Blog
Uncategorized

IVF ஷாட்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

IVF ஷாட்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

Author : Dr. D. Maheswari Consultant & Fertility Specialist

பெற்றோர்த்துவம் என்பது ஒரு அற்புதமான அனுபவமாகும். ஆனால் சில தம்பதியினருக்கு இது ஒரு கடினமான பயணமாக இருக்கலாம். அவர்கள் தங்கள் பெற்றோர்த்துவக் கனவை அடைய IVF சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். IVF என்பது மேம்பட்ட கருவுறுதல் சிகிச்சைகளில் ஒன்றாகும். இது கருவுறுதல் பிரச்சனைகள் உள்ள தம்பதியர், மலட்டு தன்மையை மேற்கொண்டு பெற்றோர்த்துவத்தை அடைய உதவுகிறது. ஆனாலும், IVF செயல்முறையையோ IVF சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஊசிகளையோ பற்றிய விழிப்புணர்வு பலருக்கு இல்லை. IVF ஊசிகளை பற்றிய பயத்தின் காரணமாகவும், அதைப் பற்றிய தவறான புரிதலின் காரணமாகவும் பலர் IVF ஐ தவிர்த்து விடுகின்றனர். ஆனால் IVF ஐ தேர்ந்தெடுக்கும் பெண்கள், IVF சிகிச்சையை எடுத்துக்கொள்வதற்கு முன்னர், IVF ஷாட்ஸின் வகைகளைப் பற்றியும் ஒட்டுமொத்த சிகிச்சையை பற்றியும் விவரமாக தெரிந்து கொள்வது அவசியம்.

IVF இல், கருமுட்டைகளும் விந்தணுக்களும் பெண்ணின் உடலுக்கு வெளியே கருவுறச் செய்யப்படுகின்றன. கருவுறுதலுக்குப் பின் உருவாகும் எம்ப்ரியோ மேற்கொண்டு வளர, பெண்ணின் கருப்பைக்குள் வைக்கப்படும்.

IVF ஷாட்ஸ் என்றால் என்ன?

IVF ஷாட்ஸ் என்பது, IVF சிகிச்சையின் போது பல்வேறு காரணங்களுக்காக வழங்கப்படும் ஹார்மோன்களாகும். FSH (நுண்ணறைகளை தூண்டும் ஹார்மோன்), லுட்டினைசிங் ஹார்மோன் (LH), ஹியூமன் கொரியானிக் கொனடாடிராப்பின் (hCG), கொனடாடிராப்பின் வெளியிடும் ஹார்மோன் (GnRH), போன்ற ஹார்மோன்கள் வழங்கப்படுகின்றன.

IVF ஷாட்டின் இடம் எது?

IVF ஷாட்டின் இடம் தோலின் அடியிலோ தசைக்குள்ளோ இருக்கலாம். தோலின் அடியில் போடப்படும் ஊசிகள் வயிற்றுப் பகுதியிலோ தொடையிலோ செலுத்தப்படும். தசைக்குள் செலுத்தப்படும் ஊசிகள் நேரடியாக தசையில் போடப்படும்.

பல்வேறு வகைகளான IVF ஊசிகள் செலுத்தப்படுவதற்கான நோக்கம்:

1. பல கருமுட்டைகளை உருவாக்குவதற்கு பெண்ணின் கருப்பைகளைத் தூண்ட

2. அண்டவிடுப்பை தடுக்க

3. கருமுட்டை முதிர்வடைதலை தூண்ட

4. எம்ப்ரியோ பரிமாற்றத்திற்கு கருப்பையை தயார் செய்ய

IVF இல் எத்தனை IVF ஊசிகள் செலுத்தப்படுகின்றன?

IVF ஊசிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நோயாளிக்கும் மாறுபடும். அனைவருக்கும் ஒரே அளவு பொருந்தாது. நோயாளியின் உடல் பதிலளிப்பதையும், அவரது உடல் நிலைமையையும், மற்றும் பிற காரணிகளையும் பொறுத்து IVF ஷாட்ஸ்களின் எண்ணிக்கையும் அளவும் மாறுபடும். வழக்கமாக, IVF ஷாட்ஸ் 10 நாட்களுக்கு கொடுக்கப்படும்

கருத்தரிப்புக்கான IVF ஷாட்ஸ் என்ன?

