Blog
Enquire Now
Uncategorized

பெண்களில் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் கருவளமின்மை

பெண்களில் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் கருவளமின்மை

உடலியக்க செயல்பாடுகள் முறையாக இருக்க ஹார்மோன்கள் முக்கியகாரணமாகும். மனித உடலில் 50ற்கும் மேற்பட்டகண்டறியப்பட்ட ஹார்மோன் வகைகள் இரத்த ஓட்டத்தில் கலந்து உடலியக்க செயல்பாடுகள் மற்றும் பல்வேறு உடலியக்க அமைப்புகளையும் முறைபடுத்துகின்றன. வளர்சிதைமாற்றம், வெப்பநிலைசீராக்கம்,   மற்றும்வளர்ச்சி போன்றவை இச்செயல்பாடுகளுள் உள்ளடங்கும். ஹார்மோன்களின் தன்மை அல்லது அளவில் வழக்குநிலைக்குமாறாக நிலவும் எந்த ஒரு மாற்றமும் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். ஹார்மோன்கள் சுரக்கும் நேரமும் மற்ற ஹார்மோன்களோடு அவை ஒருங்கிணைந்து செயல்படுவது முக்கியமாகும்.

பெண்களில் கருவளத்தன்மையை பராமரிக்க பல்வேறு ஹார்மோன்கள் காரணமாக இருக்கின்றன. இவ்ஹார்மோன்கள் எந்தஒன்றிலேனும் சமநிலையின்மை காணப்பட்டால் அதுகருத்தரிப்பதில் சிரமத்தைஏற்படுத்தும். கருத்தரிக்கவேண்டும் என்று நீண்டகாலமாக நீங்கள் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது குழந்தை பெற இப்போதுதான் திட்டமிடுகிறீர்கள் என்றாலும் உங்கள் ஹார்மோன் லெவல்கள் இயல்புநிலையில் இருப்பதை முன்பாக அறிந்துக்கொள்வது பயனுடையதாக இருக்கும்.

கருவளதன்மையின் மீது ஹார்மோன்களின் தாக்கம்:

1. ஃபாலிக்கிள்ஸ்டிமுலேட்டிங்ஹார்மோன்(FSH)
சீரான மாதவிடாய் சுழற்சிக்கு இந்த ஹார்மோன் முக்கியகூறாகும். கருவகத்தில் உள்ள கருமுட்டைகள் முதிர்ச்சிநிலை அடைய இது தூண்டுதலாக இருந்து உதவுகிறது. கருவகசெயல்பாட்டில் குறைபாடு நிலவும் பெண்களுக்கு மிக அதிக அளவில் FSH காணப்படும். கருவகசெயல்பாட்டின் குறைபாட்டை ஈடுகட்ட உடலானது முயற்சிப்பதால் இவ்வாறு ஏற்படுகிறது.

2. லுட்டெய்னிசிங் ஹார்மோன் (LH)
கருமுட்டை வெளியீட்டின்போது முதிர்ச்சிநிலை அடைந்த முட்டைகளை வெளியிட லுட்டெய்னிசிங் ஹார்மோன் காரணமாக இருக்கிறது. கருமுட்டை வெளியீட்டை கணிக்கும் பெரும்பாலான கிட்டுகள் இந்த ஹார்மோனை பயன்படுத்துகின்றன, காரணம், இவை கருமுட்டை வெளியீட்டை அதிகரிக்கின்றன.

3.ஆன்ட்டி-முலேரியன் ஹார்மோன்(AMH) 
முதிர்ச்சிநிலை அடையாத கருமுட்டைகளை கொண்டிருக்கும் கருவகநுண்ணறை(ovarian follicles) ஆன்ட்டி-முலேரியன் ஹார்மோன்களை உற்பத்திசெய்கிறது. இந்த ஹார்மோன்களது அளவுநிலை கருவகத்தில் எஞ்சியுள்ள கருமுட்டைகளின் எண்ணிக்கையை கணிக்க உதவுகிறது. குறைந்த AMH கருவளமின்மையை சுட்டிக்காட்டும் குறியீடாக இருக்கலாம்.

4. ஈஸ்ட்ரோஜென்
பெண்களில் முதன்மைநிலை மற்றும் இரண்டாம்நிலை பாலுணர்வுஇயல்புகளின் வளர்ச்சி மற்றும் முறைபடுத்தலுக்கும், இனபெருக்கத்திற்கான உடலியக்க அமைப்பையும் ஆதரித்து செயல்படும் ஹார்மோனாக இருப்பது ஈஸ்ட்ரோஜென் ஆகும். ஈஸ்ட்ரோஜென் ஆதிக்கம் மேலோங்கி இருப்பது கருத்தரிப்பை கடினமாக்குவதாக சில சூழல்களில் கண்டறியப்பட்டிருக்கிறது.

