Blog
Uncategorized

எண்டோமெட்ரியோசிஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

எண்டோமெட்ரியோசிஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

என்டோமெட்டிரியோசிஸ் குறித்து நீங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டியவைகள் அனைத்தும்:

நிறைய பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பிலான பிரச்சினைகள் இருக்கின்றன. மாதவிடாய் சீராக இல்லாமல் இருப்பது, அதிகமான இரத்தக்கசிவு அல்லது கடுமையான வலி ஆகியன கருத்தரிக்க இயலாமைக்கு இட்டுச்செல்லும் என்று அவர்கள் இன்னும் உணராமல் இருக்கிறார்கள். என்டோமெட்டிரியோசிஸ் அப்படிப்பட்ட ஒருகாரணமாக இருக்கிறது. அது கண்டுபிடிக்கப்படாமல் போகலாம். ஆனால், அது ஒரு பெண்ணின் கருவளத்தன்மையை பெருமளவுபாதிக்க கூடும். என்டோமெட்டிரியோசிஸ் பற்றிவிவரமாகத் தெரிந்துக்கொள்ளலாம்.

என்டோமெட்டிரியோசிஸ் என்றால் என்ன:

என்டோமெட்டிரியோசிஸ் பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும்என்றால், முதலில், மாதவிடாய்சுழற்சிநிலை குறித்து தெரிந்துக்கொள்வோம். மாதவிடாய்சுழற்சிநிலை குறித்த ஒரு தெளிவான புரிதலை பெண்கள் கொண்டிருப்பது அவசியமாகும். கருப்பையின் உட்புறபூச்சு என்டோமெட்டிரியம் என்று அழைக்கப்படுகிறது.  விந்தனுவுடன் சேர்ந்த கருமுட்டையை தழுவிக்கொள்ள அது ஒவ்வொரு மாதமும் தன்னை தயார்படுத்திக்கொள்கிறது. ஆனால, கருத்தரிக்காதநிலை நீடித்தால், ஒவ்வொரு மாதமாதவிடாய்சுழற்சியின்போது என்டோமெட்டிரியல் திசு உறிந்துவிழும். அதன் விளைவாக இரத்தக்கசிவு ஏற்படும். என்டோமெட்டிரியம் கருப்பைக்கு வெளியே எங்காவது வளர்ந்தால், உதாரணமாக கருப்பை இணைப்புக்குழாய்(ஃபாலோப்பியன்குழாய்), கருவகம், யோனி போன்றவற்றில் வளர்ந்தால்அது என்டோமெட்டிரியோசிஸ் என்று அழைக்கப்படும். இந்த திசுவும் உதிரும், ஆனால் இரத்தம் செல்வதற்கு வேறு இடமில்லாததால் எரிச்சலை ஏற்படுத்தும். அதன் விளைவாக திசுக்களில் வடுக்களும் சிதைவு புண்களும் தோன்றும்.

என்டோமெட்டிரியோசிஸ்ற்கான அறிகுறிகள் யாவை?

  • நாள்பட்டஇடுப்புவலி/ கீழ் முதுகுபகுதியில் வலி
  • வலிமிகுந்த மாதவிடாய் காலங்கள் (டிஸ்மோனாரியா)
  • கருத்தரிப்பதில் சிக்கல்(கருவளமின்மை)
  • பாலுறவு கொள்ளும்போது வலி ஏற்படுதல் (டிஸ்பேரியுனியா)
  • மாதவிடாய் காலங்களின்போது அளவுக்கதிகமான இரத்தகசிவு
  • சிறுநீரில் தொடர்இரத்தகலப்பினாலான வலி / மலம்கழிக்கும்போது ஏற்படும் வலி (டிஸ்சேஸியா)

என்டோமெட்டிரியோசிஸ் கண்டறியப்படுவதற்கான பரிசோதனை:

