Blog
Uncategorized

PCOS கருவளமின்மைக்கு காரணமாகுமா?

PCOS கருவளமின்மைக்கு காரணமாகுமா?

சமீபகாலத்து இளம்பெண்கள் இடையே மாதவிடாய் சுழற்சிகாலம் ஒரே சீராக இல்லாமல் காணப்படுகிறது. போதிய உடற்பயிற்சியின்மை, குறைவான தூக்கம், தவறான உணவு பழக்கமுறைகளான ஊட்டச்சத்து இல்லாத மற்றும் மிகப்பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளை உண்பது போன்ற ஆரோக்கியமற்ற வாழ்வியல் பழக்கமுறைகள் இந்த ஒழுங்குமுறையற்ற மாதவிடாய் சுழற்சிக்கு காரணமாக இருக்ககூடும்.

சீரற்ற மாதவிடாய்காலம், பருமனான உடல் அல்லது பருமனில்லாத உடல் காரணமான ஹார்மோன் சமநிலையின்மை ஆகியவற்றால் நிறையபேர் அவதிப்டுகிறார்கள். இது ஒரு ஒழுங்குமுறையற்ற தொடர் சுழற்சிக்கு இட்டுசெல்கிறது. இந்தப் பிரச்சினைகள் எவையேனும் உங்களுக்கு இருந்தால் PCOS(பாலிசிஸ்டிக்ஓவரியன்சின்ட்ரோம்) காரணமாக இருக்கக்கூடும்.

PCOS சமீபகாலங்களில் பரவலான வழக்கில் உள்ள ஒரு உடல்நல பிரச்சினையாக மாறிவருகிறது. பெண்களுக்கு இது கருவளமின்மையை ஏற்படுத்தும் சாத்தியம் கொண்டிருக்கிறது, அச்சப்படவேண்டாம். வாழ்வியல் பழக்கமுறைகளில் திருத்தங்கள், மருந்து உட்கொள்ளுதல் மற்றும் கருவளத்திற்கான நவீன சிகிச்சை முறைகள் மூலம் இதை நிர்வகிக்கமுடியும்.

PCOS என்றால் என்ன?

ர்மோன் சமநிலையின்மையுடன் ஒழுங்குமுறையற்ற சுழற்சி காலங்களை நீங்கள் அனுபவித்து, உங்களது கருப்பை சில குறிப்பிட்ட ஹார்மோன்களை அதிக அளவு உற்பத்தி செய்ய ஆரம்பித்தால் மற்றும் அதிக எண்ணிக்கையிலான திரவம்-நிரப்பப்பட்ட சாக்குகள் கருப்பையில் தோன்ற ஆரம்பித்தால், உங்களுக்கு PCOS இருப்பதாகக் கூறப்படும்.

அறிகுறிகள்:

  1. மிக அதிக அல்லது குறைவான உதிரப்போக்குடன் வரும் ஒழுங்குமுறையற்ற மாதவிடாய்காலங்கள்
  2. உடல் பருமன்
  3. தேவையற்ற இடங்களில் முடிவளர்வது
  4. கருப்பை நீர்க்கட்டிகள்
  5. வழுக்கை ஏற்படுதல்
  6. கருவளமின்மை

PCOS ற்கான நோய் கண்டறிதல்:
தாய்மைபேறுக்காக நீங்கள் பயணத்தை தொடங்கும் வேளையில் PCOS நோய் இருப்பதாகக் கண்டறியப்படுவது உங்களுக்கு பெருத்த இடையூறாக இருக்கும். என்றாலும் PCOS அறிகுறிகளை குறைக்க பல வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை கடைபிடிப்பது நீங்கள் தாய்மைபேற்றை பெற வழிசெய்யும்.

a.பெல்விக் பரிசோதனை:

மருத்துவர் பெண் உறுப்பு மற்றும் கருப்பைவாய் ஆகியவற்றுள் ஏதேனும் வழக்கத்துக்கு மாறான நிலை நிலவுகின்றதா அல்லது ஏதேனும் தொற்று இருப்பதற்கான சான்று உள்ளதா என்று பரிசோதிப்பார்.

b.பெல்விக் அல்ட்ராசவுண்டு பரிசோதனை:

கருப்பையில் ஏதேனும் நீர்க்கட்டிகள் இருக்கிறதா என்று கண்டறிய மற்றும் கருப்பையின் அளவு மற்றும் கருப்பையின் உட்சுவர் பூச்சின் தடிமானம் ஆகியவற்றோடு கூடவே வழக்குநிலைக்கு மாறாக உள்ள வேறு பிரச்சினைகளான என்டோமெட்ரியோசிஸ்(கருப்பை அகப்படலம்), ஃபைப்ராய்டுஸ்(நார்த்திசுக்கட்டிகள்), போன்றவைகளை அறிய அல்ட்ராசவுண்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

c.இரத்தபரிசோதனைகள்:

