Blog
Enquire Now
Uncategorized

எய்ட்ஸ் உங்களை பெற்றோர்த்துவம் அற்றவர்களாக்காது! கருவுறுதல் சிகிச்சைகள் எச்.ஐ.வி தம்பதியரை பெற்றோர்களாக்கக் கூடும்.

எய்ட்ஸ் உங்களை பெற்றோர்த்துவம் அற்றவர்களாக்காது! கருவுறுதல் சிகிச்சைகள் எச்.ஐ.வி தம்பதியரை பெற்றோர்களாக்கக் கூடும்.

திரு சுனில் மற்றும் திருமதி திவ்யா என்பவர்களுக்கு, அவர்களின் வழக்கமான சோதனையில், ரெட்ரோவைரஸ் இருப்பதாக உறுதியானபோது, அவர்கள் வாழ்க்கை நிலைமாறிப்போனது. சில மருத்துவர்கள், விந்து தானம் செய்பவரை அணுகவோ, ஒரு குழந்தையைத் தத்தெடுக்கவோ அறிவுறுத்தினதினால், தங்கள் குழந்தையை தாங்களே இயற்கையாகப் பெற்றெடுக்கும் கனவு அவர்களுக்கு உடைந்துபோனது. அவர்கள் ஒயாசிஸ் கருவுறுதல் மையத்திற்கு வந்தபோது, அவர்களுக்கு ஒரு புது நம்பிக்கையும் ஆவலும் பிறந்தது. மேம்பட்ட கருவுறுதல் சிகிச்சைகள் மூலம் பெற்றோர்த்துவத்தை அடையக்கூடிய வாய்ப்பைப் பற்றியும் அவர்கள் அறிந்துகொண்டு, இறுதியில் தங்கள் குழந்தையைத் தாங்களே பெற்றெடுத்தனர். இது, எச்.ஐ.வி நோயாளிகளிடமிருந்து, எச்.ஐ.வி அவர்களது துணைக்கும், குழந்தைக்கும் பரவும் அபாயத்தைத் குறைக்க உதவுகிற மேம்பட்ட கருவுறுதல் சிகிச்சைகளையும், ரெட்ரோவைரஸ் எதிர்ப்பு சிகிச்சைகளையும் பெறுவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. எய்ட்ஸ், ஒரு தம்பதி பெற்றோர்த்துவத்தை அடைவதை தடுக்காது. விழிப்புணர்வை பரப்புவதே முக்கியம். எச்.ஐ.வி தம்பதியர் கருவுறாமையை மேற்கொள்ள உதவுவதிலும், அப்படிப்பட்ட பல தம்பதியர் பெற்றோர்த்துவத்தை அடைய உதவியதிலும் ஒயாசிஸ் கருவுறுதல் மையம் நிபுணத்துவமும் அனுபவமும் வாய்ந்தது. நம்பகத்தன்மையைக் காக்க தம்பதியரின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

பெண்களின் கருவுறுதலை எச்.ஐ.வி எவ்வாறு பாதிக்கும்?

எச்.ஐ.வி பெண்களை உடல் ரீதியாகவும், உயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதித்து, எடை இழப்பு, நீடித்த அண்டவிடுப்பின்மை மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஆகியவற்றை விளைவிக்கும். எச்.ஐ.வி உறுதியான பெண்களுக்கு பெல்விக் இனபிலம்மாட்டோரி டிசீஸ், குழாய் காரணி மலட்டுத்தன்மை முதலியவை பாதிக்கும் அபாயம் அதிகம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

அவமானத்தினால் ஏற்படும் மனஅழுத்தமும், கருத்தரித்தல் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் குறித்த அச்சமும், இந்தப் பெண்களின் கருத்தரிக்கும் ஆற்றலை பாதிக்கும். இவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயமும் அதிகம். ஆனால், இவையெல்லாம் ஒருவரின் குடும்பக் கனவிற்கு முற்றிப்புள்ளி வைக்கத் தேவையில்லை.

ஆண்களின் கருவுறுதலை எச்.ஐ.வி எவ்வாறு பாதிக்கும்?

எச்.ஐ.வி உறுதியான ஆண்களுக்கு ஹைபோகோனாடிசம் பாதித்து, விந்து செறிவும், விந்து எண்ணிக்கையும், இயக்கமும் குறைகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. மேலும், அவர்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடும், குறைந்த பாலுணர்வு விருப்பமும், விந்தணு எண்ணிக்கைக் குறைவும், ஆண்மைக் குறைவும் ஏற்படும்.

கருவுறுதல் சிகிச்சைகளின் விவரம்:

இருவரில் ஒருவருக்கு மட்டும் எச்.ஐ.வி பாதித்த தம்பதியர்:

ஒரு தம்பதியில், ஆணுக்கு மட்டும் எச்.ஐ.வி பாதித்திருந்தால், அவருக்கு ஊனீர் மற்றும் விந்துவில் இருக்கும் வைரஸ்களை குறைக்கக்கூடிய ரெட்ரோவைரஸ் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்படும். ஆணில் வைரஸ் இருப்பை கண்டறிய முடியாத சூழ்நிலையில் மட்டுமே, ஏ.ஆர்.டி சிகிச்சைகள் தம்பதிக்குத் தொடங்கப்படும். பெண்ணுக்குக் கொடுக்கப்படும் முன்-வெளிப்பாடு ப்ரோஃபைலாக்சிஸ் (PrEP) என்னும் நோய்த்தடுப்பான், பெண்ணுக்கு இந்த வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்கும். இரு முறை விந்தைக் கழுவுதல், ஐ.யூ.ஐ மற்றும் ஐ.சி.எஸ்.ஐ உடன் ஐ.வி.எஃப் போன்ற பிரத்தியேக நெறிமுறைகள், மனைவியையும் குழந்தையையும் இந்த வைரஸ்கள் தாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது.

எச்.ஐ.வி பாதித்த தம்பதியர் குழந்தை பாக்கியம் அடையும் மகிழ்ச்சியைக் கொடுக்க பல சிகிச்சை வாய்ப்புகள் இருந்தாலும், விழிப்புணர்வின்மை பலரை நம்பிக்கையற்றவர்களும் மகிழ்ச்சியற்றவர்களுமாக்குகிறது.

கருத்தரித்தலுக்கு முந்தைய ஆலோசனை எச்.ஐ.வி பாதித்த தம்பதியருக்கு மிகவும் அவசியம். ஏனெனில், அவர்கள் குடும்பத்தை நடத்தத் திட்டமிடும் முன்பே, அதிலுள்ள சிக்கல்களையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், சிகிச்சை வாய்ப்புகளையும் புரிந்துகொள்ள அது உதவும்.

நம்பிக்கை உண்டு! உங்கள் பெற்றோர்த்துவக் கனவை விட்டுவிடாதீர்கள்.

Write a Comment