PCOS உள்ள பெண்களுக்கு CAPA IVM கொண்டு சிகிச்சை – இந்தியாவின் முதல் CAPA IVM குழந்தையைப் பெறச் செய்த மருந்தில்லா IVF நெறிமுறை
ருமணமாகி 5 வருடங்கள் ஆகிய ஷிவா (35) மற்றும் ஷைலஜா (33) தம்பதியருக்கு மலட்டுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் பல OITI சைக்கிள் தோல்விகளுக்குப்பின் கடுமையான பிசிஓடியோடு ஒயாசிஸ் கருவுறுதல் மையத்தை அணுகினர். கணவன் மனைவி இருவருக்கும், வாரங்கலில் உள்ள ஒயாசிஸ் கருவுறுதல் மையத்தின் மருத்துவ தலைவர் மற்றும் கருவுறுதல் நிபுணராகிய, Dr Jalagam Kavya Rao, கருவுறுதல் சோதனையை நடத்தினார். ஆய்விற்குப் பிறகு, ஷைலஜாவிற்கு AMH 11.7 இருப்பதும், சீரற்ற மாதவிடாய் சுழற்சி இருப்பதும் கண்டறியப்பட்டது. அவரது கணவருக்கு விந்தணு எண்ணிக்கை சீராய் இருப்பதும், விந்தணு இயக்கம் சற்று குறைவாய் இருப்பதும் காணப்பட்டது. Dr Kavya அவர்களை முழுமையாய் ஆய்வு செய்தபின், முதற்கட்டமாக ஒரு IUI சுழற்சிக்கு திட்டமிட்டார். இந்த சிகிச்சையின்போது, கருமுட்டைகளைப் பிறப்பிக்கக் கூடிய நுண்ணறைகள் ஒன்றும் காணப்படாததால், Dr Kavya IVF சிகிச்சையை மேற்கொள்ள அவருக்கு அறிவுறுத்தினார். ஆனால் அந்த பெண்ணுக்கு, பல ஊசிகள் பற்றியும், மருந்துகள் …