Blog
Enquire Now
Uncategorized

PCOS, BMI மற்றும் கருத்தரிப்புக்கு இடையேயான தொடர்பு

PCOS, BMI மற்றும் கருத்தரிப்புக்கு இடையேயான தொடர்பு

PCOS (பாலிசிஸ்டிக் கருப்பை நோய்குறி) 5ல் 1 பெண்ணுக்கு ஏற்படக்கூடிய மிகவும் பொதுவான பிரச்சனையாய் மாறிவிட்டது. இது வழக்கமாய் நாளமில்லா சுரபியில் ஏற்படும் கோளாறாகும். இது இறுதி மாதவிடாய்க்கு முந்தைய நிலையில் உள்ள 8-13% பெண்களை பாதிக்கிறது. சீரற்ற மாதவிடாய், உடலில் அதிகளவு முடி வளர்வது, முகப்பரு மற்றும் மலட்டுத்தன்மை ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய அதிகளவு ஆன்ட்ரோஜன் உருவாக்கம் மற்றும் கோளாறான கோனாடோட்ரோபின் சுரப்பு ஆகியவை PCOS இன் முக்கியமான இனப்பெருக்க விளைவுகள் ஆகும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், PCOS உடைய பெண்கள் பருமனாய் இருப்பர். இது ஒரு தீய வட்டம். PCOS உடைய 38% – 88% பெண்கள் அதிக எடையில்/ பருமனாய் இருப்பர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பருமன் கருத்தரிப்பு வாய்ப்பை குறைக்கும், கருச்சிதைவு ஆபத்தை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க முயலும் பெண்களில் கருத்தரிப்புகான வாய்ப்பு அதிகளவு கூடியிருப்பதாக ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.

கருத்தரிப்புக்கான வாய்ப்புடன் ஒருவரது BMI (உடல் நிறை குறியீட்டெண்) எப்படி நேரடி தொடர்புடையது என்பதையும், உடல் எடையைக் குறைப்பதால் கருத்தரிப்புக்கான வாய்ப்பு எப்படி அதிகரிக்கிறது என்பதையும் பார்ப்போம்.

BMI என்றால் என்ன:

ஒருவரது உயரத்துக்கும் எடைக்கும் இடையேயான தகவைப் பயன்படுத்தி, அவர் ஆரோக்கியமான எடையைக் கொண்டிருக்கிறாரா என அறிய BMI உதவுகிறது.

BMI அட்டவணை:

18.5 ற்கும் குறைவான BMI – குறைவான எடை

18.5 < 25 வரம்பில் உள்ள BMI – ஆரோக்கியமான எடை

25 < 30 வரம்பில் உள்ள BMI – அதிகமான எடை

30 அல்லது அதற்கு அதிகமான BMI – பருமன்

பருமன், மேலும் சில வகுப்புகளாய் பிரிக்கப்படுகிறது:

வகுப்பு 1: BMI 30 < 35

வகுப்பு 2: BMI 35 <40

வகுப்பு 3: BMI 40 மற்றும் 40 ற்கு மேல்

PCOS உடைய பெண்களில், அதிகளவு அடிப்படை BMI குறைவான கருத்தரிப்பு வாய்ப்புடன் தொடர்புடையதாய் இருக்கிறது. PCOS நோய் கண்டறியப்பட்ட ஒரு சாதாரண உடல் எடையுள்ள 27 வயது பெண்ணை குறிப்பாய் வைத்துக்கொண்டு, முதல் ஐந்து BMI வகைகளுக்கு PCOS நோய் கண்டறியப்பட்ட வெவ்வேறு வயதினரில் (18-45 வயது), கருத்தரிப்பு வாய்ப்பு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

PCOS நோய்கண்டறியப்பட்ட, பருமன் வகுப்பு II (BMI 35-39.9) உடைய 31 வயது பெண்ணின் கருத்தரிப்பு வாய்ப்பு, சாதாரண எடையுள்ள 27 வயது பெண்ணின் கருத்தரிப்பு வாய்ப்பை விட பாதியாய் இருக்கிறது. மேலும், இவரது கருத்தரிபு வாய்ப்பு, ஆய்வில் உள்ள சாதாரண எடையுள்ள 35 வயது பெண்ணின் கருத்தரிப்பு வாய்ப்புக்கு ஒத்திருக்கிறது.

BMI வகையின்படி PCOS கண்டறியப்பட்டவர்களில் வயதின் அடிப்படையில் கருத்தரிப்பு வாய்ப்பு

ஆதாரம்: பாலிசிஸ்டிக் கருப்பை நோய்குறி மற்றும் அதிக எடை அல்லது உடல் பருமன் உடைய பெண்களில், உடல் எடை குறியீட்டெண், எடை இழப்பு மற்றும் கருத்தரிப்பு வாய்ப்புக்கிடையிலான தொடர்பு: UK மனித இனப்பெருக்கம், தொகுதி.38, எண்.3, pp. 471–481, 2023 ல் ஒரு பின்னோக்கி கூட்டு ஆய்வு

எடை இழப்பு மற்றும் கருத்தரிப்புக்கிடையிலான தொடர்பு:

