Embryo Transfer

உறைய வைக்கப்பட்ட எம்ப்ரியோ பரிமாற்றம் என்றால் என்ன?

உறைய வைக்கப்பட்ட எம்ப்ரியோ பரிமாற்றம் என்றால் என்ன?

Author: Dr. Hema Vaithianathan

பெற்றோர்த்துவம் என்பது வாழ்வின் அற்புதமான அனுபவங்களில் ஒன்று. இயற்கையான கருத்தரிப்பு சிலருக்கு வாய்க்கலாம். அதே சமயம், சிலர் பெற்றோர்கள் ஆக IVF போன்ற இனப்பெருக்க தொழில்நுட்பங்களின் துணை தேவைப்படலாம். தங்கள் பெற்றோர்த்துவ கனவை அடைய IVF ஐ கையாளும் தம்பதியினர், அதில் உள்ள செயல்முறைகளை தெளிவாக புரிந்து கொள்வது அவசியம். ஒட்டுமொத்த சிகிச்சை பயணத்தையும் மேற்கொள்வதற்கான தைரியத்தை பெற, புதிய எம்ப்ரியோ பரிமாற்றம் மற்றும் உறைய வைக்கப்பட்ட எம்ப்ரியோ பரிமாற்றம் (FET) ஆகியவற்றைப் பற்றிய அறிவு அவசியம்.

ஒரு IVF சிகிச்சையில், பெண்ணிலிருந்து பெறப்பட்ட கருமுட்டைகளும், ஆணிலிருந்து பெறப்பட்ட விந்தணுக்களும் IVF செயல்முறை மூலம் தானாகவே கருவுறச் செய்யப்படும் அல்லது ICSI செயல்முறையில் ஒரே ஒரு விந்தணு நேரடியாக கருமுட்டைக்குள் செலுத்தப்பட்டு எம்ப்ரியோ உருவாக்கத்திற்காக மிகவும் கவனமாக வளர்க்கப்படும். இந்த எம்ப்ரியோவை, கருமுட்டையை பெற்றதிலிருந்து 3 அல்லது 5 நாட்களுக்குள் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தலாம், அல்லது அதை உறைய வைத்து, பல்வேறு காரணிகளைப் பொறுத்து சில வாரங்கள், மாதங்கள், அல்லது வருடங்களுக்குப் பின் கருப்பைக்குள் செலுத்தலாம். உறைய வைக்கப்பட்ட எம்ப்ரியோ பரிமாற்றம் செயல்முறை, கால அளவு, மற்றும் வெற்றி விகிதம் ஆகியவற்றை புரிந்து கொள்வோம்.

FET யாருக்கு தேவைப்படுகிறது?

  • கருப்பை மிகை தூண்டல் நோய்க்குறி (OHSS) ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள சில பெண்களில், IVF இன் போது ஏற்படும் ஹார்மோன் தூண்டலின் காரணமாக, FET பரிந்துரைக்கப்படுகிறது. இதில் எம்ப்ரியோக்கள் அதே சுழற்சியில் பரிமாற்றம் செய்யப்படாமல், பரிமாற்றத்துக்கு ஏற்ற சூழல் வரும்போது பின்னர் அவற்றை பரிமாற்றம் செய்வதற்காக உறைய வைக்கப்படுகின்றன.
  • 35 வயதுக்கு மேற்பட்ட தம்பதியினருக்கும், PGT (கருப்பதித்தலுக்கு முந்தைய மரபணு சோதனை) தேவைப்படும் மரபணு கோளாறுகளை உடைய தம்பதியினருக்கும், உறைய வைக்கப்பட்ட எம்ப்ரியோ பரிமாற்றம் தேவை. PGT இல், எம்ப்ரியோவில் இருந்து எடுக்கப்பட்ட சில செல்களில் குரோமோசோம் கோளாறுகள் இருக்கிறதா என சோதித்து, ஆரோக்கியமான எம்ப்ரியோக்கள் மட்டும் எம்ப்ரியோ பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும்.
  • புற்றுநோய் கண்டறியப்பட்ட பெண்களுக்கு, புற்றுநோய் சிகிச்சைக்கு முன்னர் எம்ப்ரியோக்களை உறைய வைத்து, கருத்தரிக்க பிற்காலத்தில் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • பெற்றோர்த்துவத்தை தள்ளிப்போட விரும்பும் தம்பதியினர், அவர்களின் கருவுறும் ஆற்றல் வயதாக ஆக குறையும் என்பதால், அதை பாதுகாக்க தங்கள் எம்ப்ரியோக்களை உறைய வைத்துக் கொள்ளலாம்.
  • சில தம்பதியினரில் அதிகளவு எம்ப்ரியோக்கள் உருவாகும்போது, கூடுதலாக உள்ள எம்ப்ரியோக்களை உறைய வைத்து, தம்பதியினர் தங்கள் குடும்பத்தை விரிவுபடுத்த விரும்பினால், மீண்டும் பிற்காலத்தில் கருத்தரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

FET எப்படி வேலை செய்கிறது?

