Blog
Enquire Now
Uncategorized

எண்டோகிரைன் சீர்குலைக்கும் இரசாயனங்கள் & கருவுறுதல்

எண்டோகிரைன் சீர்குலைக்கும் இரசாயனங்கள் & கருவுறுதல்

நாளமில்லா சுரப்பியை சீர்குலைக்கும் இரசாயனங்களும் கருவுறுதலும்:

பெறோர்த்துவம் ஒரு சிறந்த பயணமாய் இருந்தாலும், கருவுறுதல் பிரச்சனைகளை உடைய பல தம்பதியருக்கு அந்த பாதை கரடுமுரடானது. ஒருவரின் கருவுறும் ஆற்றலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உடல் பருமன், வயது மூப்பு, வாழ்க்கைமுறை, புகைப்பிடித்தல், மற்றும் பிற மருத்துவக் காரணங்கள் போன்ற காரணிகளைப் பற்றி பலருக்கு விழிப்புணர்வு உண்டு. ஆனால் EDC-கள் (நாளமில்லா சுரப்பியை சீர்குலைக்கும் இரசாயனங்கள்) கருவுறுதலை தடை செய்கிறது என்பதும், நீங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களில் அவை இருப்பதும் உங்களில் பலருக்குத் தெரியாது.

EDC-கள் என்றால் என்ன?

இயற்கை ஹார்மோன்களை செயல்பட விடாமல் தடுத்து, ஹார்மோன்களைப் பிரதிபலிக்கும் இரசாயனங்கள்/ இயற்கை பொருட்கள், நாளமில்லா சுரப்பியை சீர்குலைக்கும் இரசாயனங்களாகும். இவை வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகளின் பொம்மைகள், அழகு சாதன பொருட்கள், முதலியவற்றில் இருக்கிறது.

இவை கன உலோகங்கள், தொழில்சார்ந்த இரசாயனங்கள், தொழில்துறை மாசு,விவசாய இரசாயனங்கள் மற்றும் தொழில்துறை கரைப்பான்களிலும் இருக்கிறது. EDC-கள் கருத்தரிப்பை பாதித்து, மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.

டால்க் பவுடரை பிறப்புறுப்பில் பயன்படுத்துவது, பெண்களில் தோலிழைய கருப்பை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என பல ஆய்வுகள் கூறுகிறது.

பொதுவான EDC-களின் பட்டியல்:

  1. பிஸ்ஃபீனால் A (BPA)
  2. DDT
  3. தாலேட்
  4. ட்ரைக்லோசன்

குளிர்பானங்களைக் குடிப்பதற்கு முன் இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள். அவற்றில் பூச்சிக்கொல்லிகள் இருக்கிறது.

 

CSE அறிக்கை: குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி இருப்பதைப் பற்றின ஆய்வு, 2006

பொதுவான வீட்டு உபயோக பொருட்களும் EDC-யும்:

வீட்டு உபயோக பொருட்கள் EDC இருப்பு
குழந்தைகளின் பொம்மைகள் ஈயம்
ப்ளாஸ்டிக் உணவு சேமிப்பு கொள்கலன்கள், மைகள், பசைகள், நக பாலிஷ், ஷாம்பூக்கள், ஹேர் ஸ்ப்ரே, வாசனை திரவியங்கள், பாடி வாஷ், குழந்தைகளின் அழகு சாதன பொருட்கள் – ஐ ஷாடோ, ஐ க்ளிட்டர், டையப்பர் க்ரீம், மாய்ஸ்ட் வைப்ஸ், பேபி ஆயில், கையுரைகள், ரெயின் கோட்டுகள், தாலேட்டுகள்
பவுடர், பெயிண்டுகள், லென்ஸ்கள், பேபி ஃபீடிங் பாட்டில்கள், டெண்டல் சீலண்டுகள், தண்ணீர் பாட்டில்கள், ஈபாக்சி ரெசின் பூசிய உலோக உணவு கொள்கலன்கள், சைக்கிள் ஹெல்மெட்டுகள், கடைகளின் விற்பனை ரசீதுகள் BPA
மாய்ஸ்சுரைசர்கள், ஷேவிங் க்ரீம்கள், ஷாம்பூ, வாசனை திரவியம், குறிப்பிட்ட உணவு பொருட்கள் பாராபன்கள்
டூத் பேஸ்ட், மவுத் வாஷ், சோப்புத்தூள், டவல்கள், ஷூக்கள், ஃபோன்கள், கட்டிங் போர்டுகள், பாத்திரம் கழுவும் திரவங்கள், சமையலறை பாத்திரங்கள், டூத் ப்ரஷ், ஹேர் கேர் தயாரிப்புகள்

 

ட்ரைக்லோசன்
எலக்ட்ரானிக்ஸ், சோஃபா, மெத்தைகள் ப்ராமினேடட் ஃப்ளேம் ரிடார்டண்ட்ஸ் (BFR)
மின் கருவி, ஆயில்-பேஸ்ட் பெயிண்ட் பாலிக்ளோரினேடட் பைஃபினைல்ஸ் (PCB)
பேட்டரிகள், பிக்மண்டுகள், ப்ளாஸ்டிக் ஸ்டெபிலைசர்கள் காட்மியம்
உருளைக்கிழங்கு, பால், ரொட்டி, பழங்கள், குடிநீர் பூச்சிக்கொல்லி

 

பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திலும் பிறக்கப்போகும் குழந்தையிலும் EDC-ன் பாதிப்பு:

  • கருத்தரிப்பை பாதிக்கலாம்
  • பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்
  • பருவமடையும் காலத்தை மாற்றலாம்
  • அறிவாற்றல் மற்றும் நடத்தை குறைபாடுகளை ஏற்படுத்தலாம்
  • குழந்தையில் ஆட்டிஸ்டிக் ஸ்பெக்ட்ரம் கோளாறுகளை ஏற்படுத்தலாம்

ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் EDC-ன் பாதிப்பு

  • விந்தணு தரத்தை பாதிக்கலாம்
  • விந்தணு உற்பத்தியை பாதிக்கலாம்

கர்ப்பகாலத்தின்போது EDC-ன் வெளிப்பாடு, இறங்காத விறைப்பைகள், ஆணுறுப்பு குறைபாடு போன்ற குழந்தையின் பிறப்புறுப்பு குறைபாடுகளையும், குறைபிரசவத்தையும் கூட ஏற்படுத்தலாம்.

EDC-வெளிப்பாட்டை குறைப்பது எப்படி?

  • BPA இல்லாத தயாரிப்புகளை பயன்படுத்தவும்
  • ப்ளாஸ்டிக் கொள்கலன்களில் உணவை சூடாக்கக்கூடாது
  • வாசனையுள்ள சோப்புகளை தவிர்க்கவும்
  • அடிக்கடி சுத்தம் செய்யவும் (தீயை தடுக்கும் இரசாயனங்களை வீட்டு உபயோக பொருட்களிலிருந்து நீக்குவதற்காக)
  • வாசனையில்லாத க்ரீம்கள், சுத்தம்செய்யும் தயாரிப்புகள் மற்றும் லாண்டரி சோப்புத்தூள்களை தேர்ந்தெடுக்கவும்
  • பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்
  • எந்த தயாரிப்பையும் வாங்குவதற்கு முன் லேபிளைப் பார்க்கவும்
  • பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்ண முயற்சிக்கவும்

Write a Comment