PCOS மற்றும் அதிக எடை/ உடல் பருமன் உடைய பெண்களின் முதல் சிகிச்சையாக, எடை பராமரிப்பு உட்பட்ட வாழ்க்கைமுறை மாற்றங்களை சர்வதேச வழிமுறைகள் பரிந்துரைக்கின்றன. சீரான எடையை பராமரிப்பது அல்லது எடை கூடுவதை விட, எடை இழப்புடனேயே அதிகமான கருத்தரிப்பு வாய்ப்பு தொடர்புடையதாய் இருக்கிறது. ஹார்மோன் அளவுகள், அண்டவிடுப்பு விகிதங்கள், கருமுட்டை ஆரோக்கியம், எண்டோமெட்ரியல் ஏற்புத்திறன், இன்சுலின் தடுப்பு மற்றும் பிற வளர்ச்சிதை மாற்ற அளவுருகளில், எடை இழப்பு முன்னேற்றத்தை ஏற்படுத்தி கருவுறுதல் விளைவுகளை மேம்படுத்துகிறது.

முக்கிய குறிப்புகள்:

1.PCOS உடைய பெண்களின் அதிகளவு BMI கருத்தரிப்பு வாய்ப்பைக் குறைக்கும்

2.சீரான எடையை பராமரிப்பது அல்லது எடை கூடுவதை விட, எடை இழப்புடனேயே அதிகமான கருத்தரிப்பு வாய்ப்பு தொடர்புடையதாய் இருக்கிறது.

3.PCOS கண்டறிதலின் பின் 5-15% எடை இழப்பு கருத்தரிப்பு வாய்ப்பை அதிகரிக்கும்.

4.BMI 45 ற்கு அதிகமாய் இருக்கும் பெண்களில் 10% ற்கும் குறைவான பெண்களே கருத்தரிக்க முடியும்.

5.35ற்கு அதிகமான BMI உடைய 31 வயதுள்ள (PCOS நோய்கண்டறியப்பட்ட) பெண்ணின் கருத்தரிப்பு வாய்ப்பு, சாதாரண எடையுள்ள 27 வயது பெண்ணின் கருத்தரிப்பு வாய்ப்பை விட பாதியாய் இருக்கிறது.

6.35ற்கு அதிகமான BMI உடைய 31 வயது பெண்ணின் கருத்தரிப்பு வாய்ப்பு PCOS நோய்கண்டறியப்பட்ட சாதாரண எடையுள்ள 35 வயது பெண்ணின் கருத்தரிப்பு வாய்ப்புக்கு ஒத்திருக்கிறது

7.BMI 40 அல்லது அதற்கு அதிகமாய் உள்ள பெண்களின் கருத்தரிப்பு வாய்ப்பு, அதே வயதில் சாதாரண எடையுள்ள பெண்களை விட 63% குறைவாய் இருக்கிறது.

8.PCOS கண்டறிதலின் பின் 5% எடை கூடுதல் கருத்தரிப்பு வாய்ப்பை சற்று குறைக்கும்.

முக்கிய குறிகாட்டிகள் கருத்தரிப்பு வாய்ப்பு
PCOS+ எடை அதிகரிப்பு குறைவு
PCOS + எடை இழப்பு அதிகம் 
PCOS + நிலையான எடை குறைவு

PCOS மற்றும் அதிக எடையுள்ள பெண்களுக்கான ஆரோக்கிய இலக்குகள்:

PCOS ஐ குணப்படுத்த முடியாது; நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். வாழ்க்கைமுறை மாற்றங்கள், நீங்கள் ஆரோக்கியமாய் இருக்கவும், கருத்தரிக்கவும் உதவுகிறது. சமநிலையான உணவுமுறை, எடை இழப்பு மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் பல கருத்தரிப்பு தொடர்பான சிக்கல்களை தவிர்க்கலாம். முனைப்புடன் இருந்து, உங்களை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கக்கூடிய சரியான ஒழுங்குமுறையை பின்பற்றுங்கள்.

1.நீங்கள் கருத்தரிக்க திட்டமிட்டால், ஆரோக்கியமான எடையைப் பெற முயற்சி செய்யுங்கள். எடை இழப்பு, உங்கள் மாதவிடாயை சீராக்கி, நீங்கள் கருத்தரிக்க உதவும்.

2.PCOS உடைய பெண்களில் இன்சுலின் தடுப்பு ஒரு பெரும் பிரச்சனையாய் இருக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க முயலுங்கள். சர்க்கரையை குறைத்துக்கொள்ளுங்கள்; அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனால் நீரிழிவு நோய் மற்றும் இருதய நோயின் ஆபத்து குறையும்.

3.உங்கள் கலோரிகளை எரியுங்கள்; உங்கள் அன்றாட வாழ்வில் வழக்கமாக உடற்பயிற்சி செய்யுங்கள்.  

தவிர்க்க வேண்டிய உணவுகள் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்
நிறைவுற்ற கொழுப்புகள் (பிஸ்கட், கேக்குகள், வெண்ணெய்) பீன்ஸ், கீரைகள்
சிவப்பு இறைச்சி பழுப்பு அரிசி, பார்லி
பொரித்த உணவுகள் கீரை, காலிஃபிளவர், தக்காளி
மதுபானங்கள் சால்மன் மற்றும் பிற ஒமெகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன்
சோடா முழு பழங்கள்

 

Write a Comment