Blog
Uncategorized

இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்க இன்னும் காத்திருக்கிறீர்களா? இரண்டாம் நிலை கருவுறாமை காரணமாக இருக்கலாம்!

இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்க இன்னும் காத்திருக்கிறீர்களா? இரண்டாம் நிலை கருவுறாமை காரணமாக இருக்கலாம்!

கருவுறாமை என்கிற பிரச்சினை உங்கள் முதல் குழந்தையுடன் நிறைவடைவதில்லை. ஆம். நீங்கள் உங்கள் இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் போது கூட அது உங்களை பாதிக்கலாம். இது இரண்டாம் நிலை கருவுறாமை என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய ஒரு நிலை இருப்பது பல பேருக்கு தெரிவது கூட இல்லை. ஆனால் பல தம்பதியர் அவர்களது 30 வயதுகளில் தான் இரண்டாவது குழந்தைக்கு முயற்சி செய்கிறார்கள், கருவுறுதல் பிரச்சினைகளால் அவர்கள் விரும்பிய குடும்ப அளவை அவர்களால் அடைய முடிவதில்லை. இது உணர்வுபூர்வமாக ஒரு சவாலான சூழ்நிலையாகும். அவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதால் இதைப் பற்றி தம்பதியர் வெளிப்படையாக பேசுவதில்லை மற்றும் இதனை அனுதாபத்துடன் கேட்போர் அதிகம் இல்லை. 

இரண்டாம் நிலை கருவுறாமை ஏன் ஏற்படுகிறது? 

வேலைப்பளு மற்றும் பிற தனிப்பட்ட கடமைகள் ஆகியவை முதல் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான காலத்தை ஏறக்குறைய 29 அல்லது 30 வயதுக்கு தள்ளி விடுகின்றன. மீண்டும் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான யோசனை 34 அல்லது 35 வயதில் தான் வருகிறது, அதற்குள் பெண்களின் கருவுறுதல் ஏற்கனவே சரிவுக்கு வந்து விடுகிறது. வயது மற்றும் வாழ்க்கை முறைமாற்றங்களின் காரணமாக ஆண்களின் விந்தணு எண்ணிக்கையும், தரமும் குறைந்து விடுகிறது. 

எண்டோமெட்ரியோஸிஸ், கருப்பைக்குழாய் அடைப்பு, ஒழுங்கற்ற அண்டவிடுப்பு, யூட்டரின் பைப்ரோய்ட்ஸ், பாலியல் ரீதியாகபரவும் தொற்றுநோய்கள், PCOS, C-பிரிவின் வரலாறு, விளக்கப்படாத கருவுறாமை ஆகியவை பெண்களில் இரண்டாம் நிலை கருவுறாமை ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்களாகும். 

இரண்டு கருவுறுதல் களுக்கிடையில், பெண்களின் வயது அதிகரிக்கிறது, பெண்களுக்கு PCOS வரலாம் அல்லது உடற்பயிற்சியின்மையின் காரணமாக ஆண் மற்றும் பெண்ணுக்கு நீரிழிவு நோய் வரலாம், இது கருவுறுதலை மேலும் சிக்கலாக்கும். ஆண் மற்றும் பெண்ணைப் பொறுத்தவரையில் புகைப்பிடித்தல் போன்ற பழவழக்கங்களும் கருவுறுதலை பாதிக்கும். 

ஏற்கனவே ஒரு குழந்தை பெற்றதற்குப்பின்பு அவர்களால் கருவுற முடியவில்லை என்ற அதிர்ச்சியால் தம்பதியர் பாதிக்கப்படுகிறார்கள். 30 வயதுக்குக்கீழுள்ள, ஒரு வருடத்திற்குப் பின்பும் இரண்டாவது முறையாக கருவுற இயலாத பெண்களும், 35 வயதுக்கு மேற்பட்ட, 6 மாதத்திற்குப் பின்பும் இரண்டாவது முறையாக கருவுற இயலாத பெண்களும், மேற்கொண்டு தாமதிக்காமல் ஒரு கருவுறுதல் நிபுணரை கலந்தாலோசிக்க வேண்டும். 

இரண்டாம் நிலை கருவுறாமையை வெல்வது எப்படி? 

வயது மற்றும் உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்து, மருந்துகள், அறுவைசிகிச்சைகள், அல்லது IUI, IVF, முதலியன போன்ற செயற்கை கருத்தரிப்பு நுட்பம் ஆகியவை மூலமாக இரண்டாம் நிலை கருவுறாமைக்கு சிகிச்சையளிக்கலாம். 

தம்பதியர் அவர்களது குழந்தைக்கு ஒரு உடன்பிறப்பைக் கொடுக்க இயலாத காரணத்தால் விரக்தியடைகின்றனர், அதன் காரணமாக, இரண்டாம் நிலை கருவுறாமை என்கிற பிரச்சினை நிறைய மன அழுத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் ஒருவரது ஆரோக்கியத்தில் பல நல்ல மாற்றங்களைக்கொண்டு வரமுடியும் மற்றும் அவர்களின் மனதில் உள்ள ஒரு முழுமையான குடும்பம் என்கிற கனவை அடைய அவர்களுக்கு உதவுவதற்கான மேம்பட்ட கருவுறுதல் சிகிச்சைகள் உள்ளன. 

தம்பதியர் அவர்களது முதல் குழந்தை பெற்றுக்கொள்வதை தாமதிக்கும்போது, இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதும் தாமதமாகிறது. இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவர்களது கனவு நிறைவேறாமல் தவிப்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர். இரண்டாம் நிலை கருவுறாமையை வெல்வதற்கு தம்பதியர் அவர்களது தயக்கத்திலிருந்து விடுபட்டு ஒரு கருவுறுதல் நிபுணரின் வழிகாட்டுதலை நாட வேண்டும்.

Write a Comment

BOOK A FREE CONSULTATION