FSH, LH, AMH, டெஸ்டோஸ்டெரோன் போன்ற ஹார்மோன்களின் அளவு நிலையை அறிய இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றை அறிவதுடன் மேலும் கூடுதலாக இன்சுலின் எதிர்ப்பு, கொலஸ்ட்ரால், தைராய்டு, ப்ரோலாக்ட்டின் அளவு நிலைகளை பரிசோதிக்கவும் மேற்கொள்ளப்படுகின்றன.

PCOS குணப்படுத்தலுக்கான சிகிச்சை முறைகள்:

i.வாழ்வியல் பழக்கமுறை மாற்றங்கள்:

உடல் பருமனாக இருப்பது என்பது PCOS உடன் தொடர்புடைய ஒரு முக்கிய பிரச்சினை ஆகும். சமச்சீரான உணவுமுறையை கடைபிடிப்பது, ஊட்டச்சத்து இல்லாத உடலுக்கு தீங்குவிளைவிக்கும் உணவுகளை தவிர்ப்பது, முறையான உடற்பயிற்சி அட்டவனைகளை திட்டமிட்டு கடைபிடிப்பது, உடல் எடை குறைய பெரிதும் உதவியாக இருந்து PCOS அறிகுறிகள் மேம்படுவதற்கு வழிசெய்யும். 5-10% உடல் எடை குறைப்பு என்பது மாதவிடாய் சீர்படுவதற்கு வழி செய்யும், கருவளதன்மையை மேம்படுத்தும் மற்றும் நீரிழிவு மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியத்தை குறைக்கும்.

ii.மருத்துவ சிகிச்சை:

கருப்பை கருமுட்டைகள் உற்பத்தி செய்வதை தூண்டிவிடும் மருந்துகளை உட்கொள்ளுதல் மற்றும் கருவளதன்மை ஊட்டும் நவீன சிகிச்சை முறைகளான IUI மற்றும் IVF போன்றவைகள் PCOS உடைய பெண்கள் கருவளமின்மையிலிருந்து மீண்டு எழுந்து குழந்தை பெற உதவும்.

PCOS உடன் தொடர்புடைய சிக்கல்கள்:

i.நீரிழிவு நோய்:

PCOS உடைய பெண்களுக்கு கருத்தரிப்பு காலத்தில் நீரழிவு ஏற்பட சாத்தியம் உண்டு. இரத்த சர்க்கரை அளவு தொடர் வழக்கமாக கண்காணிக்கப்பட வேண்டும். அதற்கு சிகிச்சை அளிக்காமல் இருக்கும் பட்சத்தில் வழக்கத்தை விட பெரிய அளவிலான குழந்தை, குறைபிரசவம் மற்றும் சிசேரியனுக்குஅதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

ii.கருசிதைவு:

கருசிதைவு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை PCOS அதிகரிக்கலாம். கருசிதைவு ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றாலும் உடல் பருமன்(அதிக எடை) அல்லது ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக இருக்கலாம்.

iii.ப்ரீஎக்லாம்சியா(முன்பேற்றுக்கால எக்லாம்சியா)

ப்ரீஎக்லாம்சியாவின் ஒரு தன்மையாக உயர் இரத்த அழுத்தம் உள்ளது. இது கருவிற்கான ஊட்டத்தை பாதிக்கலாம். பிறக்கும் குழந்தை மிக எடை குறைவாக பிறக்க காரணமாகலாம்.

PCOS உடைய எல்லா பெண்களும் IVF அல்லது நவீன சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டியது இல்லை. சரியான உணவுமுறை பழக்கங்கள், உரிய மருந்துகளை உட்கொள்ளுதல் மற்றும் வாழ்வியல் பழக்க வழக்கமுறைகளை சரியாக திருத்தி அமைத்துக்கொள்வதன் மூலமும் சில பெண்கள் இயல்பாகவே கருத்தரிக்க முடியும்.

எல்லா பெண்களும் தாய்மைபேறுக்கான பயணத்தை தொடங்குவதற்கு முன் தங்கள் மாதவிடாய்சுழற்சி காலம் பற்றிய சரியான புரிதலை கொண்டிருக்க வேண்டும்.

Write a Comment

BOOK A FREE CONSULTATION