Blog
Uncategorized

பெண்ணின் கருமுட்டை தரத்தை மேம்படுத்தும் 10 உணவுகள்

பெண்ணின் கருமுட்டை தரத்தை மேம்படுத்தும் 10 உணவுகள்

Author: Dr. Sai Manasa Darla, Consultant, Fertility Specialist &  Laparoscopic Surgeon

பெண் கருவுறுதலின் முக்கியமான குறிப்பான்களில் ஒன்று கருமுட்டை தரம் ஆகும். சீரான மாதவிடாய் சுழற்சிகள் மற்றும் கருவறுதல் செயல்முறை அல்லது கருத்தரிக்கும் திறன் ஆகியவை கருமுட்டையின் தரத்தை சார்ந்து இருக்கும்.

ஆனால் முதலில், கருமுட்டையின் தரம் என்றால் என்ன?

“கருமுட்டையின் தரம்” என்னும் சொல் கருமுட்டையானது மரபணு ரீதியாக சாதாரணமாக உள்ளதா அசாதாரணமாக உள்ளதா என்பதை விளக்குகிறது.

ஒரு தரமான அல்லது மரபணு ரீதியாக சாதாரணமான கருமுட்டையில் 23 குரோமோசோம்கள் (யூப்ளாய்டு) இருக்கும். குரோமோசோம் ரீதியாக அசாதாரணமாக உள்ள கருமுட்டையில் 23 ற்கும் குறைவான அல்லது அதிகமான குரோமோசோம்கள் (அனிப்ளாய்டு) இருக்கும். இது மோசமான கருமுட்டை தரத்திற்கு வழிவகுத்து, கருவுறுதல் நடைபெறும் போது மரபியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தரமான கருமுட்டையின் அறிகுறிகள் என்ன?

-சமநிலையான ஹார்மோன் நிலைகள்

-சீரான மாதவிடாய் சுழற்சிகள்

-மாதவிடாய் சுழற்சியின் போது கர்ப்பப்பை வாய் திரவத்திலும் அடிப்படை உடல் வெப்பநிலையிலும் மாற்றங்கள்

தரமற்ற கருமுட்டையின் அறிகுறிகள் என்ன?

தரமற்ற கருமுட்டை அறிகுறிகள் வயது மூப்புடன் தொடர்புடையது. ஒரு பெண்ணுக்கு வயது ஆக ஆக, கருப்பைகளில் உள்ள பெரும்பாலான கருமுட்டைகளில் மரபியல் கோளாறுகள் ஏற்படும்.

-கருவுறுதலில் சிக்கல் அல்லது மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுதல்

-மாதவிடாய் இல்லாமை அல்லது தள்ளிப்போதல்

-குறுகிய அல்லது மாறுபடும் மாதவிடாய் சுழற்சிகள்

-அதிகளவு மாதவிடாய் இரத்தப்போக்கு

-ஹார்மோன் சமநிலையின்மை – குறைவான ப்ரொஜெஸ்ட்ரோன் மற்றும் முல்லேரியன் எதிர்ப்பு ஹார்மோன் நிலைகள்

கருப்பையில் உள்ள கருமுட்டைகளை அதிகரிப்பது எப்படி?

பெண்ணின் ஆயுட்காலம் முழுதும் கருமுட்டைகள் உருவாகிக்கொண்டே இருக்கும் தன்மையில் அவள் பிறக்கிறாள். ஒரு பெண் பூப்பெய்தும் வரை இந்த கருமுட்டைகள் முற்றிலும் வளர்ச்சி அடையாமலும் முதிர்ச்சி அடையாமலும் இருக்கின்றன. எனவே, கருப்பையில் உள்ள கருமுட்டைகளை அதிகரிப்பது சாத்தியமல்ல. இருப்பினும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை கையாள்வதன் மூலம் கருமுட்டையின் தரத்தை மேம்படுத்த முடியும்.

கருமுட்டையின் தரத்தை உணவு பாதிக்குமா?

பெண்ணின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் உணவுகள் நேரடி தொடர்பில் இல்லாவிட்டாலும் ஒரு நல்ல சமநிலையான உணவு கருமுட்டையின் தரத்தையும், ஹார்மோன் நிலைகளையும், இரத்த ஓட்டத்தையும் பராமரிப்பதன் மூலம் பெண்களில் இனப்பெருக்க ஆற்றலையும் மேம்படுத்துகிறது.

