Blog
Enquire Now
Uncategorized

சிறந்த IVF மருத்துவமனையை கண்டுபிடித்தல்: கருத்தில் கொள்ள வேண்டிய 8 முக்கிய காரணிகள்

சிறந்த IVF மருத்துவமனையை கண்டுபிடித்தல்: கருத்தில் கொள்ள வேண்டிய 8 முக்கிய காரணிகள்

Author: Dr. V Ramya, Consultant & Fertility Specialist

விரைவாக மாறிக்கொண்டு, நகரமயமாகிக்கொண்டு இருக்கும் இந்த உலகம் அளவற்ற வாய்ப்புகளை அளித்தாலும், அதேசமயம் இது வாழ்க்கைமுறையில், வாழ்க்கைத் தரத்தில் மற்றும் மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக மனிதர்களின் ஆரோக்கியம் சீரழிகிறது. வாழ்க்கைமுறை மாற்றங்களின் காரணமாக இனப்பெருக்க வயதில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களை பாதிக்கும் அத்தகைய ஒரு பிரச்சனை தான் மலட்டுத்தன்மை. WHO இன் தற்போதைய கணக்கெடுப்பின்படி, ஏழில் ஒரு தம்பதியினர் மலட்டுத்தன்மையினால் பாதிக்கப்படுகின்றனர். கருவுறுதல் சிகிச்சைகளின் துறையில், வளர்ந்து வரும் மருத்துவ மேம்பாடுகளைக் கொண்டு மலட்டுத்தன்மையை சரி செய்வது மிகவும் எளிமையாக மாறிவிட்டது. IVF என பொதுவாக அழைக்கப்படும் இன் விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் என்பது ஒரு ஆய்வக அமைப்பில் கருமுட்டையை விந்தணுடன் கருவுறச் செய்யும் மேம்பட்ட கருவுறுதல் சிகிச்சை ஆகும். IVF தொழில்நுட்பம் இனப்பெருக்க மருந்துகளின் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. கருவுறுதல் சிக்கல்களை சந்தித்த பல தம்பதியினர் தங்கள் பெற்றோர்த்துவ கனவை அடைய IVF தொழில்நுட்பம் உதவியுள்ளது.

கருத்தரிப்பதில் சிரமம் காணும் தம்பதியினருக்கு சரியான IVF மருத்துவமனையை கண்டுபிடிப்பது ஒரு கெட்ட கனவாக இருக்கலாம்.

சரியான IVF மருத்துவமனையை கண்டுபிடிப்பதன் முக்கியத்துவம் என்ன?

சுகாதாரத் துறையில், தரமான சேவையை வழங்குவது முக்கியம். ஆனால் அதில் பங்கு வகிக்கும் பல காரணிகளையும் கட்டுப்படுத்தும் கட்டாயம் வரும்போது, அது ஒரு சவாலாக மாறுகிறது. பரிசோதனைகள், ஆய்வகக் கருவிகள், நோய் கண்டறிதல், மருத்துவரின் நிபுணத்துவம் மற்றும் அனுபவம், நோயாளி சேவை, போன்ற காரணிகள் திருப்திகரமான வாடிக்கையாளர் சேவையை வழங்குவதில் பங்கு வகிக்கின்றன.

இந்த காரணிகளை கருத்தில் கொள்ளும் போது சிறிய குறைபாடுகள் ஏற்பட்டாலும் அது விரும்பத்தகாத அனுபவத்தை ஏற்படுத்தலாம்.

கருவுறுதல் சிகிச்சை ஒவ்வொரு தம்பதியினருக்கும் வேறுபடும். கருவுறுதல் சிகிச்சையை தேர்வு செய்து ஒரு IVF மருத்துவமனையை தேடும் முன், முதலாவதாக, ஏன் உங்களால் கருத்தரிக்க முடியவில்லை என்பதை புரிந்து கொள்ள ஒரு கருவுறுதல் நிபுணருடன் ஆலோசிப்பது நல்லது.

உங்களுக்குப் பொருந்தக்கூடிய ஒரு IVF மருத்துவமனையை கண்டுபிடிக்க நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய 8 முக்கிய காரணிகள் இங்கே.

