Blog
Uncategorized

IVF சிகிச்சை குறித்த இட்டுகட்டு கதைகள்

IVF சிகிச்சை குறித்த இட்டுகட்டு கதைகள்

தாய், தந்தை ஆகும் பேறு என்பது அனைத்து தம்பதியினருக்கும் மிக உணர்வுபூர்வமான ஒரு விஷயமாகும். தாய், தந்தை ஆகும் பேறு பெறும் வழி ஒவ்வொரு தம்பதியினருக்கும் இடையே வேறுபடும். தம்பதிகளால் இயற்கையாக கருத்தரிக்க முடியவில்லை என்றால், கருவளசிகிச்சைகள் அவர்களுக்கு உதவும். IVF (இன்விட்ரோஃபெர்டிலைசேஷன்) என்பது தம்பதியினர் தாய்மை, தந்தை பேறு பெற உதவும் ஒருநவீன கருவளசிகிச்சைமுறையாகும். ஆனால் பலருக்கும் IVF சிகிச்சைமுறையின் செயல்பாடுகள் பற்றிய புரிதல் சரிவர இல்லாதகாரணத்தால் அவர்களிடையே அதுபற்றி அச்சமும் தவறான கருத்துக்களும் நிலவுகின்றனது. IVF சிகிச்சையைமேற்கொள்வதற்குமுன், IVF செயல்பாட்டுமுறைமற்றும் IVF சிகிச்சையை பாதிக்கும் கூறுகள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை தம்பதிகள் பெற்று இருக்க வேண்டும். IVF சிகிச்சை குறித்து பொதுவாக கூறப்படும் இட்டுகட்டுகள் என்ன என்பதை பார்ப்போம்.
1.வது இட்டுகட்டு:
IVF வெற்றி பெண்ணின் வயதை சார்ந்திருக்கவில்லை.
நிதர்சன உண்மை:
எல்லாவயதிலும் IVF வெற்றி ஒரேமாதிரியாக இருப்பதில்லை. பெண்ணின் வயது கூட கூட கருவளம் குறையுமாதலால் IVF வெற்றி விகிதமும் குறையும்.

2.வது இட்டுகட்டு:
IVF காரணமாக மூன்று அல்லது நான்கு குழந்தைகள் கருவில் உண்டாகும்.
நிதர்சன உண்மை:
முன்பு, 2 அல்லது 3 முளைகருக்கள் கருமாற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டதால் இரட்டை, மூன்று அல்லது நான்கு குழந்தைகள் ஒன்றாக பிறக்கும் நிலை நிலவியது. தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்களான PGT, ERA, மற்றும் மற்ற தொழில்நுட்பங்களால் ஒரே ஒரு ஆரோக்கியமான முளைகருமட்டு மேகருமாற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு கூடுதல் எண்ணிக்கையிலான கரு உண்டாவது தடுக்கப்படுகிறது.

3.வது இட்டுகட்டு:
கருவளபிரச்சினை உள்ள அனைத்து தம்பதியினருக்கும் IVF சிகிச்சை தேவை.
நிதர்சன உண்மை:
பிரச்சினையின் நிலை மற்றும் தீவிர தன்மையின் அடிப்படையில் பலவகைப்பட்ட சிகிச்சை முறைகள் கிடைக்கப்பெறுகின்றன. கணிக்கப்பட்ட உரிய நேரபுணர்ச்சியின் போது கருமுட்டைகள் தூண்டப்படுவது, IUI, மற்றும் பலசிகிச்சை முறைகளும் தம்பதிகள் கருத்தரிக்க உதவுகின்றன. எனவே, அனைத்து தம்பதியினரும் IVFயை மேற்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை.

4.வது இட்டுகட்டு:
ஆண்கள் புகைபிடிப்பது காரணமாக வெற்றிவிகிதம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது.
நிதர்சன உண்மை:
ஆண்கள் புகைபிடிப்பது காரணமாக வெற்றிவிகிதம் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மேலும் கருகலைவதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கும்.

5.வது இட்டுகட்டு:
IVF சிகிச்சை 100% வெற்றி பெறும்.
நிதர்சன உண்மை:
IVF சிகிச்சை வெற்றிக்கு பலகாரணிகள் உள்ளடங்கியிருக்கின்றன. IVF சிகிச்சையின் வெற்றிவிகிதம் 50-70% ஆகும்.

6.வது இட்டுகட்டு:
IVF சிகிச்சைக்கு பின் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பு அல்லாத குறைபாடுகள் இருக்கும்.
நிதர்சன உண்மை:
இந்த தவறான கண்ணோட்டத்தை கொண்டிருப்பதன் காரணமாக பலருக்கு IVF சிகிச்சை குறித்த அச்சம் உள்ளது. இயற்கையான கருத்தரிப்பால் பிறக்கும் குழந்தைகளை போலவே IVF சிகிச்சைக்கு பின்பிறக்கும் குழந்தைகளும் இயல்பானவையே.

7.வது இட்டுகட்டு:
IVF சிகிச்சைமுறைகளை மேற்கொள்ள ஒருவர் மருத்துவமனையில் தங்கவேண்டும்.

நிதர்சன உண்மை:
IVF சிகிச்சை என்பது வீட்டில் தங்கி இருந்தபடியே பெற கூடிய சிகிச்சை முறையாகும். மருத்துவமனையில் சிகிச்சை செயல்பாடு முடிந்தவுடன், ஒருவர் வீட்டிற்கு சென்று விடலாம். மருத்துவமனையில் தங்க வேண்டும் என்பதற்கான அவசியம் இல்லை.
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தம்பதிகள் தாய்மை, தந்தைபேறு பெறுவதைதாமதிக்ககூடாது. பணிநிமித்தமாகவோ அல்லது வேறுகாரணங்களோ நீங்கள் கருதரிப்பதற்கு ஒருதடையை ஏற்படுத்துகிறது என்றால் கருமுட்டைகள், விந்தனுக்கள் மற்றும் முளைகரு ஆகியவற்றை பதப்படுத்திவைப்பது சிறந்த தெரிவாக இருக்கும். அவற்றை பயன்படுத்தி பின்பு உங்களுக்கு வசதியான நேரத்தில் கருத்தறித்துக்கொள்ளலாம். வாழ்வியல்மாற்றங்கள் மற்றும் அதிகரிக்கும் PCOS நிகழ்வுகள், இடமகல்கருப்பைஅகப்படலம்(endometriosis) நிகழ்வுகள், குறைவான விந்தனு எண்ணிக்கை நிகழ்வுகள் போன்றவைகளின் காரணமாக கருவளசிகிச்சை தாமதிக்காமல் உரியநேரத்தில் மேற்கொள்வது சிறந்தது.

Write a Comment

BOOK A FREE CONSULTATION