– ஹியூமன் மெனோபாஸல் கொனடாடிராபின்ஸ் (HMG)

– GnRH அகோனிஸ்ட்

– GnRH ஆண்டகோனிஸ்ட்

– நன்கு தூய்மையாக்கப்பட்ட HCG

– ரீகாம்பினென்ட் HCG (ஒவிட்ரேல்)

– நன்கு தூய்மையாக்கப்பட்ட FSH

– ரீகாம்பினென்ட் FSH

– ரீகாம்பினென்ட் LH

கருத்தரிப்புக்கான IVF ஷாட்ஸில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம்?

IVF சிகிச்சையானது விரக்தி, எதிர்பார்ப்பு, மற்றும் ஏமாற்றத்துடன் கூடிய கடினமான பயணமாக இருக்கலாம். இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் போது ஒருவர் தன் மனநிலையை தயார்படுத்திக் கொண்டு அமைதலாக இருக்க வேண்டும். IVF ஊசிகள் ஒருவரது எடையிலும் பசியின்மையிலும் கூட பாதிப்பை ஏற்படுத்தலாம். ஹார்மோன் ஊசிகளின் காரணமாக சில பெண்களில் மலச்சிக்கல் ஏற்படலாம். மேலும், சிலருக்கு OHSS (கருப்பை அதிகளவு தூண்டப்படுதல் நோய்குறி) ஏற்படலாம். இது ஹார்மோன் ஊசிகளின் அதிகபட்ச எதிர்வினையாகும். இதன் விளைவாக கருப்பைகள் வீங்கலாம்.

 

IVF Shots

 

IVF இன் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடலாம். பொதுவான சில பக்க விளைவுகளாவன:

– நிலையற்ற மனநிலை

– தலைவலி

– குமட்டல்

– வயிற்று வலி

– உடல் வெப்பமடைதல்

– தோல் சிவத்தல்

மேற்கண்ட அறிகுறிகள் நீண்ட நாட்களுக்கு தொடர்ந்தால், மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.

ஊசிகள் இல்லாமல் IVF செய்ய முடியுமா?

IVF என்று சொன்னாலே பெண்களுக்கு பயம் வந்துவிடும். அதில் பயன்படுத்தக்கூடிய ஊசியும், உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படக்கூடிய அதிர்ச்சியுமே இதன் காரணமாகும். PCOS, புற்றுநோய் மற்றும் பிற உடல் நல சிக்கல்களை உடைய பெண்களில் அதிகளவு ஊசிகளை செலுத்துவது கேடு விளைவிக்கும். கருமுட்டை முதிர்வடைதல் பிரச்சனைகள், தரோம்போபிலியா, PCOS, புற்றுநோய் மற்றும் எதிர்க்கும் கருப்பை நோய்குறி போன்ற பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு, CAPA IVM (கெப்பாசிட்டேஷன் இன்விட்ரோ மெச்சுரேஷன்) என்னும் ஒரு மேம்பட்ட கருவுறுதல் சிகிச்சை, ஒரு பாதுகாப்பான மாற்று வழியாகும். CAPA IVM இல் 2 முதல் 3 ஊசிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஏனென்றால், இதில் முதிர்வடைந்த கருமுட்டைகளுக்கு பதிலாக முதிர்வடையா கருமுட்டைகள் பெண்ணில் இருந்து சேகரிக்கப்படுகின்றன. இந்த முதிர்வடையா கருமுட்டைகளில் 2-படி முதிர்வடைதல் செயல்முறை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும். இது கிட்டத்தட்ட மருந்தில்லா செயல் முறையாகும். ஊசிகளைப் பற்றிய பயம் உள்ள பெண்களுக்கும், விலை குறைவான மற்றும் தீவிரம் குறைவான சிகிச்சையை பெற விரும்புபவர்களுக்கும், இது ஒரு பாதுகாப்பான சிகிச்சை அனுபவத்தை கொடுக்கும். CAPA IVM இல் OHSS அபாயம் இல்லை.

கருமுட்டையை பெறும் செயல்முறை வலி மிகுந்ததா?

வலி ஒவ்வொரு நபருக்கும் வேறுபடலாம். மயக்க மருந்து கொடுத்து கருமுட்டைகளை எடுப்பதால், அது பெரிய அசௌகரியங்களை ஏற்படுத்தாது. சில பெண்களில் மாதவிடாயின் போது இருக்கும் வலி போன்று ஏற்படலாம். வேறு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், உடனடியாக கருவறுதல் நிபுணரை தொடர்பு கொள்ளவும்.

