Anti Mullerian Hormone

அதிகளவு ஏஎம்எச் உடன் கருத்தரிப்பது சாத்தியமா?

அதிகளவு ஏஎம்எச் உடன் கருத்தரிப்பது சாத்தியமா?

Author: Dr. V Ramya, Consultant & Fertility Specialist

கருத்தரிப்பை திட்டமிடும்போது, கருவுறக்கூடிய காலம், கருப்பை நிலைகள், கருமுட்டை மற்றும் விந்தணு ஆரோக்கியம், மற்றும் ஹார்மோன்கள் போன்ற பல்வேறு காரணிகள் கருத்தரிப்பில் பங்கு வகிக்கின்றன. அதில் ஒரு முக்கியமான ஹார்மோன் ஏஎம்எச் அல்லது முல்லேரியன் எதிர்ப்பு ஹார்மோன் ஆகும்.

முதலாவதாக, ஏஎம்எச் என்றால் என்ன?

இது எம்ஐஎஸ் – முல்லேரியன் தடுப்பு பொருள் என்றும் அழைக்கப்படுக்கிறது. இது கரு நிலையில் ஆண் மற்றும் பெண் பிறப்புறுப்பு வளர்ச்சிக்கான ஒரு அத்தியாவசியமான ஹார்மோன் ஆகும்.

ஆண்களில், ஏஎம்எச் விதைப்பைகளில் உருவாகிறது. ஆனால், இதற்கு மருத்துவ முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.

பெண்களில், ஏஎம்எச் கருப்பை நுண்ணறைகளில் உருவாகிறது. இது கருப்பை நுண்ணறைகளின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் உதவுகிறது.

ஏஎம்எச் பரிசோதனையின் பயன்கள்

  1. PCOD போன்ற பெண் இனப்பெருக்க ஆரோக்கிய பிரச்சனைகளைப் பற்றி அறிய ஏஎம்எச் பரிசோதனை உதவினாலும், முக்கியமாய் கருப்பை இருப்பை அளவிடும் உயிர் குறிப்பான்களாய் ஏஎம்எச் பயன்படுத்தப்படுகிறது. இது கருப்பையில் இருக்கும் கருமுட்டைகளின் எண்ணிக்கையை தோராயமாக கணக்கிட உதவுகிறது.
  2. பெண்கள் தங்கள் கருமுட்டைகளை உறைய வைக்கும் செயல்முறையை தீர்மானிக்க ஏஎம்எச் பரிசோதனை உதவுகிறது.
  3. ஏஎம்எச் அளவுகளைக் கண்காணிப்பதன் மூலம், இளம் பெண்களில் மாதவிடாய் சுழற்சி இன்மையைப் (அமினோரியா) பற்றி கண்டறியலாம்.
  4. IVF மற்றும் IUI போன்ற கருவுறுதல் சிகிச்சைகளின் விளைவுகளை கணிக்கவும் இது உதவுகிறது.
  5. இறுதி மாதவிடாயின் துவக்கத்தையும் கணிக்கிறது.
 

சரியான ஏஎம்எச் அளவுகள் என்ன?

ஏஎம்எச் அளவுகள் பெண்ணின் வயதைப் பொருத்து மதிப்பிடப்படுகிறது.

பருவ வயதில், ஏஎம்எச் அளவுகள் அதிகரிக்க தொடங்கி 25 வயதில் உச்சத்தை எட்டும். வயது ஆக ஆக எல்லா பெண்களிலும் இயற்கையாகவே ஏஎம்எச் அளவுகள் சரியும். எனவே குறைவான ஏஎம்எச் அளவுகள் குறைவான கருமுட்டை இருப்பையும் நேர்மாறாகவும் குறிக்கிறது.

நிலையான அளவுகள் மாறுபடக்கூடியவை. கீழ்காண்பவை ஏஎம்எச் அளவுகளுக்கான பொது வரம்புகள் ஆகும்.

  1. சராசரி: 1.0 ng/mL முதல் 4.0 ng/mL வரை (தோராயமாக).
  2. குறைவானது: 1.0 ng/mL -ற்கு கீழ்
  3. மிகக் குறைவானது: 0.4 ng/mL -ற்கு கீழ்
 

வயதின்படி ஏஎம்எச் அளவுகள்:

கீழ்காண்பவை அந்தந்த வயதினருக்கான தோராயமான குறைந்தபட்ச அளவுகளாகும்.

  1. 25 வயது: 3.0 ng/mL.
  2. 30 வயது: 2.5 ng/mL.
  3. 35 வயது: 1.5 ng/ mL.
  4. 40 வயது: 1 ng/mL.
  5. 45 வயது: 0.5 ng/mL.
 

