Blog
BOOK A FREE CONSULTATION
Case Study

கருத்தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்ற ERA

ராக்கி ஓர் 23 வயது பெண். டுஷார் ஓர் 33 வயது ஆண். அவர்களிருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. திருமணத்துக்கு பின் கடந்த 3 ஆண்டுகளாக குடும்ப வாழ்வை தொடங்க முயற்சி செய்து வருகின்றனர், ஆனால் அது கை கூடவில்லை. கருவளத்தை பரிசோதிப்பதற்கான தொடக்கநிலை சோதனைகள் டுஷாரின் விந்து சுட்டளவீடுகள் இயல்பாக உள்ளதாக காண்பித்தன. ஆனால் ராக்கியின் கருமுட்டை இருப்பு குறைவானதாக இருந்ததோடு கூடவே பைலாட்ரெல் அட்ராபிக் ஓவரிஸ் (இருதரப்பு சுருங்கிய கருமுட்டைகளாகவும்) மாதவிடாய் சுழற்சிவட்டம் சீரானதாக இல்லை எனவும் காண்பித்தது.

ஹிஸ்டிரோஸ்கோபிக் அட்சியோலிசஸ் பரிசோதனை மற்றும் லேப்ரோஸ்கோபிக் செயல்முறை ஆகியவற்றை ராக்கி மேற்கொண்டாள். அது அவளுக்கு பைலேட்ரல் டியூபல் பிளாக் (இருதரப்பு குழாய் தொகுதியில் அடைப்பு) இருப்பதாக காண்பித்தன.
எனவே கிளிப்பிங் செயல்படுத்தப்பட்ட்து. (கருப்பை நலம்பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவ்வாறு பாதிக்கபடாத பெண் ஊசைட்டிஸ் நன்கொடை அளிக்கலாம்) ஊசைட்டிஸ் வழங்கப்பட்டு அதன்மூலம் இரண்டு முறை IVF முயற்சி தோல்வி அடைந்ததது. இந்த ஆரம்ப கட்டத் தோல்விகளால் தம்பதிகள் நம்பிக்கை இழக்காமல் பூனேவில் உள்ள ஒயாசிஸ் ஃபெர்ட்டிலிட்டி மையத்திற்கு வருகை தந்தார்கள். வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு டூஷாருக்கு இயல்புநிலை DFI (விந்தணு DNA வின் ஒருங்கமைப்பு மற்றும் சேதங்களை பிரதிபலிக்கும் சோதனை) 15% என உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த கால IVF தோல்விகள் மற்றம் குறைந்த கருமுட்டை இருப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒர் எக் அடாப்ஷன் சைக்கிள் திட்டமிடப்பட்டது மற்றும் இரண்டு நாள் 5 பிளாஸ்டோசிஸ்ட் பரிமாற்றம் செய்யப்பட்ட்து, ஆனால் இதுவும் எதிர்பாரத்த
விளைவுகளைத் தராமல் எதிர்மறையாகப் போனது.

நல்ல தரமான முளை கருக்களை(எம்ப்ரியோக்களை) பயன்படுத்திய போதும் கருத்தரிப்பு 3 தடவைகளுக்கு மேல் தோல்வி அடைந்தால் அது தொடர் இம்பிளான்டேஷன்(செயற்கை கருத்தரிப்பு) தோல்வி என குறிப்பிடப்படுகிறது. அத்தகைய சூழலில் ஒரு உடற்கூறு ஆய்வியல் பரிசோதனை வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது-இரத்தம் கட்டிப்படுவது மற்றும் மரபியல் சோதனைகள்
போன்றவை, காரணம் இவை இம்பிளான்டேஷன் (செயற்கை கருத்தரிப்பு) தோல்வியுடன் தொடர்பு கொண்டிருக்கும் கூறுகளாக உள்ளன என்றாலும், தோல்வி அடைந்த எல்லா கேஸ்களுக்குமான காரணமாக அக்கூறுகளை மட்டுமே குறிப்பிட முடியாது; கருத்தரிப்பு வெற்றி பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட கருவறை சூழல் தேவைப்படுகிறது. இம்பிளான்டேஷன் (செயற்கை கருத்தரிப்பு) தோல்வி அடையும் கேஸ்களில் இவற்றையும் மதிப்பீடு செய்ய வேண்டும். இது என்டோமெட்ரியல் ரிசிப்டிவிட்டி அரே (ERA) பரிசோதனை மூலமாக செய்யப்படுகிறது. என்டோமெட்ரியம்(கருப்பை சுவரின் `உட்பூச்சு) உள்வாங்கும் தன்மை பெறுவதில்
பங்கு வகிக்கும் 200 க்கும் மேற்பட்ட ஜீன்களை மதிப்பாய்வு செய்கிறது.என்டோமெட்ரியம் உள்வாங்கும் தன்மை பெற்றிருக்கிறதா இல்லையா என்பதை இந்தச் சோதனை கண்டறிகிறது. மற்றும் எந்த சூழலில் செயற்கை கருத்தரித்தல்(இம்பிளான்டேஷன்) ஒரு பெண்ணுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்பதை கணிக்கின்றது. ERA வின் குறிக்கோள் எது என்றால் உருவாக்கப்பட்ட கரு(எம்ப்ரியோ) கருப்பைக்குள் பரிமாற்றப்படுவதற்கு ஏற்ற நாளை முடிவு செய்வது. இதனால் செயற்கை ருத்தரிப்பு(இம்பிளான்டேஷன்) தோல்வியை குறைக்க முடியும்.

