Blog
Uncategorized

கருவுறுதல் மருத்துவமனைக்கு செல்லும்போது, கருவுறுதல் நிபுணரிடம் ஒரு தம்பதியர் கேட்க வேண்டிய 10 கேள்விகள்

கருவுறுதல் மருத்துவமனைக்கு செல்லும்போது, கருவுறுதல் நிபுணரிடம் ஒரு தம்பதியர் கேட்க வேண்டிய 10 கேள்விகள்

கருவுறுதலில் பிரச்சனை உள்ள பல தம்பதியருக்கு கருவுறுதல் மருத்துவமனைக்கு செல்லுதல் என்பது ஒரு பெரும் அவதியாகும். கருவுற முடியாமலிருத்தல் என்பது துக்கத்தை தரக்கூடியதாகும். அவர்கள் கருவுறாததற்கான காரணம் என்னவென்று அறியாததாலும், அவர்கள் பெற்றோராவதற்கு அவர்களுக்கு உதவக்கூடிய கருவுறுதல் சிகிச்சைகளைப் பற்றி தெரியாததாலும், தம்பதியர்களை பயம் தொற்றிக் கொள்கிறது. சங்கடம், குற்ற உணர்வு மற்றும் நிச்சயமற்ற எண்ணங்கள் அவர்களை துன்புறுத்துகின்றன. ஆனால், கருவுறாமை பிரச்சினைகளைக் கடந்து வருவதற்கும், பெற்றோராவதற்கும், கருவுறுதல் நிபுணரை கலந்தாலோசித்தல் என்பது முக்கியமானதாகிறது. ஆகவே, அவர்களது ஆரம்ப கலந்தாலோசனையின்போது, ஒரு கருவுறுதல் நிபுணரை, ஒரு தம்பதியர் கேட்கக்கூடிய வினாக்களின் முழுத்தொகுப்பு இங்கு வழங்கப்பட்டுள்ளது.

1. கருவுறுதலிலிருந்து எங்களை எது தடுக்கிறது?

Diagnosis is the most essential step. When a couple visits a fertility centre, the initial step involves a series of blood tests, scans, taking note of the medical history of the couple, going through the previous medical and treatment records, understanding the current health condition, etc. Both the male and female partner undergo fertility checkup that allows the fertility specialist to diagnose the cause of infertility.

நோயறிதல் என்பது ஒரு மிகவும் முக்கியமான படிநிலையாகும். ஒரு தம்பதியர் ஒரு கருவுறுதல் மையத்திற்கு வரும்போது, இரத்தப் பரிசோதனை செய்தல், ஸ்கேன் எடுத்தல், தம்பதியரின் மருத்துவ வரலாற்றைப் பற்றி குறிப்பெடுத்தல், முந்தைய மருத்துவ மற்றும் சிகிச்சைப் பதிவேடுகளைப் பார்த்தல், தற்போதைய உடல்நிலையை புரிந்துகொள்ளுதல் ஆகியவை ஆரம்பப் படிநிலையில் அடங்கும். ஆண், பெண் இருவரும் கருவுறுதல் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், இது கருவுறாமையின் காரணங்களை அறிவதற்கு கருவுறுதல் நிபுணருக்கு உதவுகிறது.

2. வாழ்க்கைமுறை மாற்றங்கள் கருவுறுதலுக்கு உதவுமா?

சில நேரங்களில், எடையிழத்தல், உடற்பயிற்சி செய்தல், மற்றும் சரியான உணவு எடுத்துக்கொள்ளுதல் ஆகியவை இயற்கையாகவே தம்பதியரை கருவுறச் செய்கிறது. கருவுறுதல் சிகிச்சைகளின் வெற்றி விகிதத்தினையும் அது மேம்படுத்தலாம்.

3. நாங்கள் எந்தக் கருவுறுதல் சிகிச்சையினை செய்து கொள்ள வேண்டும்?

கருவுறுதல் சிகிச்சையைப் பொறுத்தவரையில் ஒரே விஷயம் அனைவருக்கும் பொருந்தாது. அண்டவிடுப்பின் தூண்டல், IUI போன்ற அடிப்படை சிகிச்சைகளிலிருந்து, IVF, ICSI, மரபணு சோதனை ஆகியவை போன்ற மேம்படுத்தப்பட்ட கருவுறுதல் சிகிச்சைகள் வரையில், தம்பதியரின் உடல்நிலை, வயது, வாழ்க்கை முறை மற்றும் பிற காரணங்களைப் பொறுத்து பல சிகிச்சைகள் உள்ளன, என்ன மாதிரியான சிகிச்சை அவர்கள் கருவுற உதவும் என்பதை தம்பதியர் தெரிந்து கொள்வது அவசியமாகும். சிகிச்சைக்கு செல்வதற்கு முன்பு, ஒட்டுமொத்த சிகிச்சை செயல்முறையைப் பற்றிய தெளிவு தம்பதியருக்கு இருக்க வேண்டும்.

