Blog
Uncategorized

பெண்களில் இயற்கையாய் கருவறுதலை அதிகரிக்க விரைவு குறிப்புகள்

பெண்களில் இயற்கையாய் கருவறுதலை அதிகரிக்க விரைவு குறிப்புகள்

Author: Dr. V Ramya, Consultant & Fertility Specialist

ஒரு ஆரோக்கியமான இனப்பெருக்க அமைப்பு உங்கள் கருத்தரிப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும். உங்களையும் உங்கள் உடலையும் “குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த”, நீங்கள் முயற்சிக்க கூடிய சில குறிப்புகள் இங்கே.

உங்கள் உடல் எடையை கவனியுங்கள்

எடை மாற்றங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதிக எடை மற்றும் குறைவான எடை இரண்டுமே கருவுறுதலையும் உங்கள் கருத்தரிப்பு திறனையும் பாதிக்கும்.

உடல் பருமன், PCOS போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி, ஹார்மோன் சமநிலையின்மையையும், அதன் விளைவாக சீரற்ற மாதவிடாய் சுழற்சியையும் ஏற்படுத்தும். குறைவான எடையில் இருப்பதும் குறைவான ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி போன்ற ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். குறைவான ஈஸ்ட்ரோஜன் அளவுகள் அண்டவிடுப்பை பாதிக்கும். இதனால் கர்ப்ப காலத்திலும் சிக்கல்கள் ஏற்படும்.

ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான கர்ப்பத்தை பெறலாம்.

அதை அளவுக்கு அதிகமாய் செய்ய வேண்டாம். ஏனென்றால் அதிக உடல் உழைப்பும் கூட கருவுறுதலை பாதிக்கும்.

ஆரோக்கியமான உணவு முறையை கையாளவும்

பல யுகங்களாக சொல்லப்பட்டு வருகிறபடி, நாம் உண்ணும் உணவு நம்முடைய ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. ஊட்டச்சத்து மிக்க உணவு, அனைத்து உடல் பாகங்களும் சீராய் செயல்பட உதவுகிறது. குறிப்பிட்ட உணவுகளை உண்பதால் கருவுறுதல் அதிகரிக்கும் என்பதற்கான போதுமான ஆதாரம் இல்லை. பின்வருபவை போன்ற ஆரோக்கியமான உணவு பழக்கங்களை கையாள்வதன் மூலம் திறம்பட செயல்படும் ஆரோக்கியமான இனப்பெருக்க அமைப்பை பெறலாம்:

– அதிகளவு காலை உணவை எடுத்துக்கொள்ளவும். ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்த பழங்களை சேர்த்துக் கொள்ளவும்.

– அதிகளவு தண்ணீரை அருந்தவும். கார்பனேற்றப்பட்ட மற்றும் இனிப்பு பானங்களை தவிர்க்கவும்.

– ட்ரான்ஸ் கொழுப்புகளை தவிர்க்கவும்

– உங்களுக்கு PCOS இருந்தால், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை குறைத்துக் கொள்ளவும்

– நார்ச்சத்து மிக்க உணவுகளை உண்ணவும்

– உங்கள் உணவில் புரத ஆதாரங்களை சேர்த்துக் கொள்ளவும்

– ஆரோக்கியமான கொழுப்புகளை தேர்ந்தெடுக்கவும்

ஆல்கஹால் மற்றும் புகையிலை பயன்படுத்துவதை நிறுத்தவும்

ஆல்கஹால் மற்றும் புகையிலை, ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் சில தீவிர பின் விளைவுகளை ஏற்படுத்தும். ஆல்கஹாலை எடுத்துக்கொள்ளுதல் ஈஸ்ட்ரோஜன் அளவுகளை குறைத்து அண்டவிடுப்பை பாதிக்கும். இது நீங்கள் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை பாதிக்கும்.

சிகரெட்டுகளில் இருக்கும் புகையிலை மற்றும் பிற வேதிப்பொருட்கள், பெண்களின் கருமுட்டையின் தரத்தையும் எண்ணிக்கையையும் குறைத்து, கருவுறுதல் வாய்ப்புகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இது சீரற்ற மாதவிடாய் சுழற்சிகளையும் ஏற்படுத்தலாம்.