 

கருமுட்டையின் தரத்தை மேம்படுத்த சிறந்த 10 உணவுகள்

1. பீன்ஸ் மற்றும் பருப்பு:

புரதங்கள், இரத்த சர்க்கரை அளவுகளை பராமரிக்கவும், செல்களை உருவாக்கவும் சரி செய்யவும் உதவுகிறது. பீன்ஸ் மற்றும் பல வகையான பருப்புகள், புரதங்கள், இரும்பு, வைட்டமின் B காம்ப்ளக்ஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாகும்.

2. விதைகள்:

எள் விதைகள், ஆளி விதைகள், பூசணி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் போன்ற விதைகள் நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் நிறைவுறாதவைகளின் சேர்க்கைகள் ஆகும். ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்ய விதை சுழற்சி முறை பயன்படுகிறது.

3. கொட்டைகள் மற்றும் உலர் பழங்கள்:

அக்ரூட், பாதாம், நிலக்கடலை, முந்திரி மற்றும் உலர் திராட்சை போன்ற கொட்டைகளும் உலர் பழங்களும் ஆரோக்கியமான கொழுப்புகள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் மற்றும் வைட்டமின்களின் நல்ல ஆதாரங்கள் ஆகும். பிரேசில் கொட்டைகள் போன்ற கொட்டைகள் செலேனியமின் நல்ல ஆதாரங்களாகும். செலேனியம், கருமுட்டைகளில் உள்ள மரபணு ரீதியான சேதங்களை சரி செய்ய உதவுகிறது. உலர் பழங்களில் உள்ள ஆக்சிஜனேற்ற தடுப்பான்கள், செல்களில் உள்ள ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

4. வெண்ணெய் பழங்கள்:

வெண்ணெய் பழங்கள், ஊட்டச்சத்துக்களாலும் ஆரோக்கியமான கொழுப்புகளாலும் நிறைந்த சிறந்த உணவுகளாகும். வெண்ணெய் பழங்கள், ஆரோக்கியமான இனப்பெருக்கத்திற்கு உதவி கருமுட்டைகளின் தரத்தை மேம்படுத்தும் நிறைவுறா கொழுப்புகளின் சிறந்த ஆதாரமாகும்.

5. பெர்ரி பழங்கள்:

ஸ்ட்ராபெரி, ராஸ்ப்பெரி, கிரான்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரிக்கள் போன்ற பெர்ரி பழங்கள் வலிமையான ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் ஆகும். இவற்றில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள், வைட்டமின் C மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளன. இவற்றில் உள்ள ஆக்சிஜனேற்ற தடுப்பான்கள் கருமுட்டைகளை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கின்றன.

6. இலவங்கப்பட்டை:

குறிப்பாக PCOS பாதித்த பெண்களுக்கு இது மற்றொரு சிறந்த உணவாகும். உங்கள் உணவில் இலவங்கப்பட்டையை சேர்ப்பது, இன்சுலின் தடுப்பை எதிர்த்து, கருப்பை செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

7. இஞ்சி:

இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு தன்மை மற்றும் ஜீரணத்தையும் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும் தன்மை, மாதவிடாயை சீராக்கவும் இனப்பெருக்க அமைப்பில் அழற்சியை குறைக்கவும் உதவுகிறது.

8. பச்சிலை காய்கறிகள்:

வைட்டமின்கள் A, B, C, மற்றும் E, இரும்பு, மற்றும் கால்சியம் ஆகியன கருமுட்டைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவைப்படும் சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் ஆகும். கீரை, புரொக்கோலி,  போன்ற இலை காய்கறிகள் இந்த தேவையான ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளன.

9. முழு தானியங்கள்:

நார்ச்சத்தின் குறைத்து மதிப்பிடப்படும் மறைந்துள்ள பொக்கிஷம் முழு தானியங்களாகும். இரத்த சர்க்கரை விரைவில் உயர்வதை தடுத்து, இரத்த சர்க்கரை அளவுகளை  நிலைப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவும் பலவகை ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது நார்ச்சத்து. இது பொதுவான ஆரோக்கியத்தையும் இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

10. பால் பொருட்கள்:

கால்சியம் மற்றும் புரோபயாட்டிக்குகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள, பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்கள் சிறந்த வழியாகும்.

 

Write a Comment

BOOK A FREE CONSULTATION