கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
Author: Dr. Sai Manasa Darla, Consultant, Fertility Specialist & Laparoscopic Surgeon குறைவான கருப்பை இருப்பு (கருப்பையில் உள்ள கருவுறக்கூடிய கருமுட்டைகளின் எண்ணிக்கை) உடைய பெண்களுக்கு அல்லது குறைவான கருமுட்டை தரமுடைய பெண்களுக்கு, கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF ஒரு நிம்மதிப் பெருமூச்சாகும். கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF செயல்முறை தம்பதியினரின் பெற்றோர்த்துவ கனவு நனவாக உதவுகிறது. கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF என்றால் என்ன? கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF ஒரு துணை இனப்பெருக்க தொழில்நுட்பம் ஆகும். முகமறியாத கருமுட்டை தானமளிப்பவரிடம் இருந்து பெறப்பட்ட முதிர்வடைந்த கருமுட்டைகளை இது பயன்படுத்துகிறது. பெறப்பட்ட இந்த கருமுட்டைகள் பின்னர் ஆண் துணையின் விந்தணுக்களுடன் கருவுறச் செய்யப்படும். கருவுற்ற பின் அதிலிருந்து உருவாகும் எம்ப்ரியோவானது கருப்பதிக்க பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும். கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF யாருக்கு தேவைப்படுகிறது? கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு கருமுட்டை …