Blog
Enquire Now
Uncategorized

IVF வெற்றி விகிதத்தைப் புரிந்துகொள்வது

IVF வெற்றி விகிதத்தைப் புரிந்துகொள்வது

Author: Dr D Maheswari, Consultant & Fertility Specialist, Oasis Fertility.

தாமதமான பெற்றோர்த்துவம்,வாழ்க்கை முறை காரணிகள், நீரிழிவு, PCOS மற்றும் பிற ஹார்மோன் பிரச்சனைகளின் காரணமாக, இந்த நாட்களில் பல தம்பதிகள் IVF சிகிச்சைக்கு செல்கின்றனர். இருப்பினும், IVF வெற்றி விகிதங்களையும் வெற்றி விகிதங்களை நிர்ணயிக்கும் காரணிகளையும் அனைவரும் புரிந்துகொள்வதில்லை. ஒரு தம்பதியினர் IVF சிகிச்சையை எடுப்பதற்கு முன், IVF செயல்முறையைப் பற்றி மட்டுமல்ல, அந்த கருவுறுதல் மருத்துவமனை வழங்கும் வெற்றி விகிதத்தை பற்றியும் தம்பதிகள் அறிந்து கொள்வது அவசியம். கருமுட்டை மற்றும் விந்தணுவின் தரம், எம்ப்ரியோவின் தரம், IVF ஆய்வகத்தின் தரநிலைகள், மருத்துவர் மற்றும் கருவியலாளர்களின் நிபுணத்துவம், தம்பதியரின் வாழ்க்கை முறை போன்று வெற்றி விகிதங்களை பாதிக்கும் காரணிகள் நிறைய உள்ளன. IVF வெற்றி விகிதத்திற்கு பங்களிக்கும் ஒவ்வொரு காரணியையும் நாம் ஆராய்வோம்,

இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் செயல்முறை என்றால் என்ன?

ஆண் மலட்டுத்தன்மை, எண்டோமெட்ரியோசிஸ், குழாய் அடைப்பு, குறைந்த கருமுட்டை இருப்பு மற்றும் பல பிற கருவுறுதல் பிரச்சனைகளின் காரணமாக தம்பதியினர் இயற்கையாக கருத்தரிக்க முடியாவிட்டால், அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள உதவும் ஒரு துணை இனப்பெருக்க தொழில்நுட்பம் IVF/இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் ஆகும். இந்தச் செயல்பாட்டில், சில ஹார்மோன் ஊசிகள் மூலம், பெண்ணிடமிருந்து கருமுட்டைகள் எடுக்கப்பட்டு, ஆணின் விந்தணுக்களுடன் இணைக்கப்படுகின்றன, இதன் விளைவாக ஒரு எம்ப்ரியோ உருவாகிறது, இது மேலும் வளர பெண்ணின் கர்ப்பப்பைக்குள் பின்னர் மீண்டும் வைக்கப்படுகிறது.

IVF ஐ புதிய எம்ப்ரியோ பரிமாற்றமாகவோ உறைய வைக்கப்பட்ட எம்ப்ரியோ பரிமாற்றமாகவோ செய்யலாம். எம்ப்ரியோ உருவான 3 அல்லது 5 நாட்களுக்குள் பெண்ணின் கருப்பைக்கு எம்ப்ரியோ மாற்றப்படும் போது, அது புதிய எம்ப்ரியோ பரிமாற்றம் எனப்படும். எம்ப்ரியோவை உறைய வைத்து ஒரு மாதம் அல்லது அதற்குப் பிறகு பெண்ணின் கருப்பைக்கு மாற்றினால், அது உறைய வைக்கப்பட்ட எம்ப்ரியோ பரிமாற்றம் எனப்படும். புதிய எம்ப்ரியோ பரிமாற்றத்தை விட உறைய வைக்கப்பட்ட எம்ப்ரியோ பரிமாற்றம் சிறந்த வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது.