IVF செயல்முறையின்போது, ஆணிலிருந்து பெறப்பட்ட விந்தணுக்களும் பெண்ணிலிருந்து பெறப்பட்ட கருமுட்டைகளும் கருவுற்ற பின்னர், உருவாகிய எம்ப்ரியோவை அதே நாளில் உறைய வைக்கலாம், அல்லது மூன்றாம் நாள் வரை வளரவிட்டு (பிளவு நிலை எனப்படும்) மூன்றாவது நாளில் உறைய வைக்கலாம், அல்லது ஐந்தாம் நாள் வரை வளரவிட்டு (பிளாஸ்டோ சிஸ்ட் எனப்படும்) ஐந்தாம் நாளில் உறைய வைக்கலாம்.

FET ஆனது 2 முறைகளில் இருக்கலாம்;

  1. இயற்கை சுழற்சி FET
  2. ஹார்மோன் மாற்ற சிகிச்சை (HRT) சுழற்சி


இயற்கை சுழற்சி உறைய வைக்கப்பட்ட எம்ப்ரியோ பரிமாற்றம் செயல்முறை :

  • ஒரு வெற்றிகரமான கருத்தரிப்புக்கு (எண்டோமெட்ரியம் எனப்படும்) கருப்பை சுவரின் தடிமன் ஒரு முக்கிய அளவுறு ஆகும்.
  • இந்த செயல்முறையில், எண்டோமெட்ரியத்தின் உருவாக்கத்துக்கு எந்த ஹார்மோனும் வழங்கப்படாது. பெண்ணின் அண்டவிடுப்பானது, ஸ்கேன், இரத்த/சிறுநீர் பரிசோதனை மூலம் கண்காணிக்கப்பட்டு, கருப்பதித்தலுக்கு உகந்த காலத்தை பொறுத்து (கருப்பை ஒரு எம்ப்ரியோவை ஏற்கத் தயாராகும் காலம்) எம்ப்ரியோ பரிமாற்றம் செய்யப்படும். எம்ப்ரியோ பரிமாற்றத்துக்கு ஒரு குறிப்பிட்ட நாளை நிர்ணயித்து, அந்த நாளில் எம்ப்ரியோவானது உருக்கப்பட்டு பெண்ணின் கருப்பைக்குள் வைக்கப்படும்.

ஹார்மோன் மாற்ற சிகிச்சை சுழற்சி:

சீரற்ற சுழற்சிகளை உடைய பெண்களுக்கு வழக்கமாக இந்த செயல்முறை பரிந்துரைக்கப்படும். இயற்கை சுழற்சியைப் போல இல்லாமல், எண்டோமெட்ரியத்தின் தடிமனை அதிகரிக்க, இங்கு ஈஸ்ட்ரஜன் மற்றும் புரொஜஸ்ட்ரோன் மருந்துகள் வழங்கப்படும். சாதகமான சூழல் நேரிடும் போது, கருப்பைக்குள் எம்ப்ரியோ பரிமாற்றம் செய்யப்படும்.

 

உறைய வைக்கப்பட்ட எம்ப்ரியோ பரிமாற்றம் காலளவு:

செயற்படி 1: ஹார்மோன் சிகிச்சை

எம்ப்ரியோ பரிமாற்றத்திற்காக கருப்பையின் உட்சுவரை தடிமனாக்க, ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் மருந்துகள் வழங்கப்படும். கருப்பதித்தலுக்கு (கருப்பையுடன் எம்ப்ரியோவை இணைத்தல்) கருப்பையை தயார்படுத்த புரொஜஸ்ட்ரோன் துணையும் அவசியம்.

செயற்படி 2: ஸ்கேன்கள் மூலம் கண்காணித்தல்

கருப்பதித்தலுக்கு கருப்பை தயாராக உள்ளதா என்பதை அறிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள்/இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும்.

செயற்படி 3: எம்ப்ரியோ பரிமாற்றம்

எம்ப்ரியோ உருக்கப்பட்டு தொடர்ந்து வளர பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும்.

செயற்படி 4: கர்ப்ப பரிசோதனை

2 வாரங்களுக்கு பின், கர்ப்ப உறுதி பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

ஒற்றை எம்ப்ரியோ பரிமாற்றம் என்றால் என்ன?

