Blog
Enquire Now
Uncategorized

மாதவிடாய், PCOS மற்றும் கருவுறுதலுக்கு, விதை சுழற்சியை பற்றி புரிந்து கொள்ளுதல்

மாதவிடாய், PCOS மற்றும் கருவுறுதலுக்கு, விதை சுழற்சியை பற்றி புரிந்து கொள்ளுதல்

Author: Dr. Sai Manasa Darla, Consultant, Fertility Specialist &  Laparoscopic Surgeon

மனித அமைப்பின் முறையான செயல்பாட்டுக்கு ஹார்மோன்கள் ஒரு ஒருங்கிணைந்த காரணியாகும். அவை, மனித இனப்பெருக்க அமைப்பின் சீரான செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெண் இனப்பெருக்க அமைப்பையும் மாதவிடாய் சுழற்சியையும் ஹார்மோன்கள் பெரிதளவில் பாதிக்கின்றன. ஹார்மோன்களின் சமநிலையில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டாலும் கருவுறுதல் சிக்கல்கள் ஏற்படலாம்.

பெண்களில் மலட்டுத்தன்மைக்கான மிகப் பொதுவான காரணமாக ஹார்மோன் சமநிலையின்மை உள்ளது. மேம்பட்ட மருந்துகள் ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்தாலும் கூட, முழுமையான முறைகள் நாளமில்லா சுரப்பியையும், ஒட்டுமொத்த மனித அமைப்பையும் சரி செய்யவும் குணமாக்கவும் உதவி, தனித்துவமான பலன்களை வழங்குகிறது. சமீபகாலத்தில் கவனத்தை ஈர்க்கும் அத்தகைய ஒரு முழுமையான அணுகுமுறைதான் “விதை சுழற்சி”.

விதை சுழற்சி என்றால் என்ன என்பதையும், இது மற்றும் ஒரு போக்கு தானா அல்லது உண்மையில் இது உதவுகிறதா என்பதையும் பார்ப்போம்.

விதை சுழற்சி:

விதை சுழற்சியில், ஆளி விதை, பூசணி விதை, சூரியகாந்தி விதை, மற்றும் எள் விதை ஆகியவை மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளின் போது உட்கொள்ளப்படும். அதாவது, கருவணு வளரும் காலம் மற்றும் மஞ்சட்சடல காலம். இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி, பெண்களில் கருவுறுதலை மேம்படுத்த உதவுகிறது.

விதை சுழற்சியின் பலன்கள்

– சீரற்ற மாதவிடாயை சீராக்குகிறது

– PCOS மற்றும் அதன் அறிகுறிகளிலிருந்து விடுபட உதவுகிறது

– PMS அறிகுறிகளை குறைக்கிறது

– ஹார்மோன் சமநிலையின்மையின் காரணமாக வரும் முகப்பருக்களை குறைக்கிறது

– மாதவிடாய் நிறுத்தத்துக்கு முன் ஏற்படும் அறிகுறிகளை எளிமையாக்குகிறது

– பாலுணர்ச்சியை மேம்படுத்துகிறது

விதை சுழற்சி எப்படி செயல்படுகிறது?

மாதவிடாய்க்கான விதை சுழற்சி மற்றும் PCOS க்கான விதை சுழற்சி, மாதவிடாய் சுழற்சியின் போது நிலையாக மாறிக் கொண்டே இருக்கும் முக்கிய ஹார்மோன்களை (ஈஸ்ட்ரஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன்) சமநிலைப்படுத்த திறம்பட உதவுவதால், இது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

விதை சுழற்சியின் பலன்களை நன்றாக புரிந்துகொள்ள, மாதவிடாய் சுழற்சியையும் அதின் கட்டங்களையும் புரிந்துகொள்வது முக்கியம்.  ஒரு சராசரி மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கு இருக்கும். இது 2 கட்டங்களைக் கொண்டுள்ளது.

மாதவிடாய் சுழற்சியில் உள்ள கட்டங்கள்:

கருவணு வளரும் காலம்:

இது மாதவிடாயின் முதல் நாளிலிருந்து அண்டவிடுப்பு நாள் வரை எண்ணப்படும் முதல் கட்டமாகும். அதாவது, மாதவிடாய் சுழற்சியின் முதல் இரண்டு வாரங்கள் (நாள் 1-14). இந்தக் கட்டத்தில், கருப்பை சுவர் உதிர்ந்து, நுண்ணுறைகளை தூண்டும் ஹார்மோன் (FSH) கருப்பைகளைத் தூண்டி, கருமுட்டைகளின் உருவாக்கத்தை தொடங்குகிறது.  இந்த செயல்முறை ஈஸ்ட்ரஜன் நிலைகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. ஆரோக்கியமான ஈஸ்ட்ரஜன் நிலைகள் கருப்பை சுவரை கட்டமைப்பதிலும், பாலியல் விருப்பத்தை மேம்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது.

மஞ்சட்சடல காலம்:

மாதவிடாய் சுழற்சியின் நாள் 15 – 28 மஞ்சட்சடல காலம் எனப்படும். இது அண்டவிடுப்பில் இருந்து அடுத்த மாதவிடாய் வரை உள்ள காலம் ஆகும். மஞ்சட்சடல காலத்தின் போது ப்ரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன் அதிகளவு இருக்கும். அண்டவிடுப்பிற்கு பின்னர், கருப்பதித்தலுக்கு உதவவும், முதல் மூன்று மாதங்களுக்கு கர்ப்பத்தை பராமரிக்கவும் ப்ரொஜெஸ்ட்ரோன் நிலைகள் உயரும்.

