Blog
Uncategorized

கருச்சிதைவு? அடுத்தது என்ன? 

கருச்சிதைவு? அடுத்தது என்ன? 

பிறக்கப்போகிற குழந்தையை கட்டி அணைக்கும் கனவுகளை அழிப்பதும்,
வாங்கி வைத்த பலவண்ண ஆடைகளையும், அழகிய சட்டைகளையும், கையுறைகளையும் மறப்பதும் எளிதல்ல.
இவையெல்லாம் நிஜமாயிருந்தும், இப்பொழுது எல்லாம் வெறும் கனவாய் போனது!

20 வாரங்களுக்கு முன் இழந்துபோகும் கர்ப்பம் கருச்சிதைவு எனப்படும். கருச்சிதைவு என்பது எதிர்பார்த்து இருக்கும் பெற்றோருக்கு மிகவும் வலி மிகுந்த அனுபவமாகும். எதிர்பார்த்து இருக்கும் பெற்றோர் தங்கள் பிறக்கப்போகும் குழந்தையை பற்றி பல காரியங்களை திட்டமிட்டும் கற்பனை செய்தும் இருந்ததினால் அவர்களை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் குணப்படுத்துவதற்கு காலமாகும். அவர்கள் துக்கமும் வேதனையும் ஆறுதலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், கருச்சிதைவு என்பது வாழ்க்கையின் முடிவல்ல! தொடர் கருச்சிதைவுகளுக்கு பின்பு கூட குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது.

கருச்சிதைவை சமாளித்தல்:

வருத்தப்படுதல் முற்றிலும் இயல்பானது:

கருச்சிதைவை ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் பிறக்கவிருந்த குழந்தையை இழந்து போகும் வலி மிகுந்த பயணத்தில் நீங்கள் தனியாக இல்லை என்பதை உணர்வதும் மிகவும் முக்கியம். அழுகையும், ஏமாற்றமும், குழப்பமும் முற்றிலும் இயல்பானது. உங்கள் துக்கத்திலிருந்தும், வலியிலிருந்தும், வேதனையிலிருந்தும் விடுபட வழிகளை தேடிக்கொள்ளுங்கள்.

உங்கள் துணையோடு பேசுங்கள்:

ஒரு கருச்சிதைவுக்கு பின் குற்ற உணர்வு என்பது மிகவும் இயல்பானது. ஒருவருடைய கவனக்குறைவை அல்லது விதியை பழி கூறுவது அவசியமற்றது. உங்கள் துணையோடு, உங்களுக்கு உள்ள வலி மற்றும் இழப்பின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். பரிவு மற்றும் நிதானமாய் கவனித்தல் கணவனிடம் இருந்து தேவைப்படுபவை. ஒரு கருச்சிதைவுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனவே உங்களையே பழி கூறுவதை நிறுத்துங்கள்!

ஆதரவு குழு ஒன்றில் இணைந்து கொள்ளுங்கள்:

கருச்சிதைவை எதிர்கொள்ளும் தம்பதியருக்கு உதவ பல்வேறு மன்றங்கள் மற்றும் சமூகங்கள் இணையத்தில் உள்ளன. மற்றவர்களின் கருச்சிதைவு அனுபவங்களை கேட்கவும் பின்னர் அவர்களுடைய வெற்றிகரமான கர்ப்பங்களை தெரிந்து கொள்ளவும் அதன் மூலம் உங்கள் நம்பிக்கையை ஊக்குவித்து மேம்படுத்தவும் இது உதவுகிறது.

ஆலோசனை பெறுங்கள்:

உங்கள் நம்பிக்கையின்மையைவிட்டு வெளிவர முடியாமல் உங்கள் அன்றாட வாழ்க்கை அதனால் பாதிக்கப்பட்டால், உங்கள் துக்கத்திலிருந்து மீள, தியானம் அல்லது வேறு சில நுட்பங்களைக் கொண்டு உங்களுக்கு உதவக்கூடிய உளவியல் நிபுணர்/மருத்துவரோடு பேசுவது நல்லது.

கருவுறுதல் நிபுணரை நாடுங்கள்:

கருச்சிதைவு அசாதாரண குரோமோசோம்களால் வழக்கமாக ஏற்படும். கருச்சிதைவுகளுக்கான காரணங்களை தெரிந்துகொள்ள கருவுறுதல் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. மறுபடியும் கருவுற முயற்சிக்கும்போது நீங்கள் ஆலோசனையையும் நாடலாம்.

அடுத்தது என்ன?

உங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அழிக்கக்கூடிய மோசமான ஒன்று கருச்சிதைவு ஆகும். ஆனால் பொறுமையாக இருங்கள். சில விஷயங்கள் வர நேரம் எடுக்கும். நம்பிக்கையை இழப்பது தீர்வல்ல. ஆனால் சரியான திசையை நோக்கி சரியான முடிவு எடுப்பதே அவசியம்.

கருச்சிதைவுக்கான காரணங்கள்

தாயின் வயது மூப்பு, புகை பிடித்தல், உடல் பருமன், கட்டுக்குள் இல்லாத நீரிழிவு நோய் முதலியவை கருச்சிதைவு ஏற்படுவதற்கான முக்கிய காரணிகள் ஆகும். ஒரு பெண்ணின் வயது கூட கூட அவரின் கருமுட்டைகளினுடைய தரம் குறையும். மட்டுமல்லாமல், நீங்கள் 35 வயதிற்குப் பிறகு கருத்தரிக்க முயற்சித்தால் மற்றும் நீங்கள் PGT (Preimplantation Genetic Testing) சோதனைகள் போன்ற IVF சிகிச்சைகளில் இருந்தால், கருச்சிதைவு அபாயத்தை குறைக்கக்கூடிய, ஆரோக்கியமான கருக்களை தேர்ந்தெடுக்க உதவும் மேம்பட்ட மரபணு பரிசோதனைகள் மேற்கொள்ளலாம்.

கருத்தரிப்புக்கு முந்தைய ஆலோசனை/கருவுறுதல் ஆய்வு ஆகியவை, எங்கு பிரச்சனை உள்ளது என்பதை கண்டறிந்து, அடுத்த முறை வெற்றிகரமான கர்ப்பத்தை அடைய உதவுகிறது.

சில சமயங்களில் பெற்றோர்துவத்தை அடைவதற்கான பாதை கரடு முரடாக தோன்றலாம், ஆனால் அது முட்டுசந்தல்ல! நம்பிக்கையை விடாதீர்!

இனிய பெற்றோர்துவத்தை அடையுங்கள்!

Write a Comment

BOOK A FREE CONSULTATION