Blog
Uncategorized

தோல்வியடைந்த IVF சிகிச்சைக்குப் பின் இரண்டாம் கருத்து – நம்பிக்கையை விடாமலிருக்க ஒரு காரணம்

தோல்வியடைந்த IVF சிகிச்சைக்குப் பின் இரண்டாம் கருத்து – நம்பிக்கையை விடாமலிருக்க ஒரு காரணம்

Author: Dr Jigna Tamagond, Consultant – Fertility Specialist

IVF ஒரு சாத்தியமான மற்றும் வெற்றிகரமான கருவுறுதல் சிகிச்சையாகும். இது, கருத்தரிக்க முடியாமல் இருக்கும் பல தம்பதிகளின் நம்பிக்கையாக இருக்கிறது.

ஆனாலும், விரும்பப்படாத விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. சில தம்பதியர் கருத்தரிக்க ஒன்றுக்கு மேற்பட்ட IVF சுழற்சிகள் தேவைப்படலாம்.

கருவுறுதல் சிகிச்சைகள் உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக, மற்றும் பொருளாதார ரீதியாக நுகரும். தோல்வியடைந்த IVF சுழற்சிக்குப் பின், தம்பதியர் நம்பிக்கையின்றி, துக்கமாக, அல்லது கோபமாக கூட இருப்பது மிகவும் இயல்பானது. அத்தகைய சூழல்களில், வருத்தப்பட்டு, அதிலிருந்து மீண்டு, நீங்கள் தயாரான பின் இரண்டாவது கருத்தைப் பெற யோசியுங்கள்.

ஏன் இரண்டாம் கருத்தை பெற வேண்டும்?

ஒரு தோல்வி அடைந்த IVF சிகிச்சைக்கு பின், அடுத்த படியை முடிவு செய்வது பெரிய விஷயமாகவும் சவாலாகவும் இருக்கலாம். குறிப்பாக, எதில் குறைவு என்பதை நீங்கள் அறியாவிட்டால், இரண்டாவது கருத்தைக் கேட்கலாம் என்னும் முடிவை எடுப்பது உங்களுக்கு கடினமாக இருக்கும். ஆனால் சில சமயங்களில், இரண்டாவது கருத்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

1. முந்தைய IVF தோல்வி அடைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்தல்

இது, பிரச்சனைகளைப் பற்றிய புதிய பார்வையைக் கொடுக்கும். இரண்டாம் கருத்து, முன்பு தோல்வியடைந்த சுழற்சிகளுக்கான காரணங்களை புரிந்து கொள்ள உதவுகிறது. IVF தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில:

– எம்ப்ரியோ கருப்பதித்தலில் தோல்வி

– கருமுட்டையின் தரம்

– விந்தணுவின் குறைவான தரம்

– மரபணு கோளாறுகள்

 

 

2. உங்களுக்கு மாற்று வழிகள் கிடைக்கும்

உங்கள் அடுத்த IVF சுழற்சியில் கருத்தரிப்பு வாய்ப்புகளை அதிகரிக்க, தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறையையும் மேம்பட்ட நோய் கண்டறிதல் முறைகளையும் தேர்வு செய்யலாம்.

● இயற்கையான கருத்தரிப்பு

IVF சிகிச்சையைத் தேர்வு செய்த பின்னர் இயற்கையாக கருத்தரிப்பது சாத்தியமில்லை என்று பலர் கருதுகின்றனர். ஆனால் சரியான நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையைக் கொண்டு, தோல்வியடைந்த IVF சிகிச்சைக்கு பின்னரும் ஒருவர் இயற்கையாக கருத்தரிக்க முடியும்.

● கருப்பதித்தலுக்கு முன்னான மரபணு சோதனை (PGT)

கருப்பதித்தலுக்கு முன்னான மரபணு சோதனை (PGT) கருப்பதிக்கப்பட இருக்கும் எம்ப்ரியோக்களில் ஏதேனும் மரபணு அல்லது குரோமோசோம் கோளாறுகள் இருக்கிறதா என பரிசோதிக்கும் கூடுதல் சோதனை முறையாகும். ஏற்கனவே இருக்கும் மரபணு கோளாறுகளோ IVF சிகிச்சையின் போது ஏற்பட்ட மரபணு கோளாறுகளோ கருச்சிதைவை விளைவிக்கலாம்.

● எண்டோமெட்ரியல் ஏற்புத்திறன் பகுப்பாய்வு (ERA)

சில சமயங்களில் எண்டோமெட்ரியத்தில் எம்ப்ரியோ கருப்பதிக்காமல் போவதால் IVF தோல்வியடைகிறது. இந்தப் பிரத்தியேகமான நுட்பம், எண்டோமெட்ரியல் புறணி எப்போது எம்ப்ரியோ கருப்பதித்தலுக்கு தயாராகிறது என்பதை கண்டறிய உதவுகிறது.

● கருமுட்டைகள் மற்றும் விந்தணுக்கள் வழங்குனர்

IVF செயல்முறையில் பயன்படுத்தப்படும் விந்தணுக்கள் அல்லது கருமுட்டைகளின் தரத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் IVF முறை தோல்வி அடையலாம். அத்தகைய சூழலில், வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க, கருமுட்டைகள் மற்றும் விந்தணுக்கள் வழங்குனரை தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கும்.

முடிவுரை:

தோல்வியடைந்த IVF உங்கள் பெற்றோர்த்துவ கனவின் முடிவல்ல. நம்பிக்கையை விடாதீர்கள். மாற்று வழிகள் உள்ளன. சரியான நேரத்தில் சரியான முயற்சியை எடுப்பதே முக்கியம். ஒவ்வொரு முயற்சியிலும் உங்களோடு இருந்து, இந்தப் பயணத்தை கடந்து செல்ல உதவும் சரியான கருவுறுதல் நிபுணரை ஆலோசியுங்கள்.

ஒயாசிஸ் கருத்தரிப்பு மையத்தில், நாங்கள் எங்களிடம் வருபவர்களுக்கு சிறந்த கருவுறுதல் பராமரிப்பை வழங்குகிறோம். எங்கள் நம்பிக்கையான நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த கருவியலாளர்கள் குழுவினர், மேம்பட்ட ART தொழில்நுட்பங்களை கையாளுகின்றனர். எங்கள் சிறந்த சேவைகளை வழங்கவும், உங்கள் பெற்றோர்த்துவ கனவை அடைய எல்லா முயற்சிகளையும் கையாளவும் நாங்கள் போராடுவோம்.

Write a Comment

BOOK A FREE CONSULTATION