1. கருவுறுதல் நிபுணர்: மருத்துவ அனுபவம் மற்றும் நிபுணத்துவம்

உங்கள் தேவைக்கேற்ப ஒரு கருவுறுதல் நிபுணரை கண்டுபிடிப்பது ஒரு அச்சுறுத்தும் செயலாக இருக்கலாம். எந்த ஒரு சிகிச்சைக்கும் மருத்துவர்-நோயாளி உறவும் நம்பிக்கையும் முக்கியம். நன்கு படித்த, அனுபவம் வாய்ந்த மற்றும் உங்கள் வசதிக்கேற்ப உள்ள ஒரு கருவுறுதல் நிபுணரை தேர்ந்தெடுப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும், நீங்கள் கருத்தரிக்க உதவும் சிகிச்சையைப் பற்றி அறிந்திருந்து, அதை உங்களுக்கு விளக்கக்கூடிய ஒரு கருவுறுதல் நிபுணரை பாருங்கள்.

2. IVF மையத்தின் தரநிலைகள் மற்றும் தரம்

மருத்துவத்துறையில் தரம் மிகவும் அவசியம். தரத்தில் சமரசம் செய்யாத IVF மருத்துவமனையை கண்டுபிடிப்பது முக்கியம்.

அடிப்படை தரநிலைகள், சான்றுகள் மற்றும் தரத்தின் இணக்கங்கள் உள்ளடக்குபவை:

– ICMR இனால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்).

– ART சட்டத்தின் தரநிலைகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கருவுறுதல் மையம் பின்பற்ற வேண்டும்.

– தரம் 10,000 IVF ஆய்வகத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

3. பிரத்தியேக சிகிச்சை மற்றும் பராமரிப்பு

கருவுறுதல் சிகிச்சையை மேற்கொள்வது சற்று உணர்ச்சிகரமான பயணமாக இருக்கலாம். IVF பயணத்தின் போது மனநல ஆதரவு, பிரத்தியேகமான மற்றும் அரவணைப்பான பராமரிப்பை வழங்கும் IVF மையத்தை தேர்ந்தெடுப்பது அவசியம். உங்கள் தேவைகளையும் பிரச்சனைகளையும் சந்திக்கும் ஊழியர்களை கொண்டுள்ள மையத்தை தேடுங்கள்.

4. வழங்கப்படும் வசதிகள் மற்றும் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம்

அதிநவீன மற்றும் சமீபத்திய மேம்பட்ட கருவிகளை கொண்டுள்ள மருத்துவமனையை தேர்ந்தெடுங்கள். இன்ட்ரா-யூட்ரைன் இன்ஸெமினேஷன் (IUI), அசிஸ்டட் ஹேட்சிங், இன்விட்ரோ மெச்சுரேஷன் (IVM), போன்ற பல்வேறு கருவுறுதல் சிகிச்சைகளை செய்வதற்குரிய தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி பராமரிக்கப்படும் பிரத்தியேக வசதிகளை ஒரு IVF மையம் கொண்டிருக்க வேண்டும்.

 

5. எம்ப்ரியோ உறைவித்தல் அல்லது பாதுகாத்தல்

எம்ப்ரியோ உறைவித்தல் என்பது உடனடியாக கருத்தரிப்பை திட்டமிட முடியாத தம்பதியினருக்கு வரப்பிரசாதமாக இருக்கும் ஒரு முக்கியமான வசதி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப ஆகும். IVF சிகிச்சையின் போது உருவாகும் அனைத்து எம்ப்ரியோக்களும் கருப்பதித்தலுக்கு பயன்படுத்தப்படாது. கூடுதலாக உள்ள எம்ப்ரியோக்கள் திரவ நைட்ரஜனில் உறைய வைக்கப்பட்டு பிற்கால பயன்பாட்டுக்காக வைக்கப்படும். எனவே IVF மையம் எம்ப்ரியோ உறைவித்தல் சேவையை வழங்குகிறதா என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

எம்ப்ரியோ உறைவித்தல் பின்வரும் சூழல்களில் செய்யப்படலாம்:

– கருப்பைகள் அல்லது விரைப்பைகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதன் காரணமாக கருவுறுதலை சமரசம் செய்தல்

– தீவிரமான எண்டோமெட்ரியோசிஸ்

– புற்றுநோய்

– பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருவர் கருத்தரிப்பை தள்ளிப்போட விரும்புதல்

6. IVF வெற்றி விகிதங்கள்

வெற்றி விகிதங்களை அதிகரிக்க இனப்பெருக்க மருந்துகள் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன. மேலும் இதுவரையில் லட்சக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் உயிரியல் ரீதியான குழந்தைகளை IVF தொழில்நுட்பத்தின் உதவியுடன் பெற்றுள்ளனர்.

