Blog
Enquire Now
Uncategorized

பெண்களில் கருவுறுதலை மேம்படுத்துவதற்கான கருவுறுதல் உணவுமுறை

பெண்களில் கருவுறுதலை மேம்படுத்துவதற்கான கருவுறுதல் உணவுமுறை

Author: S. Flora Amritha, Dietician

பெண்களில் மலட்டுத்தன்மை ஒரு சவாலான அனுபவமாக இருக்கலாம். கருவுறுதல் சிகிச்சைகளில் பல மேம்பாடுகள் இருந்தாலும், சில முழுமையான வழிகளை கையாள்வதன் மூலம் துணை புரியும் இனப்பெருக்க தொழில்நுட்ப சிகிச்சையின் தீவிரமான செயல்முறையை எளிதாக்கலாம். அத்தகைய ஒரு அணுகுமுறை தான் பெண்களில் கருவுறுதலை மேம்படுத்துவதற்கான உணவுமுறையை கையாள்வதாகும். “கருவுறுதல் உணவுமுறை” என்னும் கருத்து, சமீபகாலமாக பரவலாக பேசப்படும் ஒரு புதிய போக்காகும். அதை ஆராய்வதற்கு முன்னர், உணவுமுறைக்கும் கருவுறுதலுக்கும் இடையில் உள்ள தொடர்பையும், கருவுறுதலை மேம்படுத்துவதில் உணவுமுறையின் பங்கு என்ன என்பதையும் காண்போம்.

உணவுமுறைக்கும் கருவுறுதலுக்கும் இடையிலான தொடர்பு:

பல ஆய்வுகள் உணவுமுறைக்கும் கருவுறுதலுக்கும் இடையிலான தொடர்பை மதிப்பிட்டுள்ளன.

பல வருடங்களாக பெண் கருவுறுதலை மேம்படுத்துவதற்காக உணவுமுறையில் மாற்றங்களை கொண்டு வரும் முறை கையாளப்பட்டு வருகிறது. உணவுமுறையும் கருவுறுதலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருந்தாலும், அதன் நேர்மறை விளைவுகள் மலட்டுத்தன்மையை உடனடியாக சரி செய்யாது, ஒரே இரவில் பலன் கிடைக்காது.

பின்வரும் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ள சமநிலையான உணவு திட்டமானது, கருத்தரிக்க முயலும் பெண்களின் கருவுறுதலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

– ஃபோலிக் அமிலம்

– வைட்டமின் B12

– ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

சிறந்த விளைவுகளுக்கு உங்கள் துணையையும் இந்தத் திட்டத்தில் இணைத்துக்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வெளிப்படையாகவே நீங்கள் பார்க்கலாம்.

கருவுறுதல் உணவுமுறை என்றால் என்ன?

கருவுறுதல் உணவுமுறை ஒரு அதிநவீன உணவு திட்டம் அல்ல. இது, தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் சமநிலையாக நிரம்பியுள்ள பெண்களின் கருவுறுதலை மேம்படுத்தும் உணவுமுறையாகும். இது கருத்தரிப்பு வாய்ப்புகளையும், ஆரோக்கியமான கருத்தரிப்பையும் மேம்படுத்துகிறது.

உங்கள் கருவுறுதல் உணவுமுறை திட்டத்தை மேம்படுத்துவதற்கான வழி இங்கே:

– அதிகளவு ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள் (நெய், வெண்ணெய் பழம் போன்றவை), பதப்படுத்தப்பட்ட கொழுப்புகளை தவிர்க்கவும் (பாலாடைக்கட்டி போன்றவை).

– உங்கள் தட்டின் பெரும்பாலான பகுதியை காய்கறிகள், பழங்கள் மற்றும் தாவர புரதங்களைக் கொண்டு நிரப்பவும். (கொண்டைக்கடலை, நிலக்கடலை, போன்றவை). சிகப்பிறைச்சி உண்பதை குறைத்துக்கொள்ளவும்.

– கார்போஹைட்ரேட்டுகள் அவ்வளவு மோசமானது அல்ல. அதிகளவு நார்ச்சத்து நிறைந்த மற்றும் குறைவான கிளைசெமிக் குறியீட்டை கொண்ட (முழு தானியங்கள்) உணவுகளை உண்ணவும். பதப்படுத்தப்பட்ட அல்லது சாதாரண கார்போஹைட்ரேட்டுகளை நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

– பீன்ஸ், பருப்பு, டோஃபு, கரும்பச்சை கீரைகள், முழு தானியங்கள், விதைகள், கொட்டைகள் மற்றும் குறைவான கொழுப்பை உடைய பால்பொருட்கள் (கொழுப்பு நீக்கிய பால் மற்றும் தயிர்) போன்ற சைவ இரும்பு ஆதாரங்களை சேர்த்துக்கொள்ளவும்.