மல்டிவைட்டமின்கள் அல்லது கர்ப்ப காலத்துக்கு முந்தைய வைட்டமின்களை எடுத்துக்கொள்ளவும்

நீங்கள் கருத்தரிக்க திட்டமிட்டு இருந்தால் சம நிலையான உணவுடன், மல்டி வைட்டமின்கள் அல்லது கர்ப்ப காலத்துக்கு முந்தைய வைட்டமின்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஏதேனும் வைட்டமின் குறைபாடுகள் இருந்தால், வைட்டமின் B, நையாசின் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற மல்டிவைட்டமின்களை சேர்த்துக்கொள்வது இனப்பெருக்க அமைப்பிற்கு கூடுதல் ஊட்டச்சத்தை வழங்கும். இது கருத்தரிக்கும் வாய்ப்பை மேம்படுத்தும்.

கர்ப்ப காலத்துக்கு முந்தைய வைட்டமின்கள் கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். இது பிறக்கப் போகும் குழந்தையில் பிறவி குறைபாடுகள் ஏற்படாமல் தவிர்க்கும்.

மன அழுத்தத்தை குறைக்க நேரமெடுங்கள்

மனரீதியான மற்றும் உளவியல் ரீதியான நலன், ஆண் பெண் இருபாலரின் இனப்பெருக்க ஆரோக்கியத்தோடும் நெருங்கிய தொடர்புடையது. மன அழுத்தம், மனச்சோர்வு, விரக்தி மற்றும் பிற மனநிலை பிரச்சனைகள், அண்ட விடுப்பு மற்றும் மாதவிடாய் சுழற்சியை நேரடியாக பாதிக்கும்.

தியானம், யோகா மற்றும் அறிவாற்றல் நடத்தை சிகிச்சை முதலியன, மனநல சிக்கல்களை கையாள உதவும்.

போதிய ஓய்வும், நல்ல உறக்கமும் மன அழுத்தத்தை மேற்கொள்ள பயனுள்ளது.

இரவு நேரங்களில் வேலை செய்வதை தவிர்க்கவும். ஏனென்றால், இது பெண்களில் ஹார்மோன் உற்பத்தியை பாதிப்பதால் கருத்தரிப்பு வாய்ப்புகளும் பாதிக்கப்படும்.

கஃபைன் எடுத்துக்கொள்வதை குறைத்துக்கொள்ளவும்

FDA சொல்லியுள்ளபடி, ஒரு நாளைக்கு 400 mg ற்கு குறைவாய் கஃபைன் எடுத்துக்கொள்ளுவது, ஒரு ஆரோக்கியமான நபரில் எந்த ஒரு எதிர்மறையான பக்க விளைவையும் ஏற்படுத்தாது. ஆனாலும், கஃபைன் எடுத்துக்கொள்வதற்கும் அது ஒரு பெண்ணின் கருவுறுதலை பாதிப்பதற்குமான தொடர்பு முடிவில்லாதது.

பாதுகாப்பான பக்கத்தில் இருக்க, தினமும் 1-2 கப் காபி மட்டுமே எடுத்துக் கொள்ளவும்.

சுற்றுச்சூழல் நச்சுகளுக்கு வெளிப்படுவதை தவிர்க்கவும்

நீர், காற்று, மற்றும் உணவு போன்ற அடிப்படை மனிதத் தேவைகளிலும் சுற்றுச்சூழல் மாசுபடுத்திகள் மற்றும் வேதிப்பொருட்கள் இருப்பது, பல வகைகளில் கருவறுதலை பாதிக்கின்றது. இந்த நச்சுகளுக்கு வெளிப்படும் பெண்கள், அண்டவிடுப்பு கோளாறுகள், நாளமில்லா சுரபி கோளாறு போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இந்த நச்சுகள், வீட்டை சுத்தப்படுத்தும் பொருட்கள், அழகு சாதன பொருட்கள், போன்ற நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலும் காணப்படுகின்றன. இயற்கையான அல்லது ஒப்பிடும்போது குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்று வழிகளை பயன்படுத்தவும்.

கருவுறுதலை பாதிக்கக்கூடிய தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களுக்கு விலகி இருக்க முயற்சியுங்கள்.

மேலே பட்டியலிடப்பட்டுள்ள குறிப்புகள் கருவுறுதலை மேம்படுத்த உதவலாம். ஆனால் நீங்கள் கருத்தரிக்க முடியாவிட்டால் அதற்கு ஏதேனும் அடிப்படை கருவுறுதல் சிக்கல்களும் காரணமாக இருக்கலாம். உங்கள் கருவுறுதல் வாய்ப்புகளை அதிகரிக்க ஒரு கருவுறுதல் நிபுணரை ஆலோசியுங்கள்.

Write a Comment

BOOK A FREE CONSULTATION