ஏஎம்எச் அளவுகளும் கர்ப்பமும்:

ஏஎம்எச் அளவுகள் கர்ப்பத்திற்கான வாய்ப்புகளை பாதிக்கின்றன. கருவுறக்கூடிய 25-30 வயதுள்ள பெண்கள், 2.5 ng/mL முதல் 3.5 ng/mL வரைக்குள்ளான ஏஎம்எச் அளவுடன் இருந்தால், அவர்களின் கர்ப்பத்திற்கான வாய்ப்பு, வயதான மற்றும் குறைவான ஏஎம்எச் அளவுகளை உடையப் பெண்களை விட அதிகம்.

அதிகளவு ஏஎம்எச் நல்லதா?

அதிகளவு ஏஎம்எச் அளவுகள் நல்ல கருப்பை இருப்புடனும், அதிகளவு கருமுட்டைகளின் இருப்புடனும் தொடர்புடையதாய் இருந்தாலும், இது கருமுட்டையின் தரத்தைக் குறிக்காது. கருத்தரிப்பிலும் கருவுறுதல் சிகிச்சையின் விளைவிலும் பங்கு வகிக்கிற முக்கிய காரணி கருமுட்டையின் தரம் ஆகும். கருமுட்டைகளின் தரத்தை மதிப்பிட ஏஎம்எச் அளவுகளைப் பயன்படுத்த முடியாது.

அதிகளவு ஏஎம்எச், கருத்தரிப்பதற்கான நல்ல வாய்ப்புகளுக்கு வழிவகுக்க வேண்டிய அவசியமில்லை.

4.0 ng/mL -ற்கு மேல் ஏஎம்எச் அளவு இருந்தால், அது அசாதாரணமானது மற்றும் கவனிக்கப்பட வேண்டியது.

அசாதாரணமான அதிகளவு ஏஎம்எச், பாலிசிஸ்டிக் கருப்பை நோய்குறியை (PCOS) குறிக்கிறது. இது கருப்பைகளில் திரவம் நிரம்பின பைகள் இருப்பதால் ஏஎம்எச் அதிகளவு உற்பத்தியாக கூடிய ஒரு ஹார்மோன் பிரச்சனை ஆகும்.

கருமுட்டையை உறைய வைக்கும் போது, அதிகளவு ஏஎம்எச் கருப்பை மிகைதூண்டுதல் நோய்குறியை (OHSS) எளிதாக ஏற்படுத்தலாம்.

கருப்பை புற்றுநோய், கிரானுலோசா செல் கட்டிகள் போன்ற பெண் இனப்பெருக்க அமைப்பில் ஏற்படும் புற்றுநோய்களுக்கும் அதிகளவு ஏஎம்எச் காரணமாகும்.

முடிவுரை:

ஏஎம்எச் அளவுகள் மட்டுமே உங்கள் கருவுறும் நிலைமையை தீர்மானிக்காது. கருப்பை நிலை, குழாய் ஆரோக்கியம், விந்தணு காரணிகள், மற்றும் அடிப்படை மருத்துவ நிலைகள் போன்ற மற்ற தொடர்புடைய இனப்பெருக்க காரணிகளும் கருத்தரிப்பை பாதிக்கும்.

நம்பிக்கையான பக்கத்தில், கருத்தரிப்புக்கான வாய்ப்புகள் குறைவாய் இருந்தாலும், குறைவான கருமுட்டை எண்ணிக்கை மற்றும் குறைவான ஏஎம்எச் அளவுகளை உடையவர்களும் கூட கருத்தரிக்க முடியும் எனக் கூறலாம்.

Was this article helpful?
YesNo

fill up the form to get a

Free Consultation

Your data is 100% safe with us.

Avail 0% interest on EMI
All Procedures | No Upper Limit

How we reviewed this article:

HISTORY
  • Current Version
  • September 11, 2023 by Oasis Fertility
  • August 30, 2023 by Oasis Fertility

LatestTrending

Ad

BOOK A FREE CONSULTATION

Book

Appointment

Call Us

1800-3001-1000
User ID: 17 - Username: hema
User ID: 13 - Username: jigna.n
User ID: 12 - Username: kavya.j
User ID: 19 - Username: maheswari.d
User ID: 8 - Username: Oasis Fertility
User ID: 14 - Username: parinaaz.parhar
User ID: 9 - Username: Piyush_leo9
User ID: 22 - Username: poornima
User ID: 23 - Username: prasanta
User ID: 15 - Username: pratibha
User ID: 16 - Username: prinkabajaj
User ID: 18 - Username: radhikap
User ID: 21 - Username: rajesh.sawant
User ID: 10 - Username: ramya.v
User ID: 11 - Username: saimanasa
User ID: 20 - Username: shalini
User ID: 7 - Username: shootorder