– தினமும் ஃபோலிக் அமில சப்ளிமெண்ட்களை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளவும்.

கருவுறுதல் உணவுமுறை” வேலை செய்யுமா?

உடல் எடை பிரச்சனைகளையும், கருவுறுதலையும் கர்ப்பத்தையும் எதிர்மறையாக தாக்கக்கூடிய எந்தவொரு ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் கையாள, இனப்பெருக்க அமைப்பின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு கருவுறுதலை மேம்படுத்தும் உணவுகள் அவசியமாகும்.

கருவுறுதல் உணவு முறையானது கர்ப்ப காலத்துக்கு முந்தைய ஊட்டச்சத்திற்கு தேவையான சீரான ஊட்டச்சத்து அளவுகளை பராமரிக்கவும் உதவுகிறது.

 

Fertility Boosting Foods

 

பெண் கருவறுதலை மேம்படுத்தும் உணவுகள் எவை?

பழங்கள் மற்றும் காய்கறிகள் முதல் முழு தானியங்கள் வரை கருவுறுதலை மேம்படுத்தும் பல்வேறு உணவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

முட்டைகள்

முட்டைகள் கருவுறுதலை மேம்படுத்தும் சிறந்த உணவாகும். அவற்றில் புரதங்கள், வைட்டமின்கள் B12 (ஃபோலிக் அமிலம்), வைட்டமின் E, ஜிங்க், மற்றும் குளோரின் நிரம்பியுள்ளன. குளோரின், பிறவி குறைபாடுகளை குறைத்து சரியான கரு வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.

அக்ரூட்

அக்ரூட்டில், அண்டவிடுப்பை மேம்படுத்த உதவும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.

பெர்ரிக்கள்

பெர்ரி பழங்களில், ஆக்சிஜனேற்ற தடுப்பான்கள் மற்றும் அழற்சி தடுப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை அழற்சியை குறைக்க உதவுகின்றன. இவற்றில் ஃபோலேட் மற்றும் வைட்டமின் C யும் நிறைந்துள்ளன.

வெண்ணெய் பழங்கள்

வெண்ணெய் பழங்கள், ஆரம்ப கர்ப்ப காலத்திற்கு தேவையான, வைட்டமின் K, உணவு நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், மற்றும் ஒற்றை நிறைவுறா கொழுப்புகள் எனப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ள சிறந்த உணவாகும். இவற்றில், வைட்டமின்களை நன்கு உறிஞ்சி, இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும் பொட்டாசியமும் அதிகளவு உள்ளது.

பால் பொருட்கள்

பால் பொருட்களில் புரதங்கள், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் A, E, மற்றும் D அதிகளவு உள்ளன. அண்டவிடுப்பின் காரணமாக ஏற்படும் மலட்டுத்தன்மை அபாயத்தை இவை குறைக்கின்றன.

பீன்ஸ் மற்றும் பருப்பு

பீன்ஸ் மற்றும் பருப்புகளில், ஃபோலேட் மற்றும் ஸ்பெர்மிடின் என்னும் ஊட்டச்சத்து அதிகளவு உள்ளன. ஸ்பெர்மிடின் நுண்ணறை வளர்ச்சியையும், கருமுட்டை முதிர்வடைதலையும் மேம்படுத்துவதில்

தொடர்புடையது. ஃபோலேட் கருப்பதித்தல் வாய்ப்புகளையும், துணை இனப்பெருக்கத்தின் மூலம் நேர்மறையான கருத்தரிப்பு வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.

முடிவுரை:

“கருவுறுதல் உணவுமுறை” என்னும் கருத்து, ஆரம்பத்தில் ஒரு புதிய உணவுமுறை அணுகலாக தோன்றலாம். ஆனால் ஒரு ஊட்டச்சத்து நிபுணருடன் இணைந்து திட்டமிடும்போது, இது மிகவும் அடிப்படையான உணவு திட்டமாகிறது. கருவுறுதல் உணவுமுறையானது ஆரோக்கியமான உணவு விருப்பங்களை தேர்ந்தெடுத்து, உங்கள் கருவுறுதல் பயணத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டியாகும். கருவுறுதலை மேம்படுத்தும் உணவுகளுடன், நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளும் உண்டு. உங்கள் கருவுறுதல் பயணம் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்கள் கருவுறுதல் நிபுணர்/உணவியல் நிபுணருடன் இன்றே ஆலோசியுங்கள்.

Write a Comment