Blog
Enquire Now
Uncategorized

35 வயதுக்குப் பின் கருவுறுதல் – தெரிந்துகொள்ள வேண்டியதும் எதிர்பார்க்க வேண்டியதும்

35 வயதுக்குப் பின் கருவுறுதல் – தெரிந்துகொள்ள வேண்டியதும் எதிர்பார்க்க வேண்டியதும்

Author: Dr. Meera Jindal, Consultant – Fertility specialist

பெற்றோர்த்துவ பயணம் மகிழ்ச்சி நிறைந்ததாய் இருந்தாலும் அதில் கடக்க வேண்டிய சில தடைகளும் உண்டு. பல தம்பதிகள் பல்வேறு காரணங்களால் தங்கள் வாழ்வில் பிற்கால வயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்கின்றனர். இந்த முடிவை எளிமையாக்கி, அதிகம் யோசிக்காமல் ஒருவர் தன் கனவுகளையும் முன்னுரிமைகளையும் தொடர உதவும் இனப்பெருக்க தொழில்நுட்பங்களுக்கு நன்றி.

இருப்பினும், “நிலையான கருவுறும் வயது” அல்லாத வயதில் கருத்தரிப்பதில் சில சவால்கள் உண்டு.

கருவுறுதலை வயது பாதிக்காது என்னும் உண்மையை நிராகரிக்க முடியாது. ஒரு பெண்ணின் கருவுறுதல், வயதாக ஆக குறையும். ஒரு பெண்ணின் 30 வயதுக்குப் பின் அவர் கருத்தரிக்க சற்று தாமதமாகலாம், ஆனால் அது சாத்தியமற்றது அல்ல.

உங்கள் ஆவலைத் தீர்க்க, ஆம், 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கருத்தரிக்க சில நல்ல வாய்ப்புகள் உண்டு, ஆனால் அதற்குரிய ஆபத்துகளும் உண்டு.

35 வயதுக்குப் பின் கருவுறுதலில் சிரமம் ஏற்படுத்தும் காரணங்கள்

– அண்டவிடுப்பில் குறைவு

– கருமுட்டை தரத்திலும் எண்ணிக்கையிலும் சரிவு

– அறுவை சிகிச்சை அல்லது தொற்றின் காரணமாக கருமுட்டை குழாய்களில் அல்லது கருப்பை வாயில் வடு திசு

– நார்த்திசுக்கள் அல்லது கருப்பை கோளாறுகள்

– இடமகல் கருப்பை அகப்படலம்

– நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள்

என்ன செய்வது?

பல சூழல்களில், எந்த அடிப்படை கருவுறுதல் சிக்கல்களும் இல்லாத 35 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான பெண்ணால் இயற்கையாக கருத்தரித்து ஆரோக்கியமான குழந்தையைப் பெற முடியும்.

ஒரு தம்பதியரால் இயற்கையாக கருவுற முடியாவிட்டால், அவர்கள் பின்வரும் மாற்று கருவுறுதல் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்:

– IUI (இன்ட்ரா யூட்ரைன் இன்செமினேஷன்): கருவுறுதலுக்கு உதவ, நல்ல தரமான விந்தணு தேர்வு செய்யப்பட்டு கருப்பைக்குள் செலுத்தப்படும்.

– IVF (இன் விட்ரோ கருவுறுதல்): லேபாரேட்டரியில், ஒரு கருமுட்டை ஒரு விந்தணுவுடன் கருவுற வைக்கப்படுவதன் மூலம் ஒரு எம்ப்ரியோ உருவாகும். இது பெண்ணின் கருப்பைக்குள் பொருத்தப்படும் அல்லது பிற்கால பயன்பாட்டிற்காக உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

– மேலும், உங்கள் கருமுட்டைகளை உறைய வைப்பதற்கான வழியும் உண்டு.