  1. அல்ட்ராசவுண்டு
  2. ஆழபதிந்துள்ள என்டோமெட்டிரியோசிஸ்ஐ அடையாளம் காண எம்ஆர்ஐ
    ஸ்கேன்கள் அரிதாக தேவைப்படலாம்.
  3. லாப்ரோஸ்கோப்பி மற்றும் பயோப்சி-என்டோமெட்டிரியோசிஸ் நோய் கண்டறிதலில் என்டோமெட்டிரியோட்டிக்சிதைவு புண்களை லாப்ரோஸ்கோப்பி மற்றும் பயோப்சிக்கு உட்படுத்துவது அங்கிகரிக்கப்பட்ட ஒரு வழிமுறையாகும். என்டோமெட்டிரியத்தின் ஒரு திசுமாதிரி மைக்ரோஸ்கோப்வாயிலாக காணப்படுகிறது (லாப்ரோஸ்கோப்பி செயல்முறையின்போது). நோயாளிக்கு என்டோமெட்டிரியோசிஸ் இருக்கிறதா இல்லையா என்பதை இதன் மூலம் வல்லுனர்களால் உறுதிப்படுத்தமுடியும்.

என்டோமெட்டிரியோசிஸ்ற்கான சிகிச்சை

  • கருவளமின்மைக்கான சிகிச்சை முன்னுரிமையாக தேவைப்படும். அது நோயாளியின் உடம்பின் கருமுட்டை இருப்பு அளவின் அடிப்படையில் IUI அல்லது IVF என்று இருக்கலாம்.
  • இனி குழந்தை வேண்டாம், குடும்பம் நிறைவுபெற்றுவிட்டது என்றநிலையிலிருந்தால்,வலியிலிருந்து / வேறு அறிகுறிகளிலிருந்து விடுபெறுவதற்கு கருத்தடைமாத்திரை, ஹார்மோன்சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை போன்ற தெரிவுகளை கருதலாம்.

ஹார்மோன் சிகிச்சை:

ஹார்மோன் சிகிச்சையின் காரணமாக கருமுட்டை வெளியாவதை தடுக்க முடியும். இதனால் என்டோமெட்டிரிய வளர்ச்சி வேகமும் குறையும்.

  • அறுவை சிகிச்சை:

லாப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்க முடியும். சில சூழல்களில் ஹிஸ்ட்டெரக்ட்டாமி மேற்கொள்ளப்படுகிறது. இதில் கருப்பை மற்றும் கருவகம் நீக்கப்படுகின்றன.

என்டோமெட்டிரியோசிஸ்ஐ எதிர்கொண்டு நிர்வகிப்பதற்கான வாழ்வியல் முறைமாற்றங்கள்:

ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்:

ஒமேகா-3  ஃபாட்டிஆசிட் (கொழுப்புசத்துஅமிலம்) நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுகளை உட்கொள்வது என்டோமெட்டிரியோசிஸ் உருவாவதற்கான சாத்திய கூறுகளை குறைக்கும். மது, காஃபி, மற்றும் வணிக உணவுகடைகளின் செயற்கை கொழுப்பு தவிர்க்கப்பட வேண்டும்.

உடற்பயிற்சி:

என்டோமெட்டிரியோசிஸ்ஐ எதிர்கொண்டு நிர்வகிப்பதற்கு தொடர்வழக்கமாக மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி உதவும். யோகா மற்றும் தியானம் ஆகியன மனஅழுத்தத்திலிருந்து மீள்வதற்கு உதவி என்டோமெட்டிரியோசிஸ்ஐ சமாளிக்க உதவும்.

உங்களது மாதவிடாய் சுழற்சியில் பிரச்சினைகள் இருந்தால் கருவள நிபுணரிடம் ஆலோசனை பெற தயங்க வேண்டாம். நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைகால தாமதமின்றி நடைப்பெறுவது கருவளமின்மை பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு உதவி, தாய்மைபேறு அடைவதற்கான உங்களது கனவு நனவாக வழி செய்யும்.

Write a Comment

BOOK A FREE CONSULTATION