5. ப்ரோஜிஸ்டிரோன்
உண்டான கருவை பராமரிக்க ப்ரோஜிஸ்டிரோன் ஹார்மோன் ஒரு முக்கிய கூறாகும். அது கருப்பை உட்சுவர் பூச்சை தடிமனாக்கி முளைகரு வளர உதவுகிறது. ப்ரோஜிஸ்டிரோன் அளவுநிலை குறைவாக உள்ள பெண்களுக்கு கருக்கலைவு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

6.தைராய்டு ஹார்மோன்கள்
தைராய்டு ஹார்மோன்களில், T3 மற்றும் T4 ஆகியவையே இனபெருக்கத்துடன் தொடர்புடையவை. உணவு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதம் ஆகியவற்றின் மீது இவை ஒருதாக்கத்தை ஏற்படுத்தும். தைராய்டு ஹார்மோன் சமநிலையற்று இருந்தால் கருத்தரிப்பதில் உங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படலாம்.

7. ப்ரோலாக்ட்டின்
தாய்பால் உற்பத்தியாவதற்கு ப்ரோலாக்டின் ஹார்மோன் அவசியமாகும். ஆனால், அதை மட்டுமே அது செய்வதில்லை. பெண்கள் கருத்தரிப்பதற்கான ஆரம்பநிலை செயல்பாட்டில் பங்குவகிக்கிறது. உங்களது ப்ரோலாக்டின் அளவுநிலை வழக்குநிலைக்கு மாறாக இருந்தால்-, மாதவிடாய் காலம் சீரானதாக இருக்காது மற்றும் கருமுட்டை வெளியீட்டிலும் சிக்கல் இருக்கும்.

கருவளத்தை பாதிக்கும் ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறிகள்
ஹார்மோன் சமநிலையின்மையை அனுபவிக்கின்ற பெரும்பாலான பெண்கள், கீழ்காணப்படும அறிகுறிகளுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவைகளை அனுபவிக்கலாம்.  பலருக்கும் எந்தவித புற அடையாள அறிகுறிகள் காணப்படாது. இந்த அறிகுறிகளை நோய்கண்டறிதல் பரிசோதனையாக கருதிசுயபரிசோதனை மேற்கொள்ளக்கூடாது.

  • சீராக இல்லாத மாதவிடாய் சுழற்சிகாலம்
  • மாதவிடாயின் போது முறையாக இல்லாத இரத்தப்போக்கு அல்லது இரத்தகசிவு
  • முகத்தில் முளைக்கும்முடி
  • முகப்பரு
  • ஆண்களை போன்ற முடி அமைப்பு அல்லது முடிகொட்டுதல்
  • எடை அதிகரிப்பு
  • அடிக்கடி நிகழும் மனநிலைமாற்றம்

கருவளமின்மைக்கு இட்டுச்செல்லும் ஹார்மோன் சமநிலையின்மைக்கான காரணங்கள்
கருவளமின்மையை ஏற்படுத்தும் ஹார்மோன் சமநிலையின்மைக்கான பொதுவான காரணங்கள் அல்லது கருத்தரிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் ஆவது.

  • அன்ஓவுலேஷன்(கருமுட்டை வெளியீடாகாத நிலை)

இந்த நிலையில்,பெண்ணின் கருவகம் கருமுட்டைகளை வெளியிடாமல் இருக்கிறது.

  • பாலிசிஸ்டிக்ஓவரி குறைபாடு

PCOS நிகழ்வின்போது ஹார்மோன் குறைபாடு காரணமாக கருமுட்டைகள் முதிர்ச்சிநிலை அடையமல் இருந்து அவை நீர்கட்டியாகிறது. இது கருத்தரிப்பதை பொதுவாக கடினமாக்கும். கருவளமின்மையையும் ஏற்படுத்தலாம்.

  • ஹைப்பர்ப்ரோலாக்டினேமியா

இந்தநிலையில், பெண்ணின் உடலில் அதிகப்படியான ப்ரோலாக்டின் இருக்கிறது. குறித்த காலத்தில் சீராக இல்லாத மாதவிடாய்சுழற்சிகாலம் மற்றும் கருவளமின்மை ஏற்படுகிறது.

ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுத்தும் கருவளமின்மைக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

கருவளமின்மையை ஏற்படுத்தும் ஹார்மோன் மற்றும் அனுபவிக்கும் அறிகுறிகளின் அடிப்படையில் உங்களது கருவளநிபுணர் கீழ் கண்டவற்றை நிலைநாட்ட மருந்துகளைகையாள்வார்.

  • மாதவிடாய்சுழற்சிகாலம் சீராக இருப்பது
  • கருமுட்டைகள் வெளியீட்டை தூண்டுவது
  • தைராய்டு செயல்பாடு இயல்புநிலையாக இருப்பது
  • ப்ரோலாக்டின் லெவல்களை வழக்குநிலைக்கு கொண்டுவருவது

உங்கள் கருவளநிபுணர் வாழ்வியல் முறைமாற்றங்களையும் பரிந்துரைசெய்வார். கருவளத்தை அதிகரிக்க எடைகுறைப்பையும் ஊக்குவிப்பார்.

உங்களது கருவளமின்மைக்கு ஹார்மோன்கள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகித்தால், ஒயாசிஸ் ஃபெர்ட்டிலிட்டியில் உள்ள உங்கள் கருவள நிபுணரிடம் ஆலோசிக்கவும்.

Write a Comment