ஆபத்துகள்

ஒவ்வொரு கருத்தரிப்பும் தனித்துவமானது. 20 மற்றும் 30 வயதுக்குள் இருக்கும் பெண்களைவிட, 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் கருத்தரிப்பில் சிக்கல்கள் அதிகம். அவற்றில் சில:

– கருச்சிதைவு

– பிறவிக் குறைபாடு

– கர்ப்பத்தின் போது உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு ஏற்படலாம்

– குறைப்பிரசவம் அல்லது குறைவான பிறப்பு எடை

– நஞ்சுக்கொடி பிரச்சனைகள்

மகப்பேறுக்கு முந்தைய நல்ல பராமரிப்பின் மூலம் இந்த ஆபத்துகளை, கையாண்டு தவிர்க்கலாம். மகப்பேறுக்கு முந்தைய திரையிடல் சோதனைகளை மேற்கொண்டு, ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் பற்றி (ஏதேனும் இருந்தால்) தெரிந்துகொள்ளலாம்.

கருவுறுதலை மேம்படுத்தும் வழிகள்:

உங்கள் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, உங்கள் உடலை கர்ப்பத்துக்கு தயார் செய்வதன் மூலம் கருத்தரிப்பு எளிமையாகும், கருத்தரிப்பு வாய்ப்புகள் அதிகமாகும்.

நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

– மாதவிடாய் சுழற்சியின் நீளத்தைப் புரிந்துகொள்ளுதல், கருவுற ஏற்ற காலம் மற்றும் அண்டவிடுப்பை கண்காணிப்பது, தொடர்ச்சியான பாதுகாப்பற்ற உடலுறவு, ஆகியவற்றின் மூலம் ஒருவர் கருத்தரிக்க நல்ல வாய்ப்பு உண்டு.

– உங்கள் தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனைகளுக்கு சரியாய் செல்வது.

– புகைப்பிடித்தலையும் மது அருந்துவதையும் நிறுத்துவது, கஃபைனை குறைப்பது, நன்கு தூங்குவது, மற்றும் ஆரோக்கியமான சமநிலையான உணவுமுறையைப் பின்பற்றுவது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றங்களை தேர்வு செய்வது.

– மிதமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது

– மன அழுத்தத்தைக் குறைப்பது. கருத்தரிப்பை திட்டமிடும்போது மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியம்

– உங்களுக்கு மகப்பேறுக்கு முந்தைய வைட்டமின்கள் தேவைப்பட்டால் உங்கள் மருத்துவரை ஆலோசிக்கவும்

– ஏதேனும் கருவுறுதல் சிக்கல்கள் இருந்தால், உங்கள் கருவுறுதல் நிபுணரை ஆலோசித்து, கருவுறும் பிரச்சனைகளை உடைய தம்பதியருக்கு உதவக்கூடிய பல்வேறு கருவுறுதல் சிகிச்சைகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

 

முடிவுரை:

கருத்தரிப்பு ஒரு அற்புதமான பயணம். 35 வயதில் கருத்தரிப்பை திட்டமிடுவது சவாலாக இருக்கலாம். சமூக இழிவு மற்றும் வயது தொடர்பான உடல்நல சிக்கல்கள் மன அழுத்தத்தை இன்னும் அதிகரிக்கத் தான் செய்யும். ஆபத்துகளை புரிந்துகொண்டு, முழு பயணத்தையும் பயணிக்க கற்றுக்கொள்ளுவதே இதன் தீர்வாகும்.

உங்கள் பெற்றோர்த்துவ கனவை அடைய உதவும், பல ஆதார அடிப்படையிலான கருவுறுதல் சிகிச்சைகளும், ஆய்வு பின்னணியில் இனப்பெருக்க தொழில்நுட்பங்களும் இருப்பதால், கருவுறுதல் பிரச்சனைகளை உடைய தம்பதிகளுக்கும் நம்பிக்கை உண்டு.

 

Write a Comment