Blog
Enquire Now
Uncategorized

இரண்டு வார காத்திருப்பு: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

இரண்டு வார காத்திருப்பு: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

Author: Dr. Sai Manasa Darla, Consultant, Fertility Specialist &  Laparoscopic Surgeon

IVF சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள் “இரண்டு வார காத்திருப்பு” என்னும் சொற்றொடரை கேள்விப்பட்டிராவிட்டால் கவலைப்பட தேவையில்லை. அதைப் பற்றிய முக்கிய குறிப்புகளை உங்களுக்கு அறிவிக்கப் போகிறோம்.

முதலாவதாக, HCG ஹார்மோன் பற்றி உங்களுக்கு தெரியுமா?

மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் (hCG) என்பது, எம்ப்ரியோவானது கருப்பை சுவரில் இணைந்து, வெற்றிகரமாக கருப்பதித்தல் நடக்கும்போது வெளியிடப்படும் ஹார்மோன் ஆகும். இது கருப்பை புறணியின் உருவாக்கத்திலும், கருவின் வளர்ச்சியிலும் பங்களிக்கிறது.

இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளில் HCG காணப்படுவது கர்ப்பத்தைக் குறிக்கிறது.

இரண்டு வார காத்திருப்புக் காலம் என்றால் என்ன?

IVF செயல் முறையின் போது, எம்ப்ரியோ பரிமாற்றத்துக்கு பின், அந்த எம்ப்ரியோ கருப்பை சுவரில் கருப்பதித்து, போதிய hCG (மனித கோரியானிக் கோனாடோட்ரோபின்) ஹார்மோனை உருவாக்க கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆகும். இதை இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

எம்ப்ரியோ பரிமாற்றத்துக்கும் கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் இரத்தப் பரிசோதனைக்கும் இடையேயான காலம், இரண்டு வார காத்திருப்புக் காலம் எனப்படும்.

IVF சிகிச்சைக்கு பின் கர்ப்ப பரிசோதனை எடுக்க ஒருவர் ஏன் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும்?

சிறுநீர் கர்ப்ப பரிசோதனை, அதாவது வீட்டில் செய்யப்படும் கர்ப்ப பரிசோதனை, சிறுநீரில் hCG இருப்பதை மட்டுமே கண்டறியும். ஆனால் இரத்த பரிசோதனை, உடலில் இருக்கும் hCG அளவை கண்டறிய உதவும். உடலில் இருக்கும் hCG அளவுடன், ஹார்மோன் நிலைகளின் படிப்படியான அதிகரிப்பும் முக்கியமானது. இதை வெற்றிகரமான கருப்பதித்தலுக்கு 11-14 நாட்களுக்கு பின்னரே இரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

மேலும், IVF சிகிச்சையின்போது கருப்பை தூண்டலுக்கு hCG பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த செயற்கை hCG உடலை விட்டு வெளியேற 14-16 நாட்களாகும். எனவே, எம்ப்ரியோ பரிமாற்றத்துக்கு இரண்டு வாரங்களுக்குப் பின் இரத்தப் பரிசோதனை செய்வதே வீட்டில் செய்யப்படும் கர்ப்ப பரிசோதனையை விட துல்லியமானதாகும். தவறான நேர்மறை மற்றும் எதிர்மறை முடிவுகளை தவிர்க்கவும் இரத்தப் பரிசோதனை உதவுகிறது

எம்ப்ரியோ பரிமாற்றத்துக்குப் பின் எதிர்பார்க்கக் கூடிய சாத்தியமான அறிகுறிகள்:

– இரத்தக்கசிவு அல்லது இரத்தப்போக்கு

– பிடிப்புகள் மற்றும் இடுப்பு வலி

– மார்பகங்களில் வலி

– சோர்வு

– குமட்டல்

– பிறப்புறுப்பு கசிவுகளில் மாற்றங்கள்

– மாதவிடாய் தள்ளிப் போகுதல்

அறிகுறிகளை அதிகம் வாசிக்க வேண்டாம். அறிகுறிகள் மிகவும் தீவிரமாகாத வரை நீங்கள் பயப்பட தேவையில்லை. அறிகுறிகள் உங்களுக்கு மிகவும் அசௌகரியமாக இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

IVF சிகிச்சைக்கு பின் கருப்பதித்தலுக்கு உதவ நீங்கள் என்ன செய்யலாம்?

பரிமாற்றத்திற்கு பின், எம்ப்ரியோ மற்றும் கருப்பை புறணியை சார்ந்தே கருப்பதித்தல் வாய்ப்பு இருக்கும். இந்த செயல்முறைக்கு உதவ நீங்கள் எதுவும் செய்ய முடியாது. இது உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், மன அழுத்தம் மிக்க கடினமான காலமாகும்.

இரண்டு வார காத்திருப்புக்கு நாங்கள் அளிக்கும் உங்களுக்கான சில குறிப்புகள் இங்கே:

– எளிமையாக இருங்கள். கனமான பொருட்களை தூக்குவது, சூடான குளியல், மற்றும் தீவிர உடற்பயிற்சிகள் போன்றவற்றை தவிருங்கள்.

– ஆல்கஹால், புகைப்பிடித்தல், அல்லது புகையிலை ஆகியவற்றிலிருந்து விலகியிருங்கள்.

– மருத்துவர் சொல்லும் வரை மருந்துகளை தவிர்க்கவோ நிறுத்தவோ வேண்டாம்.

– மனநிலை மாற்றங்களும் ஹார்மோன் மாற்றங்களும் இயற்கையானவை. நேரம் எடுத்து சில தளர்வு நுட்பங்களை பயிற்சி செய்யுங்கள்.

– இரத்தக்கசிவும் இரத்தப்போக்கும் ஏற்படலாம். பயப்பட வேண்டாம். உங்கள் மருத்துவரை ஆலோசிக்கவும்.

– ஆரோக்கியமான உணவை உண்டு நன்கு தூங்குங்கள்.

● தவறான நேர்மறை முடிவுகளை தவிர்க்க, இரண்டு வாரங்கள் முடிவதற்கு முன் வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்துகொள்ள வேண்டாம்.

● இரத்தப்போக்குடன் அல்லது இரத்தப்போக்கின்றி அதிகமான இடுப்பு வலி மற்றும் பிடிப்புகள் ஏற்படலாம். பயப்படத் தேவையில்லை.

● உடலுறவை தவிர்க்கவும். எம்ப்ரியோ பரிமாற்றத்துக்கு பின் பாலியல் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லதல்ல.

முடிவுரை:

கடைசியாக, நல்லதையே நம்புங்கள் ஆனால் தீமைக்கும் தயாராக இருங்கள். இரண்டு வார காத்திருப்பு, கருவுறுதல் சிகிச்சையில் உள்ள மிகக் கடினமான பகுதியாக சொல்லப்படுகிறது. ஆனால் இது காத்திருக்க தகுதியான காலம் ஆகும்.

மேற்கண்ட குறிப்புகள், இரண்டு வார காத்திருப்பு காலத்தை நீங்கள் கடக்கவும் சமாளிக்கவும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

Write a Comment