Sleep

கவனத்தில்கொள்ளுங்கள்! தூங்குவதற்கு நீங்கள்கடைபிடிக்கும் வழக்குமுறை நீங்கள் தந்தையாவதற்கான சாத்தியக்கூறை குறைக்கலாம்

கவனத்தில்கொள்ளுங்கள்! தூங்குவதற்கு நீங்கள்கடைபிடிக்கும் வழக்குமுறை நீங்கள் தந்தையாவதற்கான சாத்தியக்கூறை குறைக்கலாம்

கவனத்தில்கொள்ளுங்கள்! தூங்குவதற்கு நீங்கள்கடைபிடிக்கும் வழக்குமுறை நீங்கள் தந்தையாவதற்கான சாத்தியக்கூறை குறைக்கலாம்

இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது, இல்லையா? ஆனால், அது ஒரு நிதர்சனமான உண்மை. ஆண்கள் மற்றும் பெண்கள் என இருசாராரிடத்திலும் கருவளமின்மை பிரச்சினைகள் பெருமளவு அதிகரித்துள்ளன. இந்தியாவில் ஆண்களிடம் கருவளமின்மை குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துள்ளது. கருவளம் குறைவதற்கு வாழ்வியல் முறைகள் பெரும் காரணமாக விளங்குகின்றன. நிறைய ஆண்கள் இரவு பணி நேரத்தை மேற்கொள்ளவேண்டிய சூழலில், அவர்களது தூக்க சுழற்சிமுறை மற்றும் circadian rhythm (தூக்க-விழிப்பு சுழற்சிநிலையை ஒழுங்கமைக்கும் உள்செயல்பாடு)பாதிப்புக்கு உள்ளாகின்றன. கருவளம் சார்ந்த விஷயங்களில் தூக்கம் பெரும் பங்குவகிக்கிறது. தூக்கம்-விழிப்பு சுழற்சி நிலையில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றங்கள் உடல்பருமன், குறைவான உடல்செயல்பாடு மற்றும் இன்னும் பல பிரச்சினைகளுக்கு இட்டுசென்றுள்ளன.

தூக்கம் எப்படி கருவளத்தை பாதிக்கின்றது?

ஒரு சீரான தூக்கவழக்குமுறை ஒருவரது உடல்நலத்திற்கு மிக முக்கியமாகும். ஆனால் உலகமயமாக்கம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் காரணமாக,  இரவு பணி நேரத்தை மேற்கொள்ளும் ஆண்களின் விழுக்காடு அதிகரித்துள்ளது. பொருந்தாத நேரங்களில் பணி செய்வது வாழ்வியலை முறைகேடாக புரட்டிப்போட்டுள்ளது. உதாரணமாக, பின்னிரவில் உணவு உண்பது, சத்தில்லாத உணவுகளை சாப்பிடுவது மற்றும் உடல் அசைவு இல்லாத சோம்பலான வாழ்வை வாழ்வதும் கூட காரணங்களாகும். ஆனால் போதிய தூக்கம் இன்மை அல்லது ஒழுங்குமுறையற்ற தூக்க வழக்குமுறை,ஆண்களின் கருவளசாத்திய கூறுகளை பாதிப்படைய செய்கிறது என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை.

தூங்கும் வேளைகளில் Testosterone உற்பத்தி நிகழ்கிறது. போதிய அளவு தூக்கம் இல்லாமல் இருக்கும்போது, Testosterone உற்பத்தி அளவில் குறைவு ஏற்படுகின்றது. இந்த ஹார்மோன் அளவு குறைவது ஒருவரது உடலுறவு ஆர்வத்தை குறைக்கிறது. அது விந்தணு தரத்தையும் பாதிக்கின்றது. நெடுநேரம் கழித்து பின்னிரவில் தூங்குவது உடன் புகைபழக்கம் மற்றும் குடிபழக்கமும் தொடர்புகாரணங்களாகி விந்தணு எண்ணிக்கை அளவை எதிர்மறையாக பாதிக்கின்றன. மிக அதிக தூக்கமோ அல்லது மிக குறைவான தூக்கமோ கருவளத்தன்மையை பாதிக்கலாம். 7-8 மணிநேரம் தூக்கம் நல்ல உடல்நலத்தை பேணுவதற்குமட்டுமல்ல, சிறந்த கருவளத்தன்மையை கொண்டிருப்பதற்கும் அவசியமாகும்.

 கருவளத்தன்மையை மேம்படுத்திக் கொள்வதற்கு ஒருவர் என்ன செய்யவேண்டும்?

  • நீங்கள் தந்தையாவதற்கான பயணத்தை திட்டமிட்டு இருக்கிறீர்கள் என்றால், இரவு பணி நேரங்களை தவிர்க்கவும்.
  • தூங்குவதற்கு ஒழுங்கு முறையான பழக்கவழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்(தினசரி தூங்குவது மற்றும் விழித்துஎழுவது ஒரே நேரமாக இருக்கட்டும்)
  • காஃபி அருந்துதலை குறைத்துக்கொள்ளவும்.
  • உங்கள் தினசரி பழக்கவழக்கங்களின் ஒரு பகுதியாக உடற்பயிற்சியை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
  • மனநலத்திற்கு உரிய கவனிப்பு வழங்குங்கள்
  • ஆக்சிஜின் ஏற்றதடுப்புதன்மை நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்(சதைகனிகள், பூசனிக்காய், காலிஃபிளவர், பாதாம், பிஸ்தாபருப்பு வகைகள்)
  • உங்கள் உடல் எடை குறித்துகவனம் கொள்ளுங்கள்.
  • மது அருந்துதலை குறைத்துக்கொள்ளவும்
  • போதிய அளவு விட்டமின் டி சத்து உட்கொள்ளுங்கள்
  • புகைபிடித்தலை கைவிடவும்

தந்தையாவதற்கான பயணத்தில் உங்களுக்கு பிரச்சினை்கள் இருந்தால், ஆண்களுக்கான கருவள வல்லுனரிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். கருவளத்தன்மையை மேம்படுத்திக்கொள்ள வாழ்வியல் மாற்றங்கள் பெருமளவு துணைபுரியும். தந்தையாவதற்கான உங்கள் கனவை நனவாக்க, கருவளமின்மையிலிருந்து மீள்வதற்கு உதவும் மைக்ரோ-TESA,  மைக்ரோவேரிக்கோசெலிக்டோமி, TESA, PESA, முதலான பல அதி நவீன சிகிச்சை முறைதெரிவுகள் கிடைக்கப்பெறுகின்றன.

Was this article helpful?
YesNo

fill up the form to get a

Free Consultation

Your data is 100% safe with us.

Avail 0% interest on EMI
All Procedures | No Upper Limit

How we reviewed this article:

HISTORY
  • Current Version
  • December 13, 2021 by Oasis Fertility

LatestTrending

Ad

BOOK A FREE CONSULTATION

Book

Appointment

Call Us

1800-3001-1000