4. சிகிச்சையின் வெற்றி விகிதம் என்ன?

சிகிச்சை செய்து கொள்வதற்கு முன்பு, அந்தக் குறிப்பிட்ட சிகிச்சைக்கான வெற்றி விகிதத்தினை தம்பதியர் அறிந்திருக்க வேண்டும். அவர்களது, வயது, உடல்நிலை, முட்டை மற்றும் விந்தணு தரம் ஆகியவற்றைப் பொறுத்து வெற்றி விகிதம் ஒரு தம்பதியரிலிருந்து மற்றொரு தம்பதியருக்கு மாறுபடும்.

5. கருவுறுதல் சிகிச்சைகளில் ஏதேனும் பக்கவிளைவுகள் உண்டா?

கருவுறுதல் சிகிச்சையின் பக்கவிளைவுகளை புரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகும். கருவுறுதல் மருந்துகள், சில பெண்களுக்கு, குமட்டல், வலி, மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். எனவே, சிகிச்சையை துவங்குவதற்கு முன்பு, சாத்தியமான பக்கவிளைவுகள் மற்றும் சிக்கல்கள் பற்றி தம்பதியர் விவரமாக அறிந்திருக்க வேண்டும்.

6. இரட்டைக் குழந்தை பெறுவதற்கான சாத்தியக்கூறு என்ன?

IVF சிகிச்சையில், சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாகலாம். பல குழந்தைகள் பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிப்பது, தம்பதியருக்கு பல வழிகளில் உதவலாம். ஒரு குழந்தை தரிப்பதற்கான வழிகள் உள்ளன என்றும் IVF எப்போதும் இரட்டை மற்றும் மூன்று குழந்தைகளுக்கு வழிவகுக்காது என்றும் அவர்களுக்கு தெரிய வேண்டும்.

7. எங்களால் கருத்தரிக்க இயலவில்லை என்றால், Donor சிகிச்சைக்கு வாய்ப்பு உள்ளதா?

சில தம்பதியருக்கு, கருவுறுவதற்கு Donor விந்தணுவோ அல்லது முட்டையோ தேவைப்படலாம். எனவே, அந்த மையத்தில் Donor சிகிச்சை சேவைகள் உள்ளனவா என்பதையும் சரிபார்க்கவும்.

8. அந்த கருவுறுதல் மருத்துவமனையில் கருப்பாதுகாப்பு (cryopreservation) சேவை வழங்கப்படுகிறதா?

IVF சிகிச்சையின்போது, பல கருக்கள் உருவாகலாம் ஆனால் அவையனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாது. எனவே, அந்தக் கருவுறுதல் மையமானது, குளிர் ஊட்டுக்கருவி சேவைகளை வழங்குகிறதா என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். அதிகப்படியான கருக்கள் திரவ நைட்ரஜனில் குளிர் ஊட்டப்பட்டு, மற்றொரு சமயம் கருவுறுதலுக்கு பயன்படுத்தப்படலாம்.

9. சிகிச்சைக்கு எங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும்?

கருவுறுதல் சிகிச்சை செய்து கொள்வதற்கு முன்பு செய்யவேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

10. சிகிச்சைக்கு என்ன செலவாகும்?

செலவு அம்சங்களில் தெளிவு பெறுவது மிகவும் இன்றியமையாததாகிறது. சில நேரங்களில், IUI அல்லது IVF-ன் ஒரேயொரு சுழற்சியில் வெற்றி கிட்டாமல் போகலாம். தம்பதியரின் நிலைமையைப் பொறுத்து, கருவுறுவதற்கு ஒரு சுழற்சிக்கு மேலும் ஆகலாம். செலவைப்பற்றி நியாயமாக தெரிந்திருத்தல், மனதளவிலும், நிதியளவிலும் கருவுறுதல் சிகிச்சைகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு தம்பதியருக்கு உதவியாக இருக்கும்.

உங்கள் அச்சங்களை மறந்துவிடுங்கள். கருவுறுதல் நிபுணரிடம் செல்லுங்கள், பெற்றோராவதற்கான உங்கள் பயணத்தினை நம்பிக்கையுடனும், நேர்மறை எண்ணத்துடனும் தொடங்குங்கள். மகிழ்ச்சியான பெற்றோவராதற்கு வாழ்த்துக்கள்!

Write a Comment

BOOK A FREE CONSULTATION