ஒரு IVF மையத்திற்குள் நுழைவதற்கு முன் தம்பதியினர் தங்கள் எதிர்பார்ப்புகளுக்காகவும் தீர்மானங்களுக்காகவும் வெற்றி விகிதங்களை அறிந்திருக்க வேண்டும்.

IVF வெற்றி விகிதங்களை பல காரணிகள் பாதிக்கின்றன.

– வயது

– உடல்நிலை

– கருமுட்டை மற்றும் விந்தணு தரம்

– மலட்டுத்தன்மைக்கான காரணம்

முகத்தைப் பார்த்து வெற்றி விகிதங்களை எடுத்துக் கொள்ளாதீர்கள். விவரமாகவும் தனிப்பட்ட முறையிலும் உங்கள் கருவுறுதல் நிபுணருடன் வெற்றி விகிதத்தை பற்றி பேசுங்கள், ஏனென்றால் ஒவ்வொரு தம்பதிக்கும் வெற்றி விகிதம் வேறுபடலாம், நோயாளியின் வயதை பொறுத்து மாறுபடலாம்.

– வயது மற்றும் IVF விகிதங்கள்:

மற்ற அனைத்து காரணிகளைக் காட்டிலும், ஒரு IVF சிகிச்சையின் வெற்றியில் வயது பெரும் பங்கு வகிக்கிறது. வயதும் IVF வெற்றி விகிதங்களும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. வயது மூப்பு, ஆண்களிலும் பெண்களிலும் விந்தணுக்கள் மற்றும் கருமுட்டைகளின் ஆரோக்கியத்தையும் தரத்தையும் பாதிக்கின்றது.

7. IVF பேக்கேஜ் கட்டணம்

கருவுறுதல் சிகிச்சைகள் விலை உயர்ந்தவை ஆகும். எந்த ஒரு கருவுறுதல் சிகிச்சையையும் மேற்கொள்வதற்கு முன், IVF பேக்கேஜ் கட்டணத்தை பற்றி தெளிவாக இருப்பது அவசியம். IVF பேக்கேஜ் கட்டணத்தை பற்றிய விழிப்புணர்வு நிதியை திட்டமிட உதவியாக இருக்கும்.

மறைவான கட்டணங்கள் இன்றி வெளிப்படையான கட்டணங்களை நிர்ணயிக்கும் IVF மையத்தை தேர்ந்தெடுங்கள்

8. மையம் இருக்கும் இடம்

அர்த்தமற்றதாக தோன்றலாம், ஆனால் IVF மையம் இருக்கும் இடம், கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய காரணியாகும். உங்கள் வசதிக்கேற்ப இருக்கும் மையத்தை தேர்ந்தெடுப்பது அடிக்கடி செல்வதால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.

ஒயாசிஸ் கருவுறுதல் மையம் உங்களுக்காக!

ஒயாசிஸ் கருவுறுதல் மையம், இந்தியாவில் 31 மையங்களைக் கொண்டுள்ள ஒரு முன்னணி மற்றும் வளர்ந்து வரும் கருவுறுதல் சங்கிலியாகும். இது உலகத்தரம் வாய்ந்த வசதிகளையும், அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவையும், நன்கு பராமரிக்கும் நிர்வாக ஊழியர்களையும் கொண்டுள்ளது. இதன் ஆய்வகத்தில் சமீபத்திய அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. இவை தரநிலைகளையும் தரத்தையும் கண்டிப்பாக பின்பற்றுகின்றன. ஒயாசிஸ் ஒரு ISO 2001-சான்றளிக்கப்பட்ட நிறுவனமாகும். இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வழிகாட்டல்களை விடாமுயற்சியுடன் பின்பற்றுகிறது. ஒயாசிஸ் கருவுறுதல் மையத்தில் பரிசோதனை, ஆய்வக செயல்பாடு, சிகிச்சை மற்றும் ஆலோசனை என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் உள்ளன.

ஒயாசிஸ் கருவுறுதல் மையத்தில், உங்கள் பெற்றோர்த்துவ பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் இருக்கும் நம்பகமான கருவுறுதல் நிபுணர்களைக் கொண்டு, உங்கள் பெற்றோர்த்துவ கனவை நனவாக்குங்கள்.

Write a Comment