ஒரே ஒரு ஆரோக்கியமான எம்ப்ரியோ தேர்ந்தெடுக்கப்பட்டு மாற்றப்படும் ஒற்றை எம்ப்ரியோ பரிமாற்றம் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள், பல கருக்கள் உருவாவது மற்றும் தாய் குழந்தை இருவருக்கும் ஏற்படும் சிக்கல்கள் போன்ற ஆபத்தும் பயமும் இன்றி IVF மூலம் ஒரே ஒரு ஆரோக்கியமான குழந்தையை வெற்றிகரமாக கருத்தரித்து பெற உதவுகிறது. பல லட்சம் தம்பதிகள் IVF மூலம் பெற்றோர்த்துவ மகிழ்ச்சியைப் பெற்றுள்ளனர்.

IVF வெற்றி விகிதத்தை பாதிக்கும் காரணிகள்:

1. பெண்ணின் வயது:

IVF வெற்றி விகிதத்தை கணிப்பதில் பெண்ணின் வயது மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும், ஏனெனில் பெண்களின் கருவுறுதல் 32 வயதுக்குப் பிறகு குறைகிறது, 37 வயதுக்குப் பிறகு விரைவாகக் குறைகிறது. கருச்சிதைவு மற்றும் குழந்தைக்கு பிறவி கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் வண்ணம் கருமுட்டைகளின் தரமும் எண்ணிக்கையும் குறைந்துவிடும். தாயின் வயது மூப்பினால் IVF விளைவுகளும் எதிர்மறையாக பாதிக்கப்பட்டு கருச்சிதைவுகள் மற்றும் மகப்பேறு அபாயங்களுக்கு வழிவகுக்கிறது.

2. மலட்டுத்தன்மைக்கான காரணம்:

IVF சிகிச்சையின் வெற்றியைத் தீர்மானிப்பதில் மலட்டுத்தன்மைக்கான காரணமும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

3. பெண்களின் எடை:

அதிக எடையுள்ள/ பருமனான பெண்களில் IVF சிகிச்சை செயல்முறையின் தூண்டுதல் வேலை செய்வதில்லை. அவர்களிலிருந்து சில கருமுட்டைகளை மட்டுமே பெற முடியும். உடல் பருமன், கருத்தரித்தல் விகிதங்களை குறைத்து, கருச்சிதைவு விகிதங்களை அதிகரிக்கலாம். எடை இழப்பு IVF விளைவை மேம்படுத்த உதவும்.

4. கருமுட்டை, விந்தணு மற்றும் எம்ப்ரியோவின் தரம்:

ஒரு நேர்மறையான IVF விளைவுக்கு, கேமட்களின் தரமும், அதாவது கருமுட்டை மற்றும் விந்தணுவின் தரமும், கருமுட்டை மற்றும் விந்தணுக்களின் இணைப்பால் உருவாகும் எம்ப்ரியோவின் தரமும் மிகவும் முக்கியம். மைக்ரோஃப்ளூய்டிக்ஸ் போன்ற மேம்பட்ட விந்தணு தேர்வு முறைகள் உள்ளன, அவை IVF செயல்முறைக்கு சிறந்த தரமான விந்தணுவைத் தேர்ந்தெடுக்க உதவும். மோசமான கருமுட்டை தரம் வெற்றி விகிதத்தை பாதிக்கும், சில சந்தர்ப்பங்களில், IVF வெற்றி விகிதத்தை மேம்படுத்த கருமுட்டைகள் நன்கொடையாக பெறப்படலாம்.

35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அல்லது மரபணு கோளாறுகள் உள்ள தம்பதிகளில், PGT (கருப்பதித்தலுக்கு முந்தைய மரபணு சோதனை) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பரிமாற்றத்திற்கான சிறந்த எம்ப்ரியோவைத் தேர்ந்தெடுக்கலாம். இது கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

5. வாழ்க்கை முறை காரணிகள்:

புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் ஜங்க் உணவுகளை உட்கொள்வது IVF விளைவுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

6. எண்டோமெட்ரியல் தடிமன் மற்றும் IVF வெற்றி விகிதம்:

எண்டோமெட்ரியம்/கருப்பைப் புறணியின் தடிமன் வெற்றிகரமான கருத்தரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எண்டோமெட்ரியம் 7 mm க்கு குறைவாக இருந்தால், அது கருப்பதித்தல் மற்றும் கர்ப்ப விகிதத்தை குறைக்கக் கூடும்.

