகள் பற்றியும் ஹார்மோன் ஊசிகள் பற்றியும் கவலைப்பட்டு, குறைந்த செலவில் மற்றும் குறைந்த தீவிரம் கொண்ட சிகிச்சையை மேற்கொள்ள விரும்பும் பெண்களுக்கு CAPA IVM முறை உதவுகிறது.
யாருக்கு CAPA IVM பரிந்துரைக்கப்படுகிறது?
- PCOS உடைய பெண்களுக்கு
- வீரியம் கொண்ட மற்றும் உடனடி சிகிச்சைத் தேவைப்படும் நோயாளிகளுக்கு (ஐவிஎஃப் 2 வார சிகிச்சை என்பதால் அது பொருந்தாது)
- கருப்பை எதிர்ப்பு நோய்க்குறி
- த்ரோம்போஃபிலியா நோயாளிகள் மற்றும்
- கருமுட்டை முதிர்ச்சியடைவதில் பிரச்சனையுடைய நோயாளிகள்
Dr Kavya முதற்கட்டமாக, லெட்ரோசோல் + எச்எம்ஜி 75 ஐயூவைத் தொடர்ந்து 2 டோஸ் கொனடோட்ராப்பின்னை 2 நாட்களுக்கும் (3 மற்றும் 5ஆம் நாட்கள்), நாள் 3 முதல் நாள் 7 வரை கொனடோட்ராப்பின், லெட்ரோசோல் ஆகியவற்றைக் கொடுக்கிற, ஐயூஐ நெறிமுறையை தம்பதியருக்கு செயல்படுத்த திட்டமிட்டார். நாள் 9,11,13,16ல் ஒரு ஃபாலிக்யூலர் ஸ்கேன் செய்யப்பட்டது. 4 எச்எம்ஜி 150 ஊசி 18ஆம் நாளில் போடப்பட்டது. ஆனால் கருமுட்டைகளைப் பிறப்பிக்கக் கூடிய நுண்ணறைகள் ஒன்றும் காணப்படவில்லை. சுழற்சி முழுவதுமே ஷைலஜாவிற்கு டெக்சாமீத்தாசோன் (1 மிகி) கொடுக்கப்பட்டது. 21ஆம் நாளில் ஷைலஜாவிற்கு எதிர்க்கும் பிசிஓடி இருப்பது காணப்பட்டதால், சுழற்சி நிறுத்தப்பட்டது.
Dr Kavya, ஷைலஜாவிற்கு CAPA IVM கொடுக்க முடிவு செய்தார். இது சில ஊசிகளில், எந்த பக்கவிளைவும் இல்லாமல் கருவுற உதவும் மேம்பட்ட மருந்தில்லா நெறிமுறையாகும். அவரது மாதவிடாய் நாட்களின் 1,2 மற்றும் 3ஆம் நாட்களில், மெனோபர் 150 கொடுக்கப்பட்டது. பின்பு 3ஆம் டோஸிற்குப் பின், முதிரா கருமுட்டைகள் ஷைலஜாவிடமிருந்து எடுக்கப்பட்டு, முதிர்ச்சியடைய வைப்பதற்கான 2 படிகள் மேற்கொள்ளப்பட்டது.
அ. கருமுட்டைகள், 24 மணி நேர ப்ரீமெச்சூரேஷன் படியில் வளர்த்தப்பட்டது. (சி-வகை நாட்ரீயூரெட்டிக் பெப்டைடைக் கொண்ட ஊடகம்)
ஆ. இந்தக் கருமுட்டைகள் மறுபடியும் 30 மணி நேர முதிர்ச்சியடையச் செய்யும் படியில் அடைகாக்கப்பட்டது. (ஹார்மோன் மற்றும் ஆம்ஃபிரெகுலின்னை தூண்டுகின்ற ஃபாலிக்கலை உடைய ஊடகம்)
கருமுட்டைகளின் முதிர்ச்சியடையும் ஆற்றலை ப்ரீமெச்சூரேஷன் படி அதிகரிக்கும். அதைத் தொடர்ந்து ICSI செய்யலாம். 3ஆம் நாளில், 20 கருமுட்டைகள் எடுக்கப்பட்டு கருத்தரித்தல் செய்யபட்டது. அதன்பின் 8 முதல் தர கருக்கள் பெறப்பட்டது. 3ஆம் நாளில் 4 முதல் தர கருக்கள் உறைய வைக்கப்பட்டு, மற்றவை 5ஆம் நாள் வரை வளர்த்தப்பட்டது. 2 நாள் 3 மற்றும் 1 நாள் 5 பிளாடோசிஸ்ட்டோடு தொடர்ச்சியான கரு பரிமாற்றம் செய்யப்பட்டு, இந்தியாவின் முதல் CAPA IVM குழந்தை உருவானது. Dr Kavya, மற்றும் அவரது குழுவின் ஆராய்ச்சி நாட்டம், அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி சரித்திரம் படைத்தது. உடல்ரீதியான, மனரீதியான, பொருளாதார ரீதியான பிரச்சனைகளோடு பல வருடங்களாய் தோல்வியைக் கண்ட சிகிச்சைகளுக்கு பின், பல ஊசிகளின்றியும், சிக்கல்களின்றியும், அதிகமான செலவின்றியும் பெற்றோராக வேண்டுமென்ற கனவு நிஜமானதால் தம்பதியர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
fill up the form to get a
Free Consultation
Avail 0% interest on EMI
All Procedures | No Upper Limit
How we reviewed this article:
- Current Version
- March 13, 2023 by Oasis Fertility
- February 23, 2023 by Oasis Fertility