மேலும், லிக்னான்கள், நார்ச்சத்துக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், மற்றும் கனிமங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் பலன்கள் விதை சுழற்சியில் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள், ஈஸ்ட்ரஜன் மற்றும் ப்ரொஜஸ்ட்ரோன் ஆகிய பாலியல் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், அழற்சியை குறைக்கவும் உதவுகின்றன

 

 

விதை சுழற்சியின் பலன்கள் என்ன?

1.மாதவிடாய்க்கான விதை சுழற்சி:

மாதவிடாய்க்கான விதை சுழற்சி, சீரற்ற மாதவிடாயை சீராக்க ஒரு சிறந்த மற்றும் இயற்கையான முறையாகும். கருவணு வளரும் காலத்தின் போது, ஆளி விதைகளையும் பூசணி விதைகளையும் உட்கொள்ளவும். ஆளி விதைகளில் உள்ள லிக்னான்கள் மற்றும் ஃபைட்டோஈஸ்ட்ரஜன்கள், ஈஸ்ட்ரஜனை பிரதிபலிப்பதன் மூலம் ஈஸ்ட்ரஜன் நிலைகளை சமநிலைப்படுத்துகின்றன. மஞ்சட்சடல காலத்தின் போது ப்ரொஜஸ்ட்ரோன் உருவாக்கத்தை அதிகரிப்பதிலும் ஆளி விதைகள் முக்கிய பங்கு வைக்கிறது. பூசணி விதைகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆதாரங்களாகும்.  மஞ்சட்சடல காலத்தின் போது, ப்ரொஜெஸ்ட்ரோன் உருவாக்கத்திற்கு உதவ, ஒரு கரண்டி பூசணி விதைகளையும் எள் விதைகளையும் சேர்த்துக் கொள்ளவும். எள் விதைகளில் உள்ள லிக்னான்கள், ப்ரொஜெஸ்ட்ரோன் ஹார்மோனை சமநிலைப்படுத்தவும், இரத்த கொழுப்பு அளவுகளை மேம்படுத்தவும், மாதவிடாய் நின்று போன பெண்களில் ஆக்சிஜனேற்றத் தடுப்பான்களை மேம்படுத்தவும் உதவுகின்றன. சூரியகாந்தி விதைகள், இனப்பெருக்க அமைப்பின் சீரான செயல்பாட்டுக்கு அவசியமான ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த ஆதாரமாகும்.

மாதவிடாய்க்கான விதை சுழற்சியை எப்போது துவங்குவது?

மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளிலிருந்து மாதவிடாய்க்கான விதை சுழற்சியை துவங்குவது சிறந்தது.

2.PCOS க்கான விதை சுழற்சி:

PCOS க்கான விதை சுழற்சி, கருப்பை கட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பது போன்ற பல நன்மைகளை அளிக்கின்றது. பூசணி மற்றும் எள் விதைகளில் உள்ள ஜிங்க், ப்ரொஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரஜனின் ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தி, ஆண்ட்ரஜன்களை குறைத்து இவற்றின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. PCOS க்கான விதை சுழற்சி மூலம், தைராய்டு செயல்பாடும் மேம்படுகிறது. ஆளி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இன்சுலின் தடுப்பையும் இரத்த கொழுப்பு அளவுகளையும் குறைக்க உதவுகிறது.

3.கருத்தரிப்புக்கான விதை சுழற்சி:

சமநிலையான ஹார்மோன்கள், சீரான மாதவிடாய் சுழற்சி, மேம்பட்ட அண்டவிடுப்பு, மற்றும் அதிகமான ப்ரொஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரஜன் நிலைகள் போன்ற விதை சுழற்சியின் பல நன்மைகளில் இருந்து, விதை சுழற்சியானது கருவுறுதலை மேம்படுத்தவும் உதவுகிறது எனக் கூறலாம்.

– சூரியகாந்தி விதைகளில் உள்ள வைட்டமின் E, கருமுட்டை மற்றும் விந்தணுவின் தரத்தை மேம்படுத்தி, கருவுறுதல் வாய்ப்புகளை அதிகரித்து, நேர்மறையான கருத்தரிப்பு விளைவுகளை ஏற்படுத்தும்.

– விதைகளில் உள்ள ஆக்சிஜனேற்ற தடுப்பான்கள் அழற்சியை குறைத்து கருப்பதித்தல் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

முடிவுரை:

இனப்பெருக்க அமைப்பின் சீரான செயல்பாட்டுக்கு அவசியமான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், கனிமங்கள், மற்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள், பெண்ணின் ஹார்மோன் ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த நான்கு விதைகளிலும் உள்ளன. இருந்தாலும், ஹார்மோன் சமநிலையின்மையை இது முற்றிலும் குணப்படுத்தாது என்பதை நினைவில் கொள்வது அவசியம், விதை சுழற்சியை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் ஒரு கருவுறுதல் நிபுணரிடம் ஆலோசியுங்கள்.

Write a Comment