ஆன்டி முல்லேரியன் ஹார்மோன் (ஏஎம்ஹெச்) என்றால் என்ன?
பெண்களில், கருப்பையின் நுண்ணறைகளுக்குள் இருக்கும் செல்கள் ஏஎம்ஹெச்சை உற்பத்தி செய்கின்றன. நுண்ணறைகள் என்பது, கருமுட்டைகளை கொண்டுள்ளதும் வெளிவிடுவதுமான கருப்பைகளில், திரவம் நிரப்பப்பட்ட சிறு பைகளாகும்.
ஏஎம்ஹெச் அளவுகள், உங்களில் உள்ள கருமுட்டைகளின் எண்ணிக்கையை அல்லது கருப்பை இருப்பை ஒத்திருக்கும். அதிகளவு ஏஎம்ஹெச், அதிகமான கருமுட்டைகளையும் கருப்பை இருப்பையும் குறிக்கும். குறைவான ஏஎம்ஹெச் அளவுகள், குறைந்த கருமுட்டைகளையும் கருப்பை இருப்பையும் குறிக்கும்.
கருத்தரித்தலை, அதிக மற்றும் குறைந்த ஏஎம்ஹெச் அளவுகள் எவ்வாறு பாதிக்கும்?
ஏஎம்ஹெச் அளவுகள், உங்களது கருப்பையின் செயல்பாட்டைக் காட்டும் குறிகாட்டியாகும். உங்களுக்கு வயதாகும்போது, உங்களில் இயற்கையாக குவிந்திருக்கும் ஆற்றல்மிக்க கருமுட்டைகளின் எண்ணிக்கை குறையத்தொடங்கி, இப்படி நடக்கும்போது, முன்கூட்டியே உருவாகியிருக்கும் நுண்ணறைகள் குறைந்து, குறைந்தளவு ஏஎம்ஹெச்சை வெளியிடும்.
குறைந்தளவு ஏஎம்ஹெச், குறைந்தளவு ஆற்றல்மிக்க கருமுட்டை இருப்பின் அறிகுறியாகும். இது கருத்தரித்தலின் வாய்ப்பை குறைக்கும்.
வைட்டமின் ‘டி’யும் ஏஎம்ஹெச்சும்:
ஏஎம்ஹெச் அளவுகளை, சோதனைக்குழாய் கருத்தரிப்பில், நேரடியாக ஏஎம்ஹெச் ஊக்கியின் மூலமாகவும், மறைமுகமாக கிரானுலோசா செல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமாகவும், கருப்பை நுண்ணறைகளின் வளர்ப்பில், ஏஎம்ஹெச் சமிக்ஞை மூலமாகவும், வைட்டமின் டி ஒழுங்குப்படுத்துகிறது.
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், மீன், சோயாபீன் மற்றும் முட்டைகள் போன்ற உணவுகள் உடலில் உள்ள வைட்டமின் ‘டி’ யின் அளவை அதிகரிக்க உதவும்.
இயற்கையாக வைட்டமின் ‘டி’ உருவாக, ஒவ்வொருவரும் 10 முதல் 15 நிமிடங்கள் நேரடியாக சூரிய ஒளியில் வெளிப்படவேண்டும்.
கீழ்கண்ட உணவுகளை சேர்த்துக்கொள்ளவும்
அவகேடோ: கருமுட்டையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
இஞ்சி: இனப்பெருக்க உறுப்புகளின் வீக்கத்தைக் குறைக்கும்
பெர்ரி பழங்கள்: இதிலுள்ள வலுவான ஆக்சிஜனேற்றிகள், கருமுட்டையை ரேடிக்கள்சிடமிருந்து பாதுகாக்கும்
எள் விதைகள்: அதிகளவு ஜிங்க், கருமுட்டையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ஒமேகா 3, ஜிங்க் (மீன், கோழி, பருப்பு வகைகள், இறைச்சி): இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ஓட்ஸ்/வாழைப்பழம்/முட்டைகள்: வைட்டமின் பி 6 ல் சிறந்தது