வழக்கமாக, சமீப காலம் வரையில் 2 அல்லது 3 ற்கு மேற்பட்ட எம்ப்ரியோக்கள் கருத்தரிப்பு வாய்ப்புகளை அதிகரிக்க பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டன. இருப்பினும், கர்ப்ப கால நீரிழிவு நோய், ப்ரீஎக்லாம்ப்சியா, குறை பிரசவம், மற்றும் தாய்க்கும் கருவுக்கும் பிற சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய பல கருக்கள் உருவாக்கும் அபாயம் இந்த செயல்முறையில் உள்ளது. அதிகமான

கருத்தரிப்புகள் ஏற்படும் அபாயத்தை குறைக்க, PGT (கருப்பதித்தலுக்கு முந்தைய மரபணு சோதனை) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள், பரிமாற்றத்திற்கான சிறந்த எம்ப்ரியோவை தேர்ந்தெடுக்க உதவுகின்றன. இந்த முறையின் மூலம், ஒரே ஒரு ஆரோக்கியமான எம்ப்ரியோ பரிமாறப்படும். இதன் மூலம் சிக்கல்கள் குறையும். இந்த செயல்முறையானது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றை எம்ப்ரியோ பரிமாற்றம் எனப்படும்.

ஒற்றை எம்ப்ரியோ பரிமாற்றத்தின் நன்மைகள்:

  • 1 ஆரோக்கியமான எம்ப்ரியோவை தேர்ந்தெடுக்க உதவுகிறது
  • கருச்சிதைவு அபாயத்தை குறைக்கிறது
  • பல கருக்கள் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது

புதிய மற்றும் உறைய வைக்கப்பட்ட எம்ப்ரியோ பரிமாற்றத்தின் வேறுபாடு:

புதிய எம்ப்ரியோ பரிமாற்றத்தில், எம்ப்ரியோவானது கருமுட்டைகளை சேகரித்ததிலிருந்து 3 அல்லது 5 நாட்களுக்குள் அதே மாதவிடாய் சுழற்சியில் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படுவதால், கருத்தரிப்பு விரைவில் நிகழும். உறைய வைக்கப்பட்ட எம்ப்ரியோவானது, அடுத்தடுத்த மாதவிடாய் சுழற்சியில், பரிமாற்றத்திற்கான சூழல் சாதகமாக இருக்கும்போது பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும்.

எம்ப்ரியோ பரிமாற்றத்தின் வெற்றி விகிதம்

புதிய எம்ப்ரியோ பரிமாற்றத்தை விட உறைய வைக்கப்பட்ட எம்ப்ரியோ பரிமாற்றமானது அதிகளவு வெற்றி விகிதங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், எம்ப்ரியோ பரிமாற்றத்தின் வெற்றி விகிதம் பல காரணிகளை பொறுத்து மாறுபடலாம்.

  • வயது
  • மலட்டுத்தன்மையின் வகை
  • விந்தணுவின் தரம்
  • கருமுட்டையின் தரம்
  • எம்ப்ரியோ தரம்
  • கருப்பையின் ஏற்பு திறன்
  • வாழ்க்கை முறை காரணிகள்

வெற்றிகரமான FET க்கான குறிப்புகள்:

ஒருவர் உறைய வைக்கப்பட்ட எம்ப்ரியோ பரிமாற்ற சுழற்சியை மேற்கொள்வதற்கு முன்னர், தன் உடலையும் மனதையும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • சரியான உணவு முறையை மேற்கொள்ளவும்:
    சமநிலையான உணவு முறை, உறைய வைக்கப்பட்ட எம்ப்ரியோ பரிமாற்ற செயல்முறைக்கு உங்கள் உடலை தயார்படுத்த உதவி, சீரான எடையை பராமரிக்கவும் உதவுகிறது.
  • வாழ்க்கை முறை தேர்வுகள்:
    சரியான தூக்க முறை, தொடர் உடற்பயிற்சி, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதை நிறுத்துதல், மற்றும் நல்ல மன சமநிலையை கொண்டிருத்தல், வெற்றிகரமான IVF விளைவுகளுக்கு உதவலாம்.
  • மருந்துகள்:
    சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

பெற்றோர்த்துவத்தை அடைய ஒரு முழுமையான அணுகுமுறை தேவைப்படுகிறது. சிகிச்சையை பற்றிய தெளிவு, அதை நம்புதல், மற்றும் தன் துணைக்கு ஆதரவளித்தல் போன்றவை நீங்கள் சிக்கல் இல்லாமல் IVF சிகிச்சையை மேற்கொள்ள உதவுகிறது. இனிய பெற்றோர்த்துவத்தை அடையுங்கள்!

Was this article helpful?
YesNo

fill up the form to get a

Free Consultation

Your data is 100% safe with us.

Avail 0% interest on EMI
All Procedures | No Upper Limit

How we reviewed this article:

HISTORY SOURCES
  • Current Version
  • January 22, 2025, 12:14 pm by Oasis Fertility
  • January 22, 2025, 12:13 pm by Oasis Fertility
  • January 22, 2025, 12:12 pm by Oasis Fertility
  • January 22, 2025, 12:10 pm by Oasis Fertility
  • January 22, 2025, 12:10 pm by Oasis Fertility
  • January 30, 2024, 11:46 am by Oasis Fertility
  • January 30, 2024, 11:35 am by Oasis Fertility

LatestTrending

Ad

BOOK A FREE CONSULTATION

Book

Appointment

Call Us

1800-3001-1000