IVF ஊசிகள் எப்படி வேலை செய்யும்?

படி 1: கருவுறுதல் மதிப்பீடு – கருவுறுதல் நிபுணரின் ஆலோசனையை பெறுவீர்கள். அதில் நீங்களும் உங்கள் துணையும் கருவுறுதல் மதிப்பீடு செய்யப்படுவீர்கள். அது இரத்தப் பரிசோதனைகள், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்கள், விந்தணு ஆய்வு, போன்றவையாக இருக்கலாம்

படி 2: பிரத்தியேக சிகிச்சை – அடுத்த ஆலோசனையில், உங்கள் உடல்நிலை, வயது, வாழ்க்கைமுறை, போன்றவற்றைப் பொறுத்து கருவுறுதல் நிபுணர் உங்களுக்காக ஒரு பிரத்தியேகமான சிகிச்சை முறையை உருவாக்கி, ஒட்டுமொத்த சிகிச்சை செயல்முறையையும் விளக்குவார்.

படி 3: கருப்பை தூண்டுதல் – மாதவிடாயின் இரண்டாவது நாளில் உங்களுக்கு IVF ஊசி போடப்பட்டு, கருமுட்டை உற்பத்திக்காக கருப்பைகள் தூண்டப்படும்.

படி 4: கண்காணிப்பு – IVF பயணத்தில் நீங்கள் சரியாக செல்கிறீர்களா என்பதை சரிபார்க்க, தொடர்ச்சியான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்கள் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். இது கருமுட்டைகளை சேகரிப்பதற்கான சரியான நேரத்தை கணிக்க உதவும்.

படி 5: ஊக்குவிப்பு ஷாட் – கருமுட்டைகள் முதிர்வடைவதை ஊக்குவிக்க உங்களுக்கு ஒரு ஊசி போடப்படும்

படி 6: கருமுட்டைகளை பெறுதல் – உங்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அல்ட்ரா சவுண்ட் வழிகாட்டுதலின்படி கருமுட்டைகள் சேகரிக்கப்படும்

படி 7: இன் விட்ரோ கருவுறுதல் – கருமுட்டைகளை கணவரின் விந்தணுக்களுடன் இணைய வைப்பதால் எம்ப்ரியோ உருவாகும்.

படி 8: எம்ப்ரியோ பரிமாற்றம்– தரமான எம்ப்ரியோ பெண்ணின் கருப்பைக்குள் வைக்கப்படும்

படி 9: கர்ப்ப பரிசோதனை– எம்ப்ரியோ பரிமாற்றத்திற்கு 2 வாரங்களுக்கு பின் கர்ப்ப பரிசோதனை செய்ய வேண்டும்

IVF பற்றி அடிக்கடி கேட்கப்படும் சில முக்கியமான கேள்விகள்

1. IVF சிகிச்சை அனைவருக்கும் ஒன்றா?

இல்லை. IVF சிகிச்சை, மருந்துகள், மற்றும் அளவு, ஒவ்வொரு நபருக்கும் அவரது வயது, ஆரோக்கியம், வாழ்க்கைமுறை, போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும்.

2. IVF இல் பாலினத்தை தேர்வு செய்ய முடியுமா?

இந்தியாவில் பாலின தேர்வு சட்டவிரோதமானது. எனவே, அது தடை செய்யப்பட்டுள்ளது.

3. உறைய வைக்கப்பட்ட எம்ப்ரியோ பரிமாற்றம் என்பது என்ன?

IVF சிகிச்சையில், எம்ப்ரியோக்களை உறைய வைத்து பிற்காலத்தில் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்துவது, உறைய வைக்கப்பட்ட எம்ப்ரியோ பரிமாற்றம் எனப்படும்.

4. IVF இல் ஒற்றை எம்ப்ரியோ பரிமாற்றம் என்பது என்ன?

IVF இல், பல எம்ப்ரியோக்களை செலுத்துவதற்கு பதிலாக, மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரே ஒரு எம்ப்ரியோவை மட்டும் தேர்ந்தெடுத்து பெண்ணின் கருப்பைக்குள் செலுத்துவர். ஒற்றை எம்ப்ரியோ பரிமாற்றம், கருச்சிதைவு மற்றும் பிற சிக்கல்களின் அபாயத்தை குறைக்கிறது.

Write a Comment

BOOK A FREE CONSULTATION