ERA எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?

கருப்பை சுவர் உட்பூச்சின் பையோப்சி( திசு ஆய்வை) பயன்படுத்தி ஓர் ERA மேற்கொள்ளப்படுகிறது. IVF சுழற்சியின் போது என்டோமெட்ரியத்தின் உள்வாங்கும் தன்மைக்கு உதவக்கூடிய ஒரு ஹார்மோனாக ப்ரோஜீஸ்ட்ரோன் உள்ளது. ப்ரோஜீஸ்ட்ரோன் உட்செலுத்தப்பட்டு ஐந்து நாட்களுக்கு பின் எம்ப்ரியோ(முளை கரு) பரிமாற்றம் மேற்கொள்ளப்படுவதற்கான ஏற்ற சூழல் ஆகும்.

ERA திரும்ப திரும்ப சுழற்சி முறையில் செய்யப்படுகிறது. பையோப்சி( திசு ஆய்வை) அடையப்பட்டவுடன் உள்வாங்கும் தன்மையில் பங்கு வகிக்கும் ஜீன்கள் ஆராயப்படுகின்றன. என்டோமெட்ரியம் “உள்வாங்கும் தன்மை உடனிருக்கிறதா”’ அல்லது “ உள்வாங்கும் தன்மை இல்லாமல் இருக்கிறதா” என்பதை ERA கணித்துச் சொல்லும்.

உள்வாங்கும் தன்மையுடனிருக்கிறது- வருங்கால சுழற்சி வட்டத்தில் இதே நேரத்தில் முளைக்கரு பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம்.

உள்வாங்கும் தன்மை இல்லாமல் இருப்பது-ஒரு பெண்ணின் என்டோமெட்ரியம் தன் நிலையிலிருந்து மாறி இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. ப்ரோஜீஸ்ட்ரோன் உட்செலுத்தலுக்கான நேர மாற்றத்துக்கு பின் எம்ப்ரியோ(முளை கரு) பரிமாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இம்பிளான்டேஷனிற்கான (செயற்கை கருத்தரிப்பு) ஏற்ற சரியான சூழல் அடையாளம் காணப்பட்டவுடன், தனிப்பட்ட முறையிலான முளை கரு பரிமாற்றம் ஒரு மாத இடைவெளியில் திட்டமிடப்படலாம். தொடர் இம்பிளான்டேஷன்(செயற்கை கருத்தரிப்பு) தோல்வி காணப்படுகின்ற பெண்களுக்கு ERA மேற்கொள்ளப்பட்டால் வெற்றிகரமான கருத்தரிப்பு 70% கூடுதலாகலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ராக்கியின் கேஸில், அவளது என்டோமெட்ரியம் உரிய நிலையிலிருந்து மாறி இருந்தது. எனவே தனிப்பட்ட எம்ப்ரியோ(முளை கரு) பரிமாற்றம் ப்ரோஜீஸ்ட்ரோன் உட்செலுத்தலுக்கான நேர மாற்றத்துடன் மேற்கொள்ளப்பட்டது. ERA முடிவுகளின் அடிப்படையில் இரண்டுபிளாஸ்டோசிஸ்ட்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன. பரிமாற்றம் வெற்றிகரமாக நிகழ்ந்து அவள் கருத்தரித்தாள், ய்மைக்கான அவளது கனவு நனவாகியது.

Write a Comment

BOOK A FREE CONSULTATION