இந்தியாவில் IVF வெற்றி விகிதம் என்ன?

வயது, BMI, கருவுறாமைக்கான காரணம், வாழ்க்கை முறை போன்றவை நபருக்கு நபர் மாறுபடுவதால் ஒவ்வொரு தம்பதிக்கும் IVF இன் வெற்றி விகிதம் வேறுபடும். நவீன IVF ஆய்வகங்கள், நிபுணத்துவம் வாய்ந்த கருவுறுதல் நிபுணர்கள் மற்றும் கருவியலாளர்களைக் கொண்டுள்ளதால் இந்தியாவில் IVF வெற்றி விகிதம் ஒயாசிஸ் கருவுறுதல் மையத்தில் 69% ஆகும்.

 

 

வயது அடிப்படையில் IVF வெற்றி விகிதம்:

IVF சிகிச்சை செயல்முறையின் விளைவை வயது எதிர்மறையாக பாதிக்கிறது. ஒயாசிஸ் கருவுறுதல் மையத்தில், 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, IVF வெற்றி விகிதம் 60% க்கும் அதிகமாக உள்ளது, அதே சமயம் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, வெற்றி விகிதம் 50% ஆகும்.

IVF சிகிச்சை செயல்முறை எடுத்துக்கொள்வதற்கு முன் தேவைப்படும் வாழ்க்கை முறை மாற்றங்கள்:

– எடை மேலாண்மை:

எடை குறைப்பு IVF வெற்றி விகிதத்தை மேம்படுத்த உதவும். IVF எடுப்பதற்கு முன், உங்கள் BMI ஐ அறிந்து, எடை இழப்பில் கவனம் செலுத்தத் தொடங்குங்கள்.

– ஆரோக்கியமான உணவு:

ஆரோக்கியமான உணவுமுறையை கையாள்வது வெற்றிகரமான கருத்தரிப்பை அடைவதற்கு மிகவும் உதவும்.

– உடற்பயிற்சி:

ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சிறந்த IVF வெற்றி விகிதத்திற்கு உதவவும் வழக்கமான உடற்பயிற்சி மிகவும் அவசியம்.

– மன அழுத்தத்தை நிர்வகித்தல்:

மன அழுத்தம் மாதவிடாய் சுழற்சியை பாதித்து, மோசமான IVF விளைவுகளுக்கும் வழிவகுக்கலாம். நீங்கள் IVF எடுக்க முடிவு செய்தவுடன், நீங்கள் அமைதியான மற்றும் மன அழுத்தமில்லாத மனதைக் கொண்டிருக்க வேண்டும். கவலை, பயம் அல்லது மனச்சோர்வு ஆகியவை கர்ப்பத்தின் வாய்ப்பைக் குறைக்கலாம்.

இயற்கை வழிகள் மூலமாகவோ அல்லது IVF மூலமாகவோ எப்படியானாலும் பெற்றோர்த்துவம் என்பது ஒரு அற்புதமான பயணம். இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷேன்

செயல்முறை பற்றிய தெளிவை, நீங்கள் IVF சிகிச்சை மேற்கொள்வதற்கு முன் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது. அது மட்டுமின்றி, நேர்மறையான மனநிலையும், யதார்த்தமான எதிர்பார்ப்புகளும் இருந்தால், எந்த தொந்தரவும் இல்லாமல் சிகிச்சை முறையை மேற்கொள்ள உங்களுக்கு உதவியாக இருக்கும். வாழ்க்கை முறை காரணிகள் IVF வெற்றி விகிதத்தில் பெரிதளவு தாக்கத்தை ஏற்படுத்தும், புகைபிடிப்பதை விட்டுவிடுதல், மது அருந்துவதைக் குறைத்தல் மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைப்பது மிகவும் முக்கியம். இனிய பெற்றோர்த்துவத்தை அடையுங்கள்! உங்கள் கவலைகளை விட்டுவிட்டு, உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தால், நம்பிக்கையுடன் IVF க்குச் செல்லுங்கள்!

Write a Comment