Blog
Uncategorized

கருப்பை புற்றுநோய் சிகிச்சை – கருவுறுதல் பிரச்சனைகள் மற்றும் பாதுகாப்பு: எதிர்காலத்தை நோக்கி.

கருப்பை புற்றுநோய் சிகிச்சை – கருவுறுதல் பிரச்சனைகள் மற்றும் பாதுகாப்பு: எதிர்காலத்தை நோக்கி.

Author: Dr. D Maheshwari, Consultant & Fertility Specialist

பெண்களில் மிகவும் பரவலாய் வரக்கூடிய புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஆகும். இது கருப்பைகள், கருமுட்டைக் குழாய்கள் மற்றும் பெரிட்டோனியத்தில் ஆரம்பிக்கிறது. கருப்பை புற்றுநோயை, தீங்கற்றது (தீங்கு விளைவிக்காதது), வரம்புக்குட்பட்டது (தீங்கு விளைவிக்கும் சாத்தியம் குறைவு), அல்லது தீங்குவிளைவிப்பது (புற்று நோய்) என வகைப்படுத்தலாம்.

பெண்களின் குடும்ப வரலாற்றில் கருப்பை புற்றுநோய் இருந்தால் அதை தவிர்க்க நல்ல வழி எதுவும் இல்லை. கூடுதலாக, வயதான மற்றும் மாதவிடாய் நின்றுபோன பெண்களில், மரபணு வரலாற்றில் இல்லாவிட்டாலும், கருப்பை புற்றுநோய் உருவாகும் ஆபத்து அதிகம்.

புற்றுநோயை கண்டறிதல் அதை அழிக்கக்கூடியது, மேலும் புற்றுநோய் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிப்பதால், அதற்குரிய சிகிச்சைகள் மிகவும் தேவைப்படுகிறது. புற்றுநோய் பாதித்த பெண்களில், புற்றுநோயினாலும் அதற்குரிய சிகிச்சைகளினாலும் கருவுறுதல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. புற்றுநோய் சிகிச்சைகள் பெண் கருவுறுதலை நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ பாதிக்கின்றன.

புற்றுநோய் சிகிச்சையினால் ஏற்படும் கருவுறுதல் பிரச்சனைகள்

கருப்பை புற்றுநோய் சிகிச்சையினால், கருப்பைகள் மற்றும் பிற இனப்பெருக்க பாகங்கள் சரியாய் செயல்படாது.

கருப்பை புற்றுநோய்க்கான பொதுவான சிகிச்சைகளில் ரேடியேஷன் தெரபி, கீமோதெரபி, மற்றும் கருப்பைகளை அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவது போன்றவை உள்ளடங்கும்.

கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் தெரபியில் பயன்படுத்தப்படும் வலிமையான மருந்துகள் மற்றும் கதிர்வீச்சு, கருப்பைகளை சேதப்படுத்தும். முதிர்வடையா கருமுட்டைகளின் வீடு கருப்பைகள் ஆகும். ஒவ்வொரு மாத சுழற்சியின் மையத்திலும், விந்தணுக்களோடு கருவுற, முதிர்வடைந்த கருமுட்டைகளை இவை வெளியிடும். கருப்பைகள் சேதமடைந்தால், இந்த கருமுட்டைகள்

அழிந்து, மலட்டுத்தன்மை ஏற்பட்டு, சீக்கிரமே மாதவிடாய் நின்றுபோகும்.

புற்றுநோய் சிகிச்சை, சில பெண்களில், கருப்பை செயலிழப்பினால் நிரந்தரமான மலட்டுத்தன்மையான, முன்னரே மாதவிடாய் நின்றுபோகுதலுக்கு வழிவகுக்கும். கீமோதெரபி மேற்கொள்ளும் சில பெண்களில், சிகிச்சைக்கு சற்று பின்னர் மாதவிடாய் திரும்ப வரலாம். ஆனாலும் அவர்களின் கருவுறும் ஆற்றல் குறைவாய் இருக்கும்.

இளம் பெண்களில், ரேடியேஷன் தெரபியால் சீக்கிரமே மாதவிடாய் நின்றுபோகும்.

கருவுறுதல் பாதுகாப்பு

சிகிச்சையை துவங்கும் முன், அந்த சிகிச்சையால் உங்கள் கருவுறுதலில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் பாதிப்புகளைப் பற்றி உங்கள் புற்றுநோய் நிபுணரிடம் பேசுங்கள். உங்கள் கருவுறுதல் பாதுகாப்பு வழிகளைப் பற்றி தெரிந்துகொள்ள கருவுறுதல் நிபுணரோடு ஆலோசியுங்கள்.

பின்வரும் பல காரணிகளைப் பொருத்து கருவுறுதல் பாதுகாப்பு வழிகளைத் தேர்ந்தெடுக்கலாம்:

– வயது

– புற்றுநோயின் வகை மற்றும் நிலை

– கருப்பை இருப்பு

– மொத்த செயல்பாட்டின் செலவு

கருமுட்டை மற்றும் எம்ப்ரியோவை உறைய வைத்தல்: இது கருவுறுதலைப் பாதுகாப்பதற்கான நிலையான அணுகுமுறையாகும். பெண்களில் கருமுட்டை உற்பத்தி, ஹார்மோன் ஊசிகளால் தூண்டப்பட்டு, முதிர்வடைந்த கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு எதிர்கால பயன்பாட்டுக்கு பாதுகாத்து வைக்கப்படும். திருமணமான பெண்களில், சேகரிக்கப்பட்ட இந்த கருமுட்டைகள், எம்ப்ரியோக்களாக உருவாக, கட்டுப்படுத்தப்பட்ட லேப் சூழல்களில் விந்தணுவுடன் கருவுறச் செய்யப்படும். இந்த எம்ப்ரியோ, எதிர்காலத்தில் எம்ப்ரியோ பரிமாற்றம் செய்வதற்காக உறைய வைக்கப்படும்.

அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்: சில சமயங்களில், புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு, 1 கருப்பை மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட கருப்பையை மட்டும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். இது மற்றொரு ஆரோக்கியமான கருப்பையை பாதுகாத்து, நிரந்தர மலட்டுத்தன்மை ஏற்படாமல் பாதுகாக்கும்.

கருப்பை திசு பாதுகாப்பு: கருப்பையின் ஒரு பகுதியோ கருப்பை முழுவதுமோ அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் உள்வைக்கப்பட உறைய வைக்கப்படும்.

இந்த செயல்முறை வயது வராத பெண் பிள்ளைகளுக்கும் கருப்பை தூண்டல் செய்யப்படாத பெண்களுக்கும் நல்ல பயன் வாய்ந்தது.

முடிவுரை

கருப்பை புற்றுநோய் அல்லது எந்தவொரு புற்றுநோயையும் கண்டறிவது மிகவும் அழுத்தம் வாய்ந்ததும் பயமுறுத்தக்கூடியதுமான அனுபவமாய் இருக்கலாம். குறிப்பாய் நீங்கள் குழந்தைப் பெறுவதைப் பற்றி உறுதியில்லாமல் இருக்கும்போது கருவுறுதலைப் பற்றி பேசுவது மிகவும் கடினமான சூழ்நிலையாய் இருக்கும். உங்களுக்கு ஆறுதலாக, புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பதன் மூலம் பெற்றோர்த்துவத்தை அடையும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டு. உங்களுக்குத் தகுந்த முறைகளை ஆய்வு செய்ய கருவுறுதல் நிபுணர் உங்களுக்கு உதவுவார்.

Write a Comment